(Reading time: 12 - 24 minutes)

யாரு? பழைய படங்களில் வில்லனா நடிச்சாரே!!! அவரா?? உங்க ஆளு??!!! ”, என்று பல்பு கொடுக்க...

நொந்து போன முகுந்த்,

‘இதை எங்கிருந்து பிடிச்ச’, என்ற ரீதியில் சசியைப் பார்க்க,

அவளோ இவன் முகம் போன போக்கில் சிரித்து விட..

“உங்க ஆளு செந்தாமரையை விட கார்ஜியஸ் தான்!!”, என்று அஞ்சனா சொல்ல,

“வேண்டாம் வலிக்குது!!”, என்ற ரீதியில் கையெடுத்து கும்பிட்டான் முகுந்த்.

அவன் ‘என் ஆளு’ என்று உரிமையாக அழைக்கும் பொழுதே சசியின் காதலன் என்று புரிந்தது அஞ்சனாவிற்கு! இருவரையும் பார்த்தவளுக்கு காதலில் மீதிருந்த ஆர்வத்தை மேலும் பெருக்கியது!

‘அந்த பரணி நட்சத்திரம், மேஷ ராசி நேயரை சீக்கிரம் கண்ல காட்டு பெல்லி பாய்..’, ரகசிய கோரிக்கை வைத்துக் கொண்டிருக்க..

சசி முகுந்த்திடம்,

“முகுந்த், நீ அஞ்சுவை ஹச். ஆர்கிட்ட கூட்டிகிட்டு போ! நான் வந்துடுறேன்”, என்று  சொல்ல..

“சரி சீக்கிரமா வா! இப்போ மிஸ் பண்ணா மறுபடியும் போய் டைம் கேட்டு அவன்கிட்ட நிக்க முடியாது!”, என்று அவசரமாக பதிலளித்து விட்டு முகுந்த் செல்ல..

அதைக் கேட்ட சசியின் மனம் கனத்தது. முகுந்த் டெலிவரி மானேஜராக இருக்கும் ப்ராஜெக்ட்டில் சசியின் பங்கு மிக அவசியம். ப்ராஜெக்ட் முக்கிய கட்டத்தில் இருக்கும் நேரம் பார்த்து, திடுதிப்பென்று அவளை ஆர்யமன் ப்ராஜெக்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று CEO கட்டளையிட்டிருந்தார்..

‘இந்த ஆர்யமன் எனக்கு ப்ரஷர் கொடுக்க வேண்டும்னே செய்திருக்கான் சசி! உன்னை மாதிரி ஒரு ரிசோர்ஸ் கிடைக்கிறது எவ்வளோ கஷ்டம்! ஒரு மாசம் டைம் கேட்டதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான்’, புலம்பிய முகுந்த்தை நினைத்து வருந்தினாள்.

ஓய்வறையில் தனது சேலையை சுத்தம் செய்து விட்டு முகுந்த் கேபினிற்கு வந்தவள் அவன் உடையை இப்பொழுது தான் கவனித்தவளாய்,

“ஹே.. செமையா இருக்கடா வேஷ்டில! நீ தான் இந்த எத்தினிக் டே அழகிய தமிழ் மகன் டைட்டில் வின்னராகப் போற பாரேன்!”,

என்றாள்! அதிலும் ஆர்யமனிடம் தோற்க போகிறான் என்பது அவளுக்கு தெரியவில்லை!!

“இதை அந்த பொண்ணு முன்னாடி சொல்லியிருந்தா வெயிட்டா இருந்திருக்கும்ல!”, என்று அழுத்துக் கொள்ள..

“ஹூம்க்கும்.. ஏற்கனவே வாங்கின பல்பு பத்தலை... இதை மட்டும் சொல்லியிருந்தா உன்னை ராமராஜனோ இல்லை ராஜ்கிரண்னோ சொல்லியிருப்பா!”, என்று சசி சொல்ல,

சிரித்தவன் பின் சுதாரிப்பாய்,

“சரி! சரி! டைம் இல்லை! சீக்கிரமா நாலேட்ஜ் ட்ரான்ஸ்பரை முடிச்சிட்டு கிளம்பு!”, என்று அவன் அவசரப் படுத்த,

“ப்ச்.. அந்த ஆர்யமன்கிட்ட வேலை பார்க்கணும்ன்னு நினைச்சாலே எரிச்சலா வருது! நம்ம சி.இ.ஓ.கிட்ட இன்னொரு முறை பேசிப் பார்த்தியா?”, என்று வருத்தத்தோடு சசி கேட்க..

“ஆர்யமன் என்ன கேட்டாலும் செய்து தர ஹர்ஷவர்தன் இன்ஸ்ரக்ட் பண்ணியிருக்கிறப்போ சி.இ.ஓ. என்ன செய்ய முடியும்? கார்னர் ஸ்டோன் ப்ராஜெக்ட் மேல ஹர்ஷ்க்கு உள்ள அட்டாச்மெண்ட் ஆர்யமன் காட்டில் மழை”

இரண்டு வருடத்திற்கு முன்பு மேக்ஸ் சாஃப்ட் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் ஹர்ஷவர்தனின் கம்பெனியை வாங்க முடிவு செய்தது நிர்வாகம்!

ஹர்ஷவர்தனின் “இனிட்” கம்பெனியை மேக்ஸ் சாஃப்ட்டோடு இணைத்த பொழுது... “இனிட்’டில் ஓடிய ஒரே ப்ராஜெக்ட் கார்னர் ஸ்டோன்! அந்த டீம்மில் இருந்த பத்து பேரில் ஒருவனாக வந்தவன் ஆர்யமன்!

சம்பளம் போடுவதே தட்டு பாடாகும் சமயத்தில் புது கம்பெனியை இணைப்பது பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை.. மேக்ஸ் சாஃப்ட்டின் நிலை அதள பாதாளத்திற்கு போகப் போகிறது என்று தான் பேச்சாக இருந்தது!

அதற்கு நேர் மாறாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்யமனும், முகுந்த்தும் கையாண்ட ப்ராஜெக்ட்கள் லாபத்தை ஈட்ட.... மேக்ஸ் சாஃப்ட் மீண்டும் தழைத்ததாலும், இது முகுந்த்திற்கும், ஆர்யமனுக்கும் இடையே கடும் போட்டியை உருவாக்கி விட்டது!

ஹர்ஷவர்தனின் முடிவின் மூலம் கிடைத்த வாய்ப்பில் தன்னை பலி வாங்குகிறான் என்பதை தான் முகுந்த் சொல்லாமல் சொன்னான்..

இதை கேட்ட சசி மேலும் பொருமினாள்! ‘அதுக்காக இப்படியா கண் மூடித்தனமா ஒருத்தனுக்கு அதிகாரம் கொடுக்கிறது! எடுத்த எடுப்பிலே நல்லா போய்கிட்டு இருக்கிற முகுந்த் ப்ராஜெக்ட்ல கையை வைக்கிறான்!’

முகுந்த்திற்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து முடித்து விட்டு, துளி கூட விருப்பமின்றி அந்த கார்னர் ஸ்டோன் டீம் இருக்கும் அறைக்குள் சசி நுழையும் பொழுது தான்.. அஞ்சனாவை ஆர்யமன் கடிந்து பேசிக் கொண்டிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.