(Reading time: 27 - 54 minutes)

மித்ரன் மேல் நல்ல எண்ணம் இருக்கும் பட்சத்தில், அவன் அம்மாவை குறையாக பேச வேண்டிய சூழலை இவள் உண்டு பண்ணுவது, இவள் பெற்றோருக்கு ஏற்புடையதாக இருக்காது. என்னதான் இருந்தாலும் அது அவனை மனகஷ்டபடுத்தும் கேள்வியாக, அவனை  அவமான படுத்தும் செயலாகத்தான் அவங்களுக்கு  தெரியும்…. ஆக அதற்கு மேல் மனோ அதை குடையவில்லை.

“அதுக்கில்லப்பா இது வேற….ஆமா அகி எங்க? அவன் எப்ப கால் பண்ணான்?” அருகிலிருந்த மித்ரன் முகபாவத்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே இதைக் கேட்டாள் மனோகரி.  இவ்ளவு கதை சொன்னவன் இதுக்கும் எதாவது கதை சொல்லியிருப்பான் தான்…..அது என்னன்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த கேள்வி.

“அவன் இதை உன்ட்ட சொல்லலையா மகி…. அவனுக்கு திடீர்னு ஏதோ முக்கிய வேலையாம்….பேங்களூர் போகனுமாம்….இந்த வாரம் முழுக்க அங்கதானாம்…..ஆஃபீஸ்ல இருந்து சொன்னவன் இங்க வராமலே கிளம்பிப் போய்ட்டான்….அவனும் கூட இல்லாம இந்த கல்யாண வேலையை எப்படி செய்யப்போறோம்ன்றதுதான் மலைப்பா இருக்கு….” அம்மாதான் இந்த கேள்விக்கு பதில் சொன்னது இவளுக்கு….

ஆக எல்லாரையும் எப்படில்லாம் ஏமாத்த முடியுமோ அப்டில்லாம் ஏமாத்தி வாயடச்சு வச்சிறுக்கான் இந்த மித்ரன். பாவம் அகி……இந்த கிரிமினல் கேடி மித்ரனால அம்மாட்ட கூட பொய் சொல்லி இருக்கான்…..ஆனா இந்த அகிக்கும் இருக்கு…..இந்த கேடி மித்ரன் சொன்னான்னு அவன் ஏன் இப்டில்லாம் அம்மாட்ட பேசனும்?  இந்த மித்ரன் மண்டைய உடச்சுறுக்கலாம்ல….இவள் குமுறிக் கொண்டு போக 

மித்ரனோ படு பாந்தமாய் அவளது அம்மாவிற்கு ஆறுதல் சொன்னான் “அதெல்லாம் ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க ஆன்டி ….வெட்டிங்கு ரிசார்ட் ஹால்… .சாப்பாடு….எல்லாம் புக் பண்ணியாச்சு….இன்விடேஷன் இன்னும் கொஞ்ச நேரத்துல கைல வந்துடும்…..ப்ரிண்டிங் கொடுத்றுக்கேன்….டிஸ்ட்ரிப்யூட் பண்றத மட்டும் நீங்க பார்த்துகோங்க…..ஊர்ல இருக்றவங்களுக்கு அனுப்றதுக்கு அட்ரெஸை  என்ட்ட கொடுங்க..…நான் இன்னைக்கே கொரியர் பண்ணிடுறேன்….நீங்க இப்பவே கூட ஃபோன்ல கூப்ட்டு சொல்ல ஆரம்பிச்சுடலாம்….அடுத்து ட்ரெஸ்….. மனுக்கு எடுக்றதுக்குத்தான் இப்ப கிளம்பனும்……அப்டியே இதையும் பார்த்து சொல்லிட்டான்னா புக் பண்ணிடலாம்….” அத்தனை ஏற்பாடுகளையும் அவன் அம்மாவிடம் விளக்கியபடி கையோடு கொண்டு வந்திருந்த தன் பேக்கிலிருந்து ஒரு ஆல்பத்தை எடுத்து இவளிடமாக கொடுத்தான்.

“இது வெட்டிங் ஸ்டேஜ் டெக்கரேஷன் கேட்டலாக்……இதுல உனக்கு பிடிச்சமானதை செலக்ட் பண்ணு மனு…. அதை இப்பவே புக் செய்துடலாம்….”

எப்ப இருந்து இவன் இந்த மேரேஜ்க்கு  ப்ளான் செய்ய ஆரம்பிச்சான்…??? உண்மையிலேயே இதெல்லாம் இன்னைக்குத்தான் செய்ய ஆரம்பிச்சானா…..? நிஜமாவே இவன் ப்ளான் என்ன? என்னதான் வேணும் இவனுக்கு? ஆனால் இங்கு வைத்து எப்படி கேட்க? என்று இருந்தது மனோவுக்கு. ஒன்றும் சொல்லாமல் அவன் கையிலிருந்து அந்த ஆல்பத்தை வாங்கிக் கொண்டாள்.

பேருக்கு அதை திறந்து பார்த்தவள் அதை அப்படியே தூக்கி எரியலாம் போல வந்த கோபத்தை காட்ட வழியின்றி அதில் பார்வைக்கு பட்டதை செலக்ட் செய்தாள். அவள் செலக்ட் செய்ததைப் பார்த்த மித்ரன் “உனக்கு ஆரெஞ்ச் ஃப்ளார்ஸ் பிடிக்குமா….?.நான் உனக்கு பிங்க் வைட் காம்பினேஷன் பிடிக்கும்னு நினச்சேன்…. “ என்றபடி இவளுக்கு சற்று அருகில் நகர்ந்து வந்தவன்…. அடுத்த பக்கத்தை திருப்பி……”இது எப்டி இருக்கு” என ஒரு ஃபோட்டாவை காண்பித்து கேட்க,  இவள் முழு மனதாய் கவனித்து முடிவு செய்யும் வரை அவன் விடப் போவதில்லை என இவளுக்குப் புரிய

….எல்லா பக்கத்தயும் பார்த்து அதில் இரண்டை சுட்டி காண்பித்தாள். “இது ரெண்டும் நல்லாதான் இருக்கு…” அதுவரைக்கும் அவள் கண்களையே அவன் பார்த்திருந்திருக்கிறான் என்பதே அவனை திரும்பிப் பார்த்து பதில் சொல்லும் போதுதான் அவளுக்கு தெரிகிறது. உண்மையில் அவளுக்கு பிடிக்கிறதா என்பதை கவனித்திருக்கிறான்.

‘ஆமா இதிலெல்லாம் என் ஆசைக்கு இவ்ளவு இம்பார்ட்டன்ஸ் கொடுப்பானாம்…… முக்கிய விஷயத்தில கழுத்தை ஒரே வெட்டுன்னு வெட்டிடுவானாம்’ அவன் பார்வையிலிருந்து தன் கண்ணை திருப்பிக் கொண்டாள்.

ஒன்னு ஒன்னுலயும் ப்ளான்….அதை  இம்ப்ளிமென்ட் செய்றதுக்கு அடுத்த ப்ளான்… இது தான் இவன் குணம் போல….ஆன இவன் எப்டி இவளுக்கு 7 நாள் ஃப்ரீ டைம் கொடுத்தான்….வெட்டிங் 7 நாள் கழிச்சுன்னா அதுவரைக்கும் இவள தனியா எப்டி இருக்கவிடுவான்? இவள் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அதற்கான பதிலை அவளது அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.