(Reading time: 12 - 24 minutes)

 

ட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்.. ஜஸ்ட் ஷட் அப்!’, என்றவனின் வார்த்தைகளும்..

“ஷட் ஆகாம இருக்கிறது தான் அஞ்சனா பிஸ்னஸ்”, என்ற அஞ்சனாவின் வார்த்தைகளும் இவள் காதில் விழ.. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சசியை கொஞ்சமே ஆற்றியது... அஞ்சனாவும், அஞ்சனாவின் வார்த்தைகளும்...

பொதுவாக அவனது டீம்மில் எல்லாருக்கும் அவன் மீது நல்ல மதிப்பு இருக்கும்! எல்லாரையும் தனக்கு சாதமாக்கி கொள்பவன் என்பதை சசியும் அறிந்து வைத்திருந்தாள். அப்படி இருக்கும் சமயத்தில், அஞ்சனா தன் பேச்சால் அவனை மடக்கியது இவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

‘செம பாயின்ட்ம்மா!!!’, மனதார மெச்சிய சசியை ஆர்யமன் பார்த்து விட, இதுவரை இறுகி இருந்தவன் சற்றே தளர்ந்து,

“வெல்கம் அபோர்ட் சசி”, என்று சத்தமாக வரவேற்க.. அதற்குள் அவளை கவனித்து விட்ட அஞ்சனா துள்ளிக் குதிக்காத குறையாக அவளருகில் சென்று கை குலுக்க... அதே அளவு மகிழ்ச்சியை சசியும் வெளிப்படுத்தினாள்.

அப்பொழுது ஆர்யமனின் இன்டர்காம் சிணுங்கியது..

“சசி நீங்க செல்ஃப் இன்ட்ரோ கொடுங்க. வந்துடுறேன்...”, என்று வேகமாக சொல்லி செல்ல.. அவளோ, அதை கண்டு கொள்ளாமல்  அஞ்சனாவுடன் கதையடித்த படி நின்றாள் அவன் வரும் வரை..

இவன் இன்டர்காம்மில் பேசி விட்டு திரும்பியதும், ட்ரையினிங் கோ ஆர்டினேட்டர் பிஜூ வை அழைத்து அஞ்சனாவிற்கு பயிற்சி ஆரம்பிக்குமாறு சொல்ல,

“டீ வேணும்ன்னு கேட்டா ட்ரையினிங் போக சொல்றீங்க? நோ வே!!”, என்று அவள் அடம்பிடிக்க...

“டீ குடிச்சிகிட்டே ட்ரையினிங் எடுத்துக்கோங்க! நோ இஸ்யூஸ்!”, என்று அவளை அனுப்பி வைத்து விட்டு, சசியிடம் திரும்பியவன்,

“ரோல்ஸ் அன்ட் ரெஸ்பான்ஸ்ஸிபிலிட்டீஸ் பத்தி பேசணும்! வாங்க”, என்று அவளை அருகிலிருந்த தனியறைக்கு அழைத்து சென்றான்.

“இத்தனை வருஷம் இருந்த டீம் விட்டு வர்றது எரிச்சலா இருக்கலாம்! அந்த டிசிஷன் எடுத்த என் மேல கோபம் கூட இருக்கலாம்! தப்பில்லை!”

“அதுக்காக அதை டீம்கிட்டயோ.. வேலையிலோ காட்டாதீங்க! உங்க மதிப்பு தான் குறையும்!”

என்று சொல்ல..

‘நான் செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கலைன்னு குத்துறான்’,

என்று சினந்த சசி ஏதோ சொல்ல வர கையமர்த்தியவன்..

“உங்க தாட்ஸ்ஸ கேட்க இது ஆர்கியூமென்ட்டோ.. அட்வைஸ்ஸோ கிடையாது.. “

“இட்ஸ் எ வார்னிங்!” லெட்ஸ் மூவ் ஆன்”

அவன் வார்த்தைகளை விட கண்டிப்புடன் அதை சொன்ன விதம் அவளை பேச விடாது முடக்க.. இவன் மேலே பேச ஆரம்பித்தான்..

“வெல்கம் டு கார்னர் ஸ்டோன்! உங்க ரோல் இந்த ப்ராஜெக்ட்ல டெக்னிகல் ஆர்கிடெக்ட்!”, என்றான் நிதானமாக...

அதைக் கேட்டு அதிர்ந்த சசி..

“என் டேசிக்னேஷன் ப்ராஜெக்ட் மேனேஜர்!! ”, என்றாள் கோபத்துடன்!

இவள் சீக்கிரம் உணர்ச்சி வசப்படும் ரகம்! மனிதர்களை கையாளும் பக்குவம் இன்னும் அவளுக்கு வரவில்லை என்று கணக்கிட்டிருந்தான்.. அதை நிரூபணம் செய்வது போல அவள் செயல் இருக்க... பலவீனத்தை நேரடியாக சொன்னால் இன்னும் உணர்ச்சி வசப்படுவாள் என்பது புரிந்தவனாய்,

“நல்லா அனலைஸ் செய்து தான் இந்த முடிவெடுத்து இருக்கேன்! உங்களோட பலம் மற்றும் இன்ட்ரஸ்ட் டெக்னிகல் விஷயங்களை ஹேன்ட்டில் செய்றது! கேரியர் க்ராஃப் மாறினாலும்.. உங்க திறமைக்கு ஏத்த வேலை இது! நல்ல பேக்கேஜ் கிடைக்கவும் ஏற்பாடு செய்றேன்!”, என்று இவன் அடுக்கி கொண்டே போக...

“காசை காட்டி என் என்னோட கேரியர் க்ராஃப்பையே  மாத்த பார்க்கிறீங்க!!!”, என்று கேட்டாள் ஆத்திரத்துடன்.

“ஒரு எக்ஸலன்ட் டெக்னிக்கல் ஆர்கிடெக்ட்க்கு மார்க்கெட் உள்ள சேலரி கிடைக்கணும்ன்னு நினைக்கிறேன்!!”

“ஐ எம் நாட் இன்ட்ரஸ்ட்டட்!“, என்று அவள் முகத்தில் அடிப்பது போல சொல்ல..

கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொன்னால் வேலைக்கு ஆகாது! என்று முடிவெடுத்தனாக,

“இது கஷ்டமான டெக்னிகல் வேலை! ஏற்கனவே இரண்டு பேர் ட்ரை செய்து முடியலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க ஸ்மார்ட்ன்னு உங்ககிட்ட கொடுக்கலாம்னு பார்த்தா... நீங்க அதை விட ஸ்மார்ட்டா ட்ரை பண்ணாமலே கழண்டுக்க பார்க்குறீங்க”,

‘இவனுக்கு என்னை பத்தி என்ன தெரியும்? கழண்டுக்க பார்க்கிறேன்னு  குத்தலா பேசுறான்’, என்ற எரிச்சல் ஒரு புறம் இருந்தாலும்  ‘அப்படி என்ன மத்தவங்களால முடியாத வேலையா இருக்கும்’ என்ற அவளுக்கு இயல்பாக இருக்கும் ஆர்வமும் தலை தூக்க...

சசியின் உடல் மொழியை குறிப்பெடுத்தவாறு இவன் மேலே பேச ஆரம்பித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.