(Reading time: 16 - 32 minutes)

டேய் ஒரு நிமிஷத்துல எங்க இருந்து எங்க போற நீ?’ மனோவின் மனம்.

“உன் பேரண்ட்ஸ்ட்ட பேசிடுறது தான் சரின்னு பட்டுது……அதான் ஹாஸ்பிட்டல்ல வச்சே பேசிட்டேன்….”

‘ஓ அதை சொல்றியா…..? நான் என்னமோன்னு நினச்சுட்டேன்…..’ இறங்கி வந்தது இவள் மூச்சு.

“அம்மா அப்பா சம்மதத்தோட மேரேஜ் பண்றது ரொம்பவே நல்ல ஃபீல் என்ன?” அவன் தான். “எனக்கு சந்தோஷமா இருக்குது மனு”

‘நீ இன்னும் என்ட்ட எதுவும் கேட்கலை….நானும் எதுவும் சொல்லலை அப்படின்ற மாதிரியா நீ பேசிகிட்டு இருக்க?’

இந்நேரம் அவர்கள் இறங்க வேண்டிய ஃப்ளோர் வரவும் லிஃப்டைவிட்டு வெளிப்பட்டனர் இருவரும்.

இவளது செக்யூரிட்டி கார்டை கீழயே விட்டு வந்திருப்பது அப்போது தான் இவள் கவனத்தில் வருகிறது.

அதற்குள் அவனது கேபினுக்கு பக்கவாட்டு அறை முன் போய் நின்றவன் தன் பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்து அதை திறக்க போகிறான்…..

அந்த ரூம் எப்பவுமே பூட்டி இருப்பதை தான் இவள் பார்த்திருக்கிறாள். இப்பொழுது இதில் என்ன?

இவள் யோசித்த அதே நேரம்…. “எக்‌ஸ்க்யூஸ்மி மித்ரன்…” சத்தம் கேட்க பார்த்தால் இவர்களுக்குப் பின்னால் ஒரு சிறு கூட்டம்….. அத்தனை பேரும் பயோசியின் ஹையர் அஃபீஷியல்ஸ்…. முன்னில் இருப்பவர் தான் ஆதர்ஷ் என ஞாபகம்…

சற்று இன்செக்யூர்டாய் ஒரு உணர்வு இவளுள்….ஏலியன் ஃபீல்….

“ஹாய் ஆதர்ஷ்” என்றான் மித்ரன்.

“ஹாப்பி பார்த்டே டு யூ மித்ரன்…” அந்த ஆதர்ஷ் இவனுக்கு கை குலுக்க…..மனோஹரிக்கு அப்பொதுதான் ஞாபகமே வருகிறது அவள் இன்னும் அவனை வாழ்த்தவே இல்லையென…. இவன் அருகாமையில் இவள் என்னவெல்லாமாகிப் போகிறாள்….எப்படி மறந்தாள் இவள்….

அடுத்து அங்கிருந்த அனைவரும் விஷ் பண்ண…. “வி காட் திஸ் ஃபார் யூ…” ரெண்டு லேப் டாப் நீள வைட் கலர் பாக்‌ஸ்….கேக் என புரிகிறது இவளுக்கு….

“ஓ…தேங்க்ஸ்” என்ற மித்ரன் சட்டென நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்து அடுத்திருந்த மீட்டிங் ஹாலைப் பார்த்து சென்றவன்….. திரும்பி இவளைப் பார்த்து…. “வா மனு” என அழைத்து இவள் அவன் அருகில் செல்லவுமே நகர்ந்தான்.

அங்கு கேக் கட்டிங்….. இவளை பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டான்….. ரொம்ப ஃபார்மலான அந்த செலிப்ரேஷன் முடிந்து அவர்கள் விடைவதற்குள் இவளுக்குள் இருந்த சந்தோஷத்தின் அளவு ஏனோ குறைந்திருந்தது. யாரும் இவளை இன்சல்ட் செய்தார்கள் என்றெல்லாம் இல்லை… ஆனால் அவளுக்கு ஆட் ஒன் அவ்ட் ஆக உணராமல் இருக்க முடியவில்லை…. யாரும் இவளிடம் ஒரு வார்த்தை பேசாதது காரணமாக இருக்கலாம்…

அவர்கள் விடை பெற…. இப்பொழுது இவள் முகம் பார்த்தவன் “என்னாச்சு மனு” என்றபடி இவள் அருகில் வந்தான்.

அதே நேரம் மீண்டும் கதவில் நாக்கிங் சவ்ண்ட்…. இவனது “யெஸ் கம் இன்” ஐ தொடர்ந்து எட்டிப் பார்த்தது ஒரு தலை. ப்ரெஞ்ச் பியர்ட் வைத்த முகத்திற்கு சொந்தமான தலை…

இவள் அந்த முகத்தின் பார்வையில் படவும் அந்த முகபாவம் மாறிய விதம்…. மித்ரனின் ஒரு தீவிர  ஃபேன்…..தன் ஃபேவரைட் ஸ்டாரின் சீக்ரெட் கேர்ள்ஃப்ரெண்டை எதிர்பாராமல்  கண்டுவிட்டால் எப்படி மகிழ்ச்சியும் பெருமையுமாக லுக் விடுவானோ அப்படிப் பார்த்தான் அவன்….

இதில் வெறுப்பு இல்லை எனினும், இந்தப் பார்வையும் அவளுக்கு பிடிக்கவில்லை.

அதற்குள் அவனோ “ஹாய் மித்ரன் சார்…. டு யூ ஹவ் டைம் ஃபார் அஸ்? “ என்றபடி உள்ளே வந்தான்.

“ஹாய் சஅன்டி பாய்…” என மித்ரன் ஆரம்பிக்கும் போதே அந்த சஅன்டிக்கு வாலாய் சில பல தலைகள்.

“எங்க டீம் எல்லோரும் வந்திருக்கோம்….” அடுத்தென்ன அந்த சவ்ண்ட் ஃப்ரூஃப் ரூமை தாண்டாமல் மியூசிக் அலற ஆரம்பித்தது.  யார் யாரோ வாங்கி வந்த ரெண்டு கேக்கை கட் பண்ணினான் மித்ரன். அந்த நீள டேபிளை சுற்றி அத்தனை பேரும் நின்றபடி மியூசிக்கிற்கு சற்று ஆடிக் கொண்டிருந்தவர்கள்…. இப்போது மித்ரன் சார்…உங்க ஸ்பெஷல் டேன்ஸ் என்றனர் கோரஸாய்….

“ஹேய் திஸ் இஸ் ஆஃபீஸ்’

“சோ வாட்..? இட்’ஸ் யுவர் பெர்த்டே…”

அடுத்து அதிலிருந்து ஒவ்வொருத்தராய் வந்து, வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த வெஸ்டர்ன் பீட்டிற்கு  அவன் அருகில் நின்று ஆடிவிட்டுப் போயினர். ஆனா பெண்ணோ யாரும் தொட்டெல்லாம் ஆடவில்லை.

மனோவிற்கு பார்க்க சந்தோஷமாகத்தான் இருந்தது. மித்ரனுக்கு நன்றாகவே ஆடத் தெரிகிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். தன் மொபைலில் அதை போட்டோஸாய் பதிய தொடங்கி இருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.