(Reading time: 16 - 32 minutes)

ப்படி என்ன விஷயம்….? என் டைமை வேஸ்ட் செய்யாதீங்க…..” யாரிடமோ கேட்டான் அவன் மொபைலில். குரலில் எரிச்சல் இருந்தது.

“………………”

“ஓ அவளே டிவோர்ஸ் அப்ளை செய்றான்னா எனக்கு என்ன?”

“………………………”

 “இங்க லாயர் நீங்க தானே….இதயும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்க….”

“………………………”

“டீடெய்ல்ஸா…. வாங்க வந்து வாங்கிக்கோங்க…”

“………………………….”

“கால் பண்ணிட்டு வாங்க….. இங்க தான் இருப்பேன்….”

அடுத்து அவன் இணைப்பை துண்டித்துவிட்டு கட்டிடத்தின் வாசல் நோக்கி வருவது தெரிகிறது….

எது எப்படியோ இந்த உரையாடலை கேட்க பிடிக்கவில்லை இவளுக்கு. யாருக்கு டிவோர்ஸ் என தெரியவில்லை தான்…..ஸ்டில் டிவோர்ஸ்னா இவனுக்கு இவ்வளவு சாதாரணமா இருக்குது…..

அவளே செய்தா எனக்கென்னவா? அப்படின்னா அந்த பொண்ணு இவனுக்கு தெரிஞ்ச பொண்ணுனு தானே அர்த்தம்…. தெரிஞ்ச பொண்ணு மேரேஜ் பிரேக் ஆகுதுன்னு கூப்ட்டு சொல்றாங்க, இவனுக்கு அது விஷயமாவே படலை…..

இவன்ட்ட இதைப் பத்தி பேசனும்…. இந்த மேரேஜை சேவ் பண்ண, செய்ய முடிஞ்சதை செய்ய சொல்லனும்… நினைத்தபடி வந்தவளுக்கு இவளது செக்யூரிடி கார்ட் இதற்குள் இவளைத் தேடி இங்கேயே வந்துவிட்டது தெரியவும் சத்தமின்றி லிஃப்டை நோக்கிப் போனாள்.

ட்ரெய்னிங் ஹாலைவிட்டு வெளியில் வரவும் காரிடாரில் லிஃப்ட் அருகில் அவன் நிற்பது தெரிகிறது இவளுக்கு.

இந்த டிவோர்ஸ் விஷயம் சற்று உறுத்தினாலும்…..அவனைப் பார்க்கவும் உற்சாக அருவி ஒன்று உள்ளே ஒலியின்றி கொட்டுவதை தடையின்றி இவள் அனுபவிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அதோடு தடக் தடக் டம் டம்….என்ன சொல்வான்? என்னவெல்லாம் சொல்வான்? எப்படி சொல்வான்?

முதலில் அவன் இவளைப் பார்க்கவில்லை எனினும்…இவள் பார்வை உணர்ந்து திரும்பிப் பார்த்தவன் முகத்தில் சன் லைட் புன்னகை + ஆச்சர்யம்… “ஹேய் இங்க என்ன செய்துட்டு இருக்க? இந்நேரம் அங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பன்னு நினச்சேன்?”

“திரவியாவைப் பார்த்துட்டு வரலாம்னு நினச்சேன்…” சின்ன புன்னகையுடன் இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக் கொள்ளும் அனைத்து முயற்சிகளோடும் இவள்….

“யாரு உங்க அண்ணியா…?”

‘இத இவன் கெஸ் பண்ணிட்டானா?’ இன்னுமாய் விழி மலர்த்தி அருகில் வந்துவிட்டதால் சற்று தலை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள். ஆச்சர்யம், பாராட்டு, மகிழ்ச்சி அதோடு காதலும் இருந்தது அப்பார்வையில்…

அதோடு அவன் அருகில் செல்லவும் வழக்கமாய் அவன் அருகாமையில் இவள் தன் மீது உணரும் அவனது ஆளுகை….முன்பு டிஃபென்சிவ் ஃபீல் வரும் இவளுள்…..இப்போது பாதுகாப்பு உணர்வு பரவுவதை உணர்ந்தாள். அரையடி தள்ளி நின்றாலும் அருகாமை சுகம் தான்.

அவனைப் போலவே லிஃப்டை நோக்கி திரும்பி நின்று கொண்டாள். அவனோ இவள் புறமாய் சில மில்லிமீட்டர் தலை சாய்த்து “க்யூட்டிப் பை…. இன்னைக்கு எனக்கு தான் பெர்த் டே…..நீ ஏன் இவ்ளவு அழகா இருக்க?” என்றான் மிக சிறு குரலில்.. குறும்பு சிரிப்பை அவன் உதடை கடித்து அடக்கி இருப்பது பக்கவாட்டு பார்வையில் இவளுக்கு தெரிகிறது.

என்ன சொல்ல எப்படி ரியாக்ட் செய்ய என்றே இவளுக்குத் தெரியவில்லை…. அவன் பெர்த் டே என்பதில் ஒரு புறம் படு சந்தோஷமாக இருக்கிறது என்றால், அவன் அழகு பற்றிய காம்ப்ளிமென்டில் அதுவாக  சிவக்கிறது கன்னம்….க்யூட்டி பையில் சிணுங்குகிறது உள்ளம்…. ஆரம்பமே அறுபதடி பாய்றானே….என்றது குணம்…

கூடவே அச்சோ பெர்த்டேன்னு தெரியாம போச்சே….. இப்ப என்ன செய்ய? என்ன கிஃப்ட் கொடுக்க?..... என ஓடுகிறது மனம். அதே நேரம் லிஃப்ட் வந்து திறக்க உள்ளே அவளோடு ஏறியவன்….

“இந்த நிமிஷம் நீ என் கூட இருக்கல்ல அது போதும்…அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச…. தேவையான… கிஃப்ட்” அவன் உணர்ந்து சொல்கிறான் என இவளால் முழு ஆழத்திற்கும் உணர முடிகின்றது…. ஏனோ இவளுக்குள் ஒரு தாய்மை உணர்வு…. காதல் ஒரு சுய யுத்தம்…எந்நேரம் எந்த உணர்வை ஆயுதமாக்கி தன்னோரை தாக்கும் என யாருக்குத் தெரியும்…

அவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருப்பதே…. “மனு எனக்கு நம்ம கல்ச்சர் ஓரளவு நல்லாவே தெரியும் தான்….ஸ்டில் நான் யூ எஸ் ப்ராட் அப்… எப்பயாவது தெரியாம லிமிட்டை க்ராஸ் பண்ணேனா….நீதான் சொல்லி ஸ்டாப் பண்ணனும்….” என்ற அவனது வார்த்தை உணர்ந்து மூச்சடைத்த போதுதான் புரிந்தது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.