(Reading time: 9 - 18 minutes)

வரோட சேர்ந்து மூன்று நாலு தடவை ஷாப்பிங் போனோம்... வேற எங்கே போக டைம் இருந்தது?”

உன் ஹஸ்பன்ட் எப்போ திரும்பி வருவார்..?

எப்படியும் மூணு வருஷத்துக்கு மேல ஆகுமாம்.

உனக்கு கஷ்டமாக இல்லையாடி... இவ்ளோ நாள் ஆகும் னா பேசாம போயிட்டு வந்து கல்யாணம் செய்திருக்கலாமே? இல்ல .. உன்னை கூட்டிட்டு போற ஆப்ஷன் ஆவது பார்துருக்கலமே ? நீ கேட்டு பார்க்க வேண்டியது தானே..?

இல்லை .. அவர் எல்லா ஆப்ஷன் ட்ரை பண்ணிட்டுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கார். அவர் தங்கைக்கு இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு... நார்வே கிளைமேட் இண்டியன்ஸ்க்கு அதுவும் வயசானவங்களுக்கு கஷ்டமாம்... அதோட அவர் அத்தையை அங்கே கூட்டிட்டு போய்ட்டா, அவர் தங்கை வித்யாவிற்கு இனிமேல் வரும் விஷேஷங்களுக்கு அவங்க அம்மாவை எப்படி கொண்டு விட்டு கூட்டி போறது எல்லாம் கஷ்டம்..

அவரோட ஜாப் ப்ரோபைலே அங்கே உள்ள ஐ.டி. மார்க்கெட்டிங் டெவலப் பண்ணனும்... சோ அடிக்கடி லீவ் போட முடியாது... ஓரளவு அங்கே பிக்கப் ஆச்சுன்னா அவர் திரும்ப இங்கியேதான் வரணும்..

அம்மாவை இங்கே தனியா விட முடியாது ... இதெல்லாம் யோசிச்சு தான் கல்யாணம் பண்ணி மனைவியை இங்கே விட்டு விட்டால், அம்மாவும் மனைவியும் ஒருதரோகொருத்தர் துணையா இருப்பாங்க ...

இதெல்லாம் எங்க அப்பா கிட்ட சொல்லி தான் பொண்ணு கேட்டாங்க... அப்படி இருக்கும் போது நான் இப்போ எப்படி அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியும்..

சரிடி உஷா.. இதெல்லாம் உன்கிட்டயும் சொல்லியுருப்பாங்கதானே ..நீ யாவது யோசிச்சிருக்கலாம் ல

என்னை பொறுத்தவரை .. அம்மாக்காக இவ்வளவு யோசிக்கிறவர் ... கண்டிப்பா என்னையும் நல்லா பார்த்துப்பார் னு தோணிச்சு. என்னோட பாமிலி அப்படின்னு வந்தா , கமிட்மென்ட் கூடிடும் .. அதே சமயம் இந்த நாலு வருஷம் நான் அவங்க அம்மா கூட இருந்தாலும் , என் தங்கச்சிங்க செட்டில் ஆகிறவரை அம்மா வீட்டையும் பார்த்துக்கலாம். இதெல்லாம் யோசிச்சுதான் சரி ன்னு சொன்னேன்..

ஓகே. ..ஓகே.. ஆனால் கல்யாணத்திற்கு முன்னால் உள்ள அந்த மலர்ச்சி இப்போ உன்கிட்ட இல்லையே,... அப்போ அவரை மிஸ் பன்ன்றேதானே...

அது ..ஆமாம் டி.. நீ சொன்ன மாதிரி நடப்பதெல்லாம் நன்மைக்கே அப்படின்னு நினைச்சாலும், இந்த பத்து நாள்லே அவர் மேலே இவ்ளோ அன்பு வைப்பேன்னு நானே நினைச்சு பார்கலே.. அதுவும் நேற்று இரவு ரூமில் தனியா படுத்தப்போ ரொம்ப கஷ்டமா இருந்தப்போ” என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.

“சரி ..சரி .. விடு.. அவர் வேலை சீக்கிரம் முடியனும்னு வேண்டிக்கோ.. வா .. போகலாம்..” என்று ப்ரத்யுவை அழைத்துக் கொண்டு போனாள் பிரியா..

ன்று மாலை வேலை முடிந்து வந்தவள், வீட்டில் மாமியாருடன் சேர்ந்து இரவு உணவு வேலையை முடித்தவள், ஆதர்ஷின் போனிற்காக காத்திருந்தாள்.

இரவு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணியளவில் போன் செய்தவுடன், முதலில் தன் அத்தையிடம் கொடுத்து பேச வைத்தாள். அவர் அவனிடம் பேசிவிட்டு, தூங்க செல்ல,

போன் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தாள்

“ப்ரயு.. என்ன பண்ணிட்டிருக்க ?” என்றான்

“ஹ்ம்ம்.. உங்க கூட பேசிட்டு இருக்கேன் “

“அய்யே.. அரத பழசான மொக்க ஜோக்கு “

“மொக்க கேள்விக்கு மொக்க பதில் தான் வரும்”

“ஹோய்.. என்ன கிண்டலா.. “ என்றவன்..”இன்னிக்கு வேலைக்கு போயிட்டு வந்தியே....ஒன்னும் ப்ரோப்ளம் இல்லையே...”

“இல்லப்பா.. எப்பவும் போல் உள்ள வேலைகள்தான்.. ஆனால் இங்கேர்ந்து போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு... வேற எதாவது ஈசி ஆப்ஷன் பார்கனும்”

“ஒ..சரி சீக்கிரம் பார்க்கலாம்..”

“அப்புறம் நீங்க எங்கே தங்கியிருக்கீங்க..

“ஹோட்டல் தான்... நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் ரெடி ஆயிடுமாம்.. இன்னிக்கே ரெடி ஆக வேண்டியது.. இங்கே லோக்கல் ஹாலிடே இன்னிக்கு .. அதனால் தான்.”

“அங்கே இப்போ டைம் என்ன ?”

“ஏழு மணி.. அங்கே என்ன பனிரெண்டு மணியா?” என்றவன்...சற்று நேரம் பேசி விட்டு

“நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் போயிட்டு, அங்கிரந்து டெய்லி எத்தனை மணிக்கு பேசலாம் னு சொல்றேன்.. இப்போ போய் தூங்கு... “என்றான்

“சரி.. குட் நைட் என்று சொல்லிவிட்டு அவளும் போனை அணைத்தாள்.

இருவர் மனத்திலும் அப்போது தோன்றிய எண்ணம்

“இந்த மூணு , நாலு வருஷமும் நாம் அழகன் படத்துல வர மாதிரி

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா .. இன்னும் இருக்கா

என்று போனில் தான் குடும்பம் நடத்தனும் போலே ...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.