(Reading time: 12 - 24 minutes)

 

சங்களாலே முடியாத வேலையை ஒரு பொண்ணாலே முடியாதுன்னு நினைச்சிருப்பீங்க! லேட் நைட் வீட்டுக்கு போறது.. வீக்கென்ட்ல வேலை பார்க்கிறது.. பின்னாலே கல்யாணம், குழந்தை குட்டின்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் வரும் பொழுது இன்னும் சிக்கல்..“ என்றவன் தொனியில் இருந்த நக்கல்,

சசியின் பெண்ணியக் கொள்கையை பெரிதாக தாக்க.. வெகுண்ட சசி,

“அதென்ன பசங்க.. பொண்ணுங்கன்னு வித்தியாசம் பாக்கிறீங்க.. ஈக்வல் ஆப்ச்சுனிட்டி எம்பளாயர் இந்த கம்பெனி! பொண்ணுங்களால முடிய போய் தான்  வேலை கொடுக்கிறாங்க”

‘அட, இந்த எண்ணெய் சட்டியை இன்னும் கொஞ்சம் கொதிக்க வைச்சா நினைச்ச காரியம் தானா நடக்கும்’, என்று  மோனாலிசாவே பொறாமை படும் சிக்கன புன்னகையுடன்,

“அப்படி நினைச்சு தான் வேலை கொடுக்கிறோம்! நீங்க உள்ள இறங்கி கோட் அடிக்க பயந்துகிட்டு, ஈஸியா மத்தவங்களை வேலை வாங்குற வேலையை பார்த்துட்டு தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறீங்க!”,

கடமை உணர்ச்சியில் கையை வைத்தால் பொங்கி விடுவாள் என்று சீண்டி விடுகிறான் என்பதை  அறியவில்லை அவள்..

“அப்படி நான் சொன்னேன்னா?”, கொதித்தாள் சசி.

“இதை சொல்லணுமா???”, இளக்காரமாக கேட்டவன்,

“நம்ம ஆபிஸ்லே உள்ள டீம் எதுலயும்  டெக்னிகல் ஆர்கிடெக்ட்டா பொண்ணுங்க இல்லைன்னா அது தான் காரணமா இருக்க முடியும்! மூணே மூணு மாசம்! இந்த பொறுப்பை கையில் எடுத்து செய்து காட்டுற தைரியம் உங்களுக்கு இருக்கா?”, என்று இவன் சவால் விட..

“இன் ஜஸ்ட் த்ரீ மன்த்ஸ் ஐ வில் ப்ரூவ் இட்!”, சவால் விட்டாள் இவளும்..

இவன் எதிர்பார்த்த காரியம் நடந்து விட்டது என்றாலும்.... பிடித்தம் இல்லாமல் சவாலுக்காக அந்த வேலையை அவள் செய்வதில் விருப்பமில்லை இவனுக்கு.

‘It is my challenge to make you love this team and job’

தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்..

சசியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது.. டிரையினிங் கோ ஆர்டினேட்டர் பிஜூவின் சேட் மெசேஜ் அவன் கணினி திரையில் ஒளிர்ந்தது.

“உங்ககிட்ட பேசணும்”, என்று அவன் செய்தி அனுப்பிய பொழுதே, ‘இந்த காஞ்சனா என்னத்தை செய்து வைச்சிருக்கா!’, என்ற எண்ணம் தானாக வந்தது அவன் மனதில்..

சசிக்கு சில வேலைகள் கொடுத்து அனுப்பி விட்டு, பிஜூவிடம் என்ன பிரச்சனை என்று சேட்டில் கேட்க..

“அஞ்சனா ட்ரக்ஸ் யூஸ் பண்றாங்க!”, என்று பெரிய குண்டை தூக்கி போட்டான் அவன்!

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.