(Reading time: 23 - 46 minutes)

மனதோர மழைச்சாரல்... - 19 - வத்ஸலா

ற்று நேரம் முன்பாக அங்கே விமானத்தில்....

அவனை  பார்த்த நிமிடத்திலிருந்து பேச்சே இல்லை அஹல்யாவிடம். இவர்கள் இருக்கைக்கு எதிர் பகுதியில் இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தான் அவன்!!!! அவன் அஹல்யாவின் முதல் கணவன் பவன்!!! அவன் இவர்களை பார்க்க வில்லைதான்.

அவளது மனநிலை ஒரு புறம் இருக்க இவள் பவனை பார்த்து சாதரணமாக ஒரு புன்னகை செய்தால் கூட போதும் யாரவது எங்கிருந்தாவது பார்த்து......

Manathora mazhai charal

'கணவனின் முன்னாலேயே பழைய காதலனுடன் கொஞ்சல்'...... எழுதி விடுவார்கள் நாளை பத்திரிகையில். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு பின்னால் சாய்ந்துக்கொண்டாள் அஹல்யா.

அவளது மனநிலை நன்றாக புரிந்திருந்தது சஞ்சாவுக்கும். அருகில் அமர்ந்திருந்தவளின் முகம் நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்து அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான்.

'இப்போ என்னாச்சுன்னு இப்படி டல் ஆகுறே???

'ஒண்ணுமில்லை...' அவன் நெஞ்சுக்குள் புதைந்துக்கொண்டாள். ஏனோ அப்படியே செத்து விட வேண்டும் போல் இருந்தது. அவன் இதய துடிப்பை மட்டும் கேட்டுக்கொண்டு கண் மூடிக்கிடந்தாள் அஹல்யா.

சில நிமிடங்கள் அப்படியே கரைய, இயல்பாக தனது இருக்கையை விட்டு எழுந்த பவன் அவர்கள் இருக்கையை கடந்து நடக்க, அனிச்சையாக திரும்பியவன் இவர்களை பார்த்து ஒரு நொடி நின்றுவிட்டான்.

'ஹாய்... பவன்...' சட்டென நட்பாக புன்னகைத்தான் சஞ்சா. அவள் திடுக்கென்று விலக புன்னகை மாறாமல் எழுந்தவன் பவனை நோக்கி கை நீட்டினான் 'ரொம்ப நாள் ஆச்சு பார்த்து எப்படி இருக்கீங்க???

'ரொம்ப நல்லா இருக்கேன்' அவனும் புன்னகையுடனே கைகுலுக்க மெல்ல  எழுந்தவளின் கரங்கள் சஞ்சாவின் கரத்தை வளைத்துக்கொண்டன. அவனோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் அஹல்யா. அவள் கண்கள் சஞ்சாவின் முகத்தின் மீதே நிலைத்திருந்தன.

'கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்....' இருவரையும் பார்த்து சொன்னான் பவன். ஒரு நிறைவான புன்னகை அவனிடத்தில். 'நீங்க ரெண்டு பேரும் சேரணும் அப்படிங்கறது தான் ஆண்டவனோட  விருப்பம் போல..' குரலில் அவளிடம் மன்னிப்பு கேட்கும் தொனி. 'உண்மையை சொல்றேன்.... மனசுக்கு திருப்தியா இருக்கு. ஏதோ ஒரு உறுத்தல் குறைஞ்ச மாதிரியும் இருக்கு...'

சஞ்சா ஒரு நொடி அவள் பக்கம் திரும்ப சஞ்சாவின் கண்களை மாறி மாறி பார்த்தாள் அஹல்யா.

இவர்களை கவனித்து இருக்க வேண்டுமோ???? சட்டென  தனது இருக்கையிலிருந்து எழுந்து அவர்கள் வந்து நின்றாள் பவனின் மனைவி. அவள் கண்களில் நிறையவே கேள்விக்குறிகள் இருந்தது நிஜம்.

இப்போதுதான் அஹல்யா அவர்கள் இருவரின் பக்கம் திரும்பினாள். அதே நேரத்தில் தன்னையும் அறியாமல் சஞ்சாவுடன் இன்னமும் அதிகமாக ஒட்டிக்கொள்ளவும் செய்தாள்  அவள். இவன் எனக்கானவன், நான் இவனுக்கானவள் என்ற ஒரு அழுத்தமான பாவம் அவளிடத்தில்.

அஹல்யா நின்றிருந்த நிலை பவனின் மனைவியின் முகத்தில் கொஞ்சம் திருப்தி புன்னகையை கொண்டு வந்திருந்தது. அஹல்யாவின் இதழ்களிலும் சின்ன புன்னகை உதயம். பவன் தனது மனைவியை  இருவருக்கும் அறிமுக படுத்தி வைக்க உதடுகளில் ஓடிக்கொண்டிருந்த மென்னகை மாறாமல் சொன்னாள் பவனின் மனைவி.

'ஊருக்கு போறீங்களா ரெண்டு பேரும்.???? சந்தோஷமா போயிட்டு வாங்க. சென்னை வந்ததும் ரெண்டு பேரும் வீட்டுக்கு கண்டிப்பா வரணும்.'

'கண்டிப்பா வரோம்' சொன்னான் சஞ்சா. அவர்கள் விடைபெற்று விலக, இருக்கையில் அமர்ந்தவனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் அஹல்யா.

அவளுக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. பவனை பார்த்தவுடன் அவன் மீது கோபமோ, நடுக்கமோ, அழுகையோ, பழைய நினைவுகள் அழுத்தும் உணர்வோ எதுவுமே எழவில்லை அவளுக்கு. எதனால் அப்படி?????

மெல்ல அவள் பக்கம் திரும்பிய சஞ்சா  கேட்டான் 'என்ன?'

'ம்ஹூம்...'

'என்ன ம்ஹூம்??? எதுவுமே புரியலையா உனக்கு???

'என்ன புரியணும்???"

'இப்போ நீ பவனை பார்த்தும் என்கிட்டே அப்படியே ஒட்டிட்டு நின்னையே அது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா??? இந்த சின்ன குழந்தைகள் எல்லாம் புதுசா யாரவது வந்தா அவங்க நம்மை தூக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயந்து அம்மாகிட்டே ஒட்டிக்குமே அது மாதிரி இருந்தது.'

மென்னகையுடன் கண்களை தாழ்த்திக்கொண்டாள் அஹல்யா.

'அப்படின்னா நீ மொத்தமா என்கிட்டே வந்திட்டேன்னு அர்த்தம்டி.' விருட்டென விழி நிமிர்த்தினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.