(Reading time: 23 - 46 minutes)

வர் வார்த்தையில், அதில் தொனித்த அந்த கேவலமான அர்த்தத்தில் ஏனோ சுள்ளென பொங்கியது ரிஷிக்கு. 'நான் மனுஷனா இருக்கும் போதே இங்கிருந்து கிளம்பறீங்களா???' என்றான் காரமான குரலில்.

'என்ன சார் ரொம்ப அலட்டிக்கறீங்க உங்க அம்மா செய்யாததையா இவ செஞ்சிட போறா???. அவங்க இது மாதிரி எத்தனை பேரை கரெக்ட் பண்ணாங்களோ???'

உள்ளுக்குளே எரிமலை கொதிக்க அவரை எரிக்கும் பார்வை பார்த்துக்கொண்டே சொன்னான் ரிஷி 'அப்படியா சரி. அப்போ ஒண்ணு பண்ணுங்க. இவங்க வேண்டாம். உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு வாங்க. நான் அவங்களை ட்ரை பண்ணிட்டு அப்புறம் இவங்களுக்கு சான்ஸ் கொடுக்கிறேன்'

அடுத்த நொடி அங்கே ரணகளம். எப்போது அங்கே வந்தாரோ தூரத்தில் அதை ரசித்தபடியே நின்றிருந்தார் மேகலா. சில நிமடங்கள் கழித்து எல்லாம் அடங்கி எல்லாரும் கலைந்து சென்ற பிறகு ரிஷியின் அருகில் வந்து நின்றார் மேகலா. முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு.

'எதுக்குடா கோப படறே??? மூக்கு முட்ட குடிச்சிட்டு பரதநாட்டியம் ஆடினவ தானே டா உங்கம்மா??? உண்மையை தானே சொல்றாங்க எல்லாரும். சும்மா டென்ஷன் ஆகாதே. உடம்புக்கு நல்லதில்லை வரட்டுமா.' மேகலா நகர பொங்கிய கோபத்தை உள்ளுக்குள் அப்படியே புதைத்துக்கொண்டு நின்றான் ரிஷி. ஆனால் தந்தைக்கு கொடுத்த வாக்கை மீறிவிடுவது என்ற முடிவுக்கு மட்டும் வந்திருந்தான்.

'தனது அம்மாவுக்கு நடந்தவைகளை கொஞ்சமேனும் எல்லாரும் புரிந்துக்கொண்டே ஆகவேண்டும். அதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.'

அதை அவன் சாதித்துக்கொள்ளும் சந்தர்பமும் விரைவிலேயே அவனை தேடி வந்தது. அது அந்த டிசம்பர் 31!!!

அது திரையுலகினர் பலரும் கலந்துக்கொள்ளும் மிகப்பெரிய விழா. பழைய நடிகர் நடிகைகளை கௌரவிக்கும் ஒரு பாராட்டு விழா. அவனது அம்மாவையும் சேர்த்து எல்லா பழைய, புதிய நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு.

என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து பார்த்தவனுக்கு ஒரு வழி கிடைத்தது. விழா நடக்க ஒரு வாரம் இருந்த நிலையில் கைப்பேசியில் அழைத்தான் மேகலாவை.

'சௌக்கியமா இருக்கீங்களா???' என்றான் அவன்.

'எனக்கென்னடா??? சௌக்யமா இருக்கேன்.

'ரொம்ப சந்தோஷம். இன்னும் ஒரு வாரம் சௌக்யமா சந்தோஷமா இருந்துக்கோங்க. அதுக்கப்புறம் ஏது சௌக்கியம்???'

'என்னடா சொல்றே...'

'தப்பு பண்ணிட்டீங்களே மேகலா மேடம். எங்கம்மா குடிச்ச தண்ணிலே ஏதோ கலந்தீங்க சரி. அதை யாரவது பார்க்கறாங்களான்னு கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா? அதை ஒருத்தன் பார்த்திருக்கான். அன்னைக்கு நீங்க செஞ்சது, அந்த தண்ணியை எங்கம்மா குடிச்சது எல்லாத்தையும் வீடியோவும் எடுத்து இருக்கான்'

தலையில் இடியே விழுந்தது போல் உணர்ந்தார் மேகலா. பேச்சென்ன மூச்சே இல்லை மறுமுனையில் 

சிரித்தபடியே தொடர்ந்தான் ரிஷி 'இப்போ அந்த வீடியோ என் கையிலே. அதுக்கு ரிலீஸ் டேட்டும் முடிவு பண்ணிட்டேன். டிசம்பர் 31. அந்த பெரிய மேடையிலே... நீங்க கண்டிப்பா அந்த ஃப்ங்க்ஷனுக்கு வந்து அந்த வீடியோவை பார்த்து ரசிக்கணும் சரியா??? இப்போ வெச்சிடவா??? துண்டித்து விட்டான் அழைப்பை.

பயம் பிடித்துக்கொண்டது மேகலாவை. அந்த வீடியோ பதிவு எங்கே இருக்கிறது. அவனிடமிருந்து எப்படியாவது பறித்து விட வேண்டும் என்று மேகலாவும் அரவிந்தாட்சனும் செய்த முயற்சிகள் எதுவுமே பலிக்க வில்லை சொல்லப்போனால் அவனது ஆட்களை தாண்டி அவர்களால் அவனது வீட்டுக்குள் கூட நுழைய, ஏன் அவனை நெருங்க கூட  முடியவில்லை.

தாங்கள் தோற்றுக்கொண்டிருப்பதை மட்டும் அவர்களால் நன்றாக உணர முடிந்தது. தினமும் ஒரு முறை அவர்களை அழைத்து அந்த வீடியோ பற்றி பேசி அவர்களை மிரட்டுவதை மட்டும் ரிஷி நிறுத்தவில்லை. அதில் இன்னொரு மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் தான் ஆடிக்கொண்டிருக்கும் இந்த விளையாட்டை பற்றி அவன் சஞ்சாவிடம் கூட மூச்சு விடவில்லை என்பது தான்.

அந்த நாளும் வந்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் தவிர்க்கவும் தைரியம் இல்லை மேகலாவுக்கு. 'அங்கே சென்றால் கூட நடக்கவிருப்பதை எப்படியாவது தடுத்து விடலாம். வீட்டிலேயே இருந்தால் எல்லாம் முடிந்து போகும்'. கிளம்பி விட்டிருந்தார் மேகலா.

வீட்டிலிருந்து வரும் வழியில் அரவிந்தாட்சனின் கார் திடீரென்று திசை மாறி செல்ல அடுத்த சில நிமடங்களில் அவர் ரிஷியின் ஆட்களால் சிறை பிடிக்க பட்டிருந்தார். அரவிந்தாட்சன் விழாவுக்கு வராததே மேகலாவின் தலையில் மிகப்பெரிய இடியாக விழுந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தனர். சந்திரிக்காவும் ராமனும். சஞ்சா அருந்ததி, இந்திரஜித் உட்பட அத்தனை பெரும் விழாவுக்கு வந்திருக்க, நட்சத்திர கூட்டத்தால் அந்த அரங்கமே ஜொலிஜொலித்துக்கொண்டிருக்க மேடையில் நின்றிருந்தான் ரிஷி. எல்லா ஏற்பாடுகளையும் செய்ததும் அவனே என்று கேள்விப்பட்ட போது மேகலாவின் பயம் பல மடங்கானது

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் அவனே. அரங்கத்தில் அவனது ரசிகர் கூட்டம் நிறையவே இருந்தது. அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் பறந்துக்கொண்டிருந்தது. அந்த விழாவில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.