(Reading time: 9 - 18 minutes)

02. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தர்ஷ் ... நார்வே செல்ல எப்படியும் ஒரு நாள் ஆகி விடும் என்பதால்... அவனுடைய போன்க்கு காத்திராமல் ,  காலையில் எழுந்த பிரத்யுஷா, தன் மாமியாரிடம்,

“அத்தை... நான் இன்னிலேர்ந்து ட்யுட்டி லே ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்... போகட்டுமா ?” என்றாள்..

“அதுக்கென்னம்மா .. செய்... உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.. அப்புறம்... நீ சாப்பாடு எடுத்துட்டு போவியா... இல்ல.. அங்கியே கான்டீன் இருக்கா?” என்றார்.

இல்ல... அத்தை.. நான் லஞ்ச் வீட்லேர்ந்து கொண்டு போவேன். நான் என்ன பண்ணனும் சொல்லுங்க .... உங்களுக்கும் சேர்த்து செய்து முடிச்சுடறேன்... சாதம் கூட ரைஸ் குக்கர் லே வச்சுட்டா .. திருப்பி வைக்க வேணாம்.. சூடாவே.. இருக்கும்... “

அப்போது .. வீட்டு லேன்ட் லைன் அடிக்க, எடுத்து பேசிய கமலா ..

“ஆதர்ஷ் .. சொல்லுப்பா ..” என,

அவள் ஆவலோடு வந்தாள்.. அவர் பேசி விட்டு அவளிடம் கொடுக்கவும்,

“ஹாய்.. நீங்க இப்போ பேசுவீங்கனு நினைக்கல... பிளைட் ஈவினிங் தானே லேன்ட் ஆகும்... “ என

“ஆமாம் டா...ஆனால் இப்போ கனெக்டிங் பிளைட்க்காக வெய்ட் செய்துட்டு இருக்கேன்... நைட் புல்லா ஒரே யோசனை... நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்களோன்னு....அதான் சரி இந்த டைம் லே பேசலாம் நு கூப்பிட்டேன். நீ சொல்லு ... நைட் தூங்கினியா?” என வினவ,

“ஹ்ம்ம்... கஷ்டமாதான் இருக்கு... ஆனா பழகிடும்னு நினைக்கிறேன்... நீங்க ஏதாவது சாப்பிடீங்களா? “

“இல்லம்மா... இனிமேதான்.”

“சரி .. சாப்பிடுங்க.. வந்து ... நான் இன்னிலேர்ந்து வேலைக்கு திரும்ப ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்... அத்தை கிட்டேயும் கேட்டுட்டேன்... நீங்க என்ன சொல்றீங்க ?”

“ஹ்ம்ம்... சரிமா... வச்சுடவா”

“சரி.. நைட் இன்னிக்கு பேசலாமா? “ என்று ப்ரயு வினவ,

“இன்னிக்கு கொஞ்சம் கஷ்டம்... நான் லேன்ட் ஆனவுடனே கால் பண்ணி சொல்லிடறேன்... மத்தபடி ... நாளைக்கு வேலைலே சேர்ந்துட்டு உனக்கு டைம் சொல்றேன் “

“ஒகே .. பார்த்துக்கோங்க..” என்று அவள் வைக்கவும், அவனும் வைத்தான்..

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றவள், பின் தன் அத்தையிடம் சென்றாள்..

வர்கள் சொன்னபடி சமையல் முடித்து , கிளம்பி தான் வேலை செய்யும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்...

அவளை எதிர் நோக்கி அவள் தோழி பிரியா காத்திருந்தாள்.

“வாம்மா .. புதுபொண்ணு.. என்ன கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு ?” என்று கேலியாக வினவ,

“நல்லாருக்குடி...” என்றவள்,

“ஹ்ம்ம்... அப்புறம் ஹனி மூன் லாம் போனியா? எங்க போன ?”

“இல்லடா.. இந்த தடவை ... புல் டைட் .. அவர் எப்படியும் நடுவிலே வருவார்னு நினைக்கிறன்.. அப்போ பார்க்கலாம்... “

“ஏண்டி ..  இப்போ அனுபவிக்காம.. எப்போ இதெல்லாம் கிடைக்கும் .. அப்புறம் கமிட்மென்ட் ஏறிடும் பா..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... அவர் வீட்டிலே எல்லாரும் நல்லவங்கதான் ... அதான் நெக்ஸ்ட் டைம் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..”

சரி .. சரி ...வா .. வேலை பார்க்கலாம் .. முதலில் போய் எம்.டி..ய பார்த்துட்டு வருகிறேன் “ என்று முடித்து விட்டு சென்றாள்.

எம்.டி..ய பார்த்தாள். அவரும் அவளை பற்றி விசாரிக்க, பதில் சொன்னவள், தன் அத்தை தனியாக இருப்பதால் , இனிமேல் நைட் ஷிப்ட் பார்ப்பது கஷ்டம் என்று எடுத்து உரைத்தவள், அதற்கு தேவையான மாற்று ஏற்பாடு குறித்து பேசி விட்டு வந்தாள்..

அட்மின் பிரிவில் நைட் ஷிபிட் தேவை படாது என்றாலும், இந்த மருத்துவமனையில் எல்லாரும் இல்லை என்றாலும், தீடிர் என்று தேவைபட்டால் எல்லா வேலையும் தெரிந்த இரண்டு பேர் அட்மின் பிரிவில் இருப்பார்கள்.. அது சுழற்சி முறையில் வரும்போது இவளும் வருவாள்.. இப்போது அதற்கு தான் மாற்றம் கேட்டு விட்டு வந்தாள்.

திருமணத்திற்கென பதினைந்து நாட்கள் லீவ் எடுத்ததால் கொஞ்சம் வேலைகள் சேர்ந்து இருந்தது... அன்றைய மதியம் வரை வேலை சரியாக இருக்க, மதியம் தன் தோழியோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“உஷா ... உன் அம்மா வீட்டிற்கு சென்று வந்தாயா? அங்கே எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.”

“இல்ல மா.. கல்யாணத்திற்கு மறுநாள் ஒருவேளை அங்கே சென்று சாப்பிட்டு வந்தது ...நேற்று அம்மா வீட்டிலிருந்து எல்லாரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தார்கள்”

“சரி.. லோக்கல் லே யாவது எங்கியாவது போனீங்களா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.