(Reading time: 9 - 18 minutes)

றுநாள் காலை எழுந்ததிலிருந்து முதல் நாள் போல் போன் செய்வானோ என்று மிகவும் எதிர்பார்த்தாள் ப்ரத்யு .. ஆனால் ஆதர்ஷ் பண்ணவில்லை. ஏமாற்றத்தோடு தன் வேலைக்கு கிளம்பினாள்.

அங்கே ப்ரியா “என்ன உஷா... உன் முகம் நேற்றை விட டல் அடிக்குது இன்னிக்கு. என்ன விஷயம்?”

“ஒன்னும்.. இல்லடி.. நேற்று மாதிரி இன்னிக்கும் பேசுவாரோன்னு நினைச்சேன்.. ஆனால் பேசலை..”

ஏன் ...நேத்து நைட் ஊர் போய் சேர்ந்து போன் பண்ணலையா?

“அது நேத்து ராத்திரியே பண்ணிட்டார்..  நேத்தைக்கு காலையில் பண்ண மாட்டார்னு நினைச்சேன். பண்ணினார்... சரி இன்றும் காலையில் பண்ணுவாரோன்னு எதிர்பார்த்து ஏமாற்றமா இருக்கு..

ஏண்டி ஒரு நாளே இப்படி இருக்கியே... இன்னும் இருக்கே? எப்படி தாங்குவே?

அதெல்லாம் ஒன்னுமில்லடி .. பாவம் .. நேத்து புல்லா ட்ராவல் பண்ணிட்டு , நைட்டும் என்னோடு பேசிட்டுதானே படுத்தார்... டயர்ட் ஆ இருக்கும்னு நினைக்கிறேன்... அதுதான் போன் பண்ணல ... புத்திக்கு தெரியுது... மனசு ஏமாற்றமாயிடுது... அதுதான் முகத்தில் தெரியது .. மத்த படி ஒண்ணுமில்லை... “ என்று ப்ரியவோடு சேர்த்து தனக்கும் சமாதனம் சொன்னாள் ப்ரத்யு..

ன்று இரவு பதினொரு மணிக்கே கால் செய்தவன் .. தன் அன்னையிடம் பேசிவிட்டு, பிரத்யுவிடம் பேச ஆரம்பித்தான்

“ப்ரயு.. நீ சிஸ்டம் கனெக்ட் பண்ணி வெப் கேம் வா” என்றவன், அவள் சிஸ்டத்தில் உட்காரவும்,

“ஹாய் ... ப்ரயு.. எப்படி இருக்க?

ஹ்ம்ம்...

என்ன டல்லா பதில் வருது..

நேத்து நீங்க மார்னிங் பேசின மாதிரி , இன்னிக்கும் பேசுவீங்கனு நினைச்சேன்.. அதான் டல்லா இருக்கு..

ஹே.. லூசு பொண்ணே .. நான் காலையில் உன்கிட்ட பேசணும்னா.. மூணு மணிக்கு எழுந்து பேசினாதான், உனக்கு எட்டு மணி ஆகும்... டெய்லி அது நடக்குமா சொல்லு?

ஹே.. சாரி... நான் அத யோசிக்கவில்லை... சரி.. சரி.. நீங்க ஈவேனிங் கால் பண்ணுங்க..

சரிடா..

கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கு? எல்லா வசதியும் இருக்கா?

அதெல்லாம் ஒன்னும் ப்ரோப்ளம் இல்லைடா ... நான் இன்னிக்கு ட்யுட்டி ஜாயின் பண்ணிட்டேன்... என்னோட டைம்.. 9 டு 5 தான்.. சோ.. நான் ஆபீஸ் முடிச்சிட்டு வந்து ஒரு  6 மணிக்கு உனக்கு கால் பண்றேன்.. நம்ம டைம் படி பார்த்தா .. 11 மணி ஆகிடும்.. உனக்கு பரவாயில்லியா?

அது ஓகே பா.. ஆனால் கண்டிப்பா கால் பண்ணிடுங்க...

ஷுர் டா.. மாக்சிமம் ஒரு மணி நேரம் பேசலாம்... வேற ஏதாவது உனக்கு என்னிடம் சொல்ல தோணினா, என்னோட மெயில் அல்லது எப்.பி லே மெசேஜ் அனுப்பு .. நான் பார்த்துட்டு எமெர்ஜென்சி னா கால் பண்றேன்

அவள் சரி எனவும், அன்றைய நடப்புகளை இருவரும் பேசினார்கள்.. ஒரு மணி நேரம் போவது ஏதோ தெரியாமல் பேசினார்கள். இடையிடையே அவன், அவளிடம் சில ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைத்தான்..

“ப்ரயு ...

மனைவி கணவனிடம் சொன்னாளாம் “ஏங்க ..சொர்கத்திலே புருஷனையும், பொண்டாட்டியையும் பிரிச்சிருவாங்களாமே”

கணவன் பதில் சொன்னனாம் “அதுனாலதான் அது சொர்க்கம்” என்றானாம்..“ என்று முடிக்கவும்,

ப்ரயு அவனுக்கு அழகு காட்டியபடி “அப்போ நீங்க சொர்கத்திலே இருக்கிறதா சொல்றீங்களோ? “ என்று மூஞ்சை தூக்கவும்,.

“ஹே.. இல்ல மா.. நான் அப்படி எல்லாம் சொல்வேனா? ஜோக் சொன்னால் சிரிப்பியே ... உன்  அழகு சிரிச்ச முகத்தை பார்த்துட்டு குட் நைட் சொல்லலாமே ன்னு பார்த்தேன்..

இது ஜோக் ? இதுக்கு நாங்க சிரிக்கணுமோ?

ஹே.. வாட்’ஸ் அப் .. வைரல் மா இது.. ரொம்ப வேகமா பரவிட்டு இருக்கு பார்த்துக்கோ...

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இது... என்றபடி.. சிரித்தவள் ..அவள் சிரிக்கும்போதே இருவரும் குட் நைட் சொல்லியபடி கால் கட் செய்து விட்டு படுக்க சென்றார்கள்..

அவர்கள் இருவரின் நாட்களும் இதே போல் விரைய, ஆதர்ஷ் நார்வே சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நல்லபடியாக கழிந்தது.

தொடரும்

Episode # 01

Episode 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.