(Reading time: 27 - 54 minutes)

வள் முகம் பார்த்த அவனோ  “அங்கிள்  ஆன்டி வீட்டுக்கு ரீச் ஆனதும் நீங்க கிளம்பி ஏர்போர்ட் வந்துடுங்க….நாங்க அங்க மெயின் என்ட்ரென்ஸ் வந்துடுறோம்….நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க” என்றான் மொபைலில்.

புரிந்தவரை அவள் இனி இவள் வீட்டாரைப் பார்க்க போவது 7 நாள் கழித்துதான் என நினைத்துக் கொண்டிருக்க….. ஏர்போர்ட்டில் இவளை வழி அனுப்ப அப்பாவை வரச் சொல்கிறான் என புரிகிறது மனோவுக்கு. ஏர்போர்டில் இவள் தன் அப்பாவைப் பார்க்கப் போகிறாள் என்ற உணர்வே  இவளுக்குள் இருக்கும் தனிமை பிசைதலுக்கு எத்தனை ஆறுதல் தருகிறது…. இதற்காகத்தான் இவளது அப்பாவை வரச் சொல்கிறான் எனப் புரிகிறதுதான் இவளுக்கு…..இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை என்று அதற்காகவும் அவன் மீது கோபம்தான் வருகிறது……

 அதே நேரம் மனதில்  இப்போது மனோகரிக்கு நிச்சயமாகவே ஒரு க்யூரியாசிட்டி…..

 “மனு போய்ட்டு வந்துடுவா…..அவளுக்கு செக்யூரிட்டி அரேஞ்ச் செய்திருக்கு….” இப்படி இவள் தனியாக மும்பை போய் வரப் போவது போல்தான் அவன் இதுவரை அவளது மும்பை ட்ரிப்பைப் பத்தி சொல்லிக் கொண்டிருந்தான் அவளது பெற்றோரிடம்.

உண்மையில் அப்படி இவளை தனியாகவா அனுப்பப் போகிறான் இவன்? அவள் அப்பாவிடம் அவள் தனியாக செல்வது போல் சொல்லிக் கொண்டாலும்….எப்படியும் கூட தான் வருவான் மித்ரன் என இவள் நினைத்திருந்தாள். ஆனால் இப்பொழுது இவள் அப்பாவை எப்படி இங்கு வரவிட்டான்…..? அப்பா முன்னால் இவன் எப்படி இவள் கூட வருவான்??

ஏர்போர்ட்டில் அப்பாவைப் பார்க்கவும் ஓடித்தான் போனாள் மனோகரி. இருந்த மன நிலை காரணம். இத்தனை மணி நேர பிரிவுக்கு இன்று எத்தனையாய் உடைகிறது உள்ளம்…… இதுக்கெல்லாம் இந்த மித்ரனை என்ன செய்தால் தகும்??

இவள் அப்பாவை நெருங்கவுமே கவனித்தாள்தான்……யாரோ மூன்று பேர்….இவர்களை ஒரு டீசண்ட் இடைவெளியுடன் பின் தொடர்வதை….

“அங்கிள் இவங்கதான் மனு செக்யூரிட்டிகாக அரேஞ்ச் செய்திருக்றவங்க….அவ சேஃப்டி பத்தி பயப்படாதீங்க…..” அவர்களை இவளது அப்பாவிடம் இப்படித்தான் அறிமுகபடுத்தி வைத்தான் மித்ரன்.

அடுத்து அந்த அவர்கள் புடை சூழ இவள் செக்கின் செய்து அப்பாவிடமும் மித்ரனிடமும் விடை பெறும் போது மனோவிற்கே கடவுளே இவங்க யாருன்னே தெரியலையே….இப்டி இவங்க கூட போறதுக்கு மித்ரனே கூட வந்தா கூட பிரவயில்லையே என்று தோன்றிவிட்டது…. தடி மாடு போல் வாட்ட சாட்டமாய் இருந்த அந்த மூவரும் ஒரு வார்த்தை பேசவில்லை இவளிடம்… இவங்க கூடவா ஒரு வாரம் இருக்கனும்??? எதை நம்பி இவர்களுடன் செல்ல இவள்????? மனதில் அகதன் முகம் ஞாபகம்.

ஒருவாறு தன்னை தானே நிர்பந்தித்துக் கொண்டு அவர்களுடன் ஃப்ளைட்டில் போர்ட் ஆகி, இவள் இவளுக்கான இருக்கை என அந்த மூன்று பேரில் ஒரு நபர் காமித்த இருக்கையில் அமர்ந்த சற்று நேரத்தில் இவளுக்கு அடுத்த இருக்கையில் வந்து அமர்ந்தான் மித்ரன்.

அவனைப் பார்க்கவும் நிச்சயமாய் பரவுகிறது ஒருவித ஆறுதல் என்பது உண்மைதான். ஆனாலும் வருகிறதே கோபம்…..“அஸ்யூஸ்வல் பொய் சொல்லியாச்சு என்ன?” சீறினாள் இவள்.

இவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்த அவனோ…. தன் சீட்டில் சாய்ந்து படுத்தபடி தலைக்கு மேலாய் இருகைகளையும் முறிக்கி நீட்டி ரிலாக்‌ஸ் செய்து கொண்டவன் “உனக்கு என்ன என்ன செய்தாலாம் கோபம் வரும்னு சொல்லு மனு” என்றான்.

இவள் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் பார்த்தவள் அடுத்த சீறலுக்கு தயாராக அதற்குள் அவனோ “அப்பத்தான் அதெல்லாம் செய்து செய்து உன்னை கோபபட வச்சுகிட்டே இருக்கலாம்…”என்றபடி இப்பொழுது இவள் புறமாய் தன் முகத்தை திருப்பி

“இது எல்லோரும் சொல்றதுதான்…ரொம்ப பழைய டயலாக்தான்….ஆனா நான் பேச்சுக்காகல்லாம் சொல்லலை….நிஜமாவே நீ கோபப்படுறப்ப செமயா இருக்கு… அதுவும் கோபம் வரவும்...”

அவன் சொல்லிக் கொண்டே போக…முதலில் அவன் விளக்கம் சொல்வது போல் ஆரம்பிக்கவும் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்திருந்தவளுக்கு சுள்ளென ஏறிக் கொண்டு போகிறது…..இவள் மூச்சிழுத்து கோபத்தோடு அடுத்து பேச எத்தனிக்க

“எக்‌ஸாக்ட்லி இதே தான் மனு….இத தான் சொல்ல வந்தேன்….கோபம் வரவும் நீ பேச ஆரம்பிக்க முன்னால மூச்சை இழுத்து லிப்ஸை இப்டி அழுத்தமா மூடி….அடுத்து பேச …. அதாவது திட்ட ஆரம்பிப்ப பாரு….அதைப் பார்க்க செம அழகா இருக்கும்….”

அவன் படு ரசனையாய் அவள் உதடுகளைப் பார்த்தபடி கண்களில் குறும்பும் விஷமமும் துள்ள சொல்ல…மனோ அப்படியே தன் கையை தலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

அவளுக்கே பிடிக்கவில்லை எனினும், அவளையும் மீறி அவள் அடிமனதில் வந்து பரவுகிறதே ஒரு சந்தோஷம் அதை என்ன செய்ய??? கடவுளே இவனை எப்படி சமாளிக்க போறேன் நான்…????

அடுத்து அவள் கண்களை மூடிக் கொள்ள, மும்பை சென்று இறங்கும் வரையுமே மௌனம் ஆட்சி மொழி அவர்கள் இருவரிடமும்.

ர்போர்ட்டில் இவள் லக்கேஜையும் இவளையும் அவன் ஒன்று போலவே ட்ரீட் பண்ணியதாய் ஒரு உணர்வு அவளுக்கு….பாதுகாப்பை தவிர வேறு எதையும் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை…

இப்ப இவன் எங்க கூட்டிட்டுப் போவான்????

ஏதோ ஒரு வீட்டிற்கு கூட்டிப் போய் இறக்கினான் டாக்‌சியில். அந்த வீட்டு செக்யூரிட்டியிடம் இவன் என்னவோ பேச….இவள் கவனம் அந்த வீட்டின் மீது….. பங்களா என்று சொல்ல வேண்டும்…..இரவு என்றாலும் மின் விளக்குகளின் உதவியில் வீட்டின் முன் இருக்கும் தோட்டம் அழகாக தெரிகிறது…. மும்பைல வீட்டு  ரெண்ட் ரொம்ப அதிகம் என கேள்விப் பட்ட நியாபகம் மனோவுக்கு….. இதில் தோட்டத்தோட வீடு? யார் வீடா இருக்கும்?

சற்று நேரத்தில் இவளோடு அந்த வீட்டிற்குள் சென்றவன் ….மாடியிலிருந்த ஒரு அறைக்கு கூட்டிப் போய் இவளது லக்கேஜை அங்கே வைத்துவிட்டு….”இங்க தான் இந்த செவன் டேஸும் ஸ்டே மனு…. இப்ப நீ ரெஃப்ரெஷ் பண்ணிட்டு தூங்கலாம்…ஃப்ளைட்ல கொடுத்த டின்னர் நீ சரியா சாப்ட மாதிரி இல்லை….எதாவது வேணும்னா சொல்லு….அரேஞ்ச் பண்றேன்….” என்றபடி இவள் முகம் பார்த்தான்.

“பைதவே இங்க இருந்து நீயா வெளிய போகலாம்னு நினைக்காத….அங்க பாரு” மித்ரன் காமித்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் ஃப்ளைட்டில் போர்ட் செய்ய இவளோடு வந்த அந்த மூன்று வாட்டசட்ட மக்கள் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர் இந்த வீட்டை சுற்றி…. ஓ இவளை சிறை வைத்திருக்கிறேன் என்கிறான்….

இவளோ முகம் சுண்ட அவனைப் பார்த்திருந்தாள்….. ‘உண்மையில் என்ன நடக்குது மித்ரன்?’

Episode # 09

Episode # 11

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.