(Reading time: 23 - 46 minutes)

'ந்த விஷயத்திலே இதுக்கு மேலே வேறே எந்த கேள்வியும் கேட்காதே. எதையும் துருவாதே. பேசாம எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அருந்ததியை கூட்டிட்டு லண்டன் போற வழியை பாரு. அதுதான் உனக்கு நல்லது' அன்று சஞ்சா சொன்னானே. அது ஒரு வேளை இதை மனதில் வைத்துக்கொண்டுதானா??? அவனுக்கு எல்லாம் தெரியுமா???

'நா வறண்டு போனது போல் தோன்றியது. தண்ணீர் குடிக்க வேண்டும்' கண்ணில் தண்ணீர் தென்படவில்லை. பக்கத்து அறையை எட்டி பார்த்தவனின் கண்ணில் பட்டது உறங்கிக்கொண்டிருந்த அருந்ததியின் அருகில் இருந்த அவளது கைப்பை!!!! அதனுள்ளே இருந்த அந்த தண்ணீர் பாட்டில்!!!

அவன் அதன் அருகே சென்று அந்த கைப்பையை தொட்ட  நொடியில் ....

திடுக்!!!! விழித்துக்கொண்டார் அங்கே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்திரிக்கா.

'ரிஷி இன்னும் வரலையா???'

'இல்லமா ... காலையிலே வரேன்னு கொஞ்ச நேரம் முன்னாடி தான் போன் பண்ணான்'

'ஏன்???' தவிப்புடன் வந்தது கேள்வி.

'அவங்க இன்னும் கண் விழிக்கலையாம்'

'ஏங்க... அ ... அது... நம்ம ஜானகி தானா??? குரல் முழுதும் ஏக்கம்.

'இப்போதானே அவ்வளவு சொல்லி உன்னை தூங்க வெச்சேன். இப்போ என்ன மறுபடியும்???. இங்கே பாரும்மா. அது நம்ம ஜானகியா இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனா அவனுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்திடுச்சு. நாமே சொல்லிடறது தான் நல்லது.'

'வேண்டாம்.. வேண்டாம் ப்ளீஸ்... அவன் நம்ம பையனாவே இருக்கட்டுமே. நாம சீக்கிரமா ஊருக்கு போயிடலாம்.'  

'சின்ன குழந்தை மாதிரி பேசாதே வைதேகி. தீக்ஷா யாருன்னு எத்தனை நாள் தெரியாம இருக்க முடியும். அவனுக்கு தன்னாலே தெரிஞ்சா அப்புறம் நம்ம மேலே ரொம்ப வருத்தபடுவான். தெரிஞ்சுதான் ஆகணும். அது நம்ம ஜானகி இல்லன்னாலும் நான் சொல்லத்தான் போறேன்.' உறுதியாக சொன்னார் ராமன்.

அம்மாவுக்குதான் மனம் ஆறவே இல்லை. கண்களை மூடிக்கொண்டவர் இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும் திடுக்கென கண்திறந்தார். '

'ஏங்க... நாம நாளைக்கு காலையிலே விடிஞ்சதும் ஹாஸ்பிடல் போலாமா??? '

'எதுக்குமா??? அவன் எப்படியும் நாளைக்கு வந்திடுவான்.'

'இல்லை போலாம். எனக்கு அந்த ஜானகி யாருன்னு பார்க்கணும்'

'வைதேகி...'

'ப்ளீஸ்...'

'சரி... போகலாம்.' கண்களை மூடிக்கொண்டார் வைதேகி. அது நம் ஜானகியாக இருக்காது என்ற நம்பிக்கையுடன். அவர்கள் கிராமத்தில் நடந்த தீ விபத்தில் அவளும் அவளது மூத்த மகனும் இறந்து போனார்களே. அதன் பிறகு பலமுறை அவளை தொடர்பு கொள்ள முயன்றும் இந்த பதில் தானே கிடைத்தது. திடீரென எப்படி திரும்பி வரக்கூடும்???

தெரியவில்லை அவருக்கு. அந்த விபத்தில் ஜானகி இறக்கவில்லை என்பதும், மற்றவர்கள் எல்லாரும் இறந்துவிட்டதாக அவர் நினைத்திருந்தார் என்பதும். தனது பேத்தி உயிருடன் இருக்கிறாள் என்பது அவருக்கு தெரிந்ததே சஞ்சா வீட்டு திருமணத்தில் தான் என்பதும் சந்திரிக்கா அறிந்திராத உண்மை.

ங்கே மருத்துவமனையில்

கைப்பையை அணைத்துக்கொண்டு தான் உறங்கிக்கொண்டிருந்தாள் அருந்ததி. அந்த சின்ன அசைவில் கூட விழித்துக்கொண்டாள் அவள். சட்டென எழுந்து அமர்ந்தாள்.

'என்னாச்சு வசி. தூங்கலையா நீ??? அவன் முகம் படித்தாள் அவனவள். ஏதோ ஒன்று சரியில்லை என்பது சர்வ நிச்சயமாக விளங்கியது அவளுக்கு.

'தண்ணி வேணும்டா முதல்லே...' அவளருகே அமர்ந்தான்.

தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்துவிட்டு கைப்பையை துழாவி அதில் புகைப்படம் இருப்பதை உறுதி செய்துக்கொண்டாள். சின்னதாக ஒரு நிம்மதி அவளிடம். ஆனால் அந்த நிம்மதி எத்தனை நேரம் இருக்க போகிறதாம்??? நாளை காலை விடிந்தவுடன் இந்த விஷயம் ஊருக்கே தெரியப்போகிறதே அதை எப்படி தடுக்கப்போகிறாளாம்???

'ஏன் ..இவ்வளவு ...' வாய்திறந்து அவனது முகவாட்டதிற்கான காரணத்தை அவள் கேட்க முயல்வதற்குள் சொல்லி விட்டிருந்தான் அவன்.

'என்னமோ மனசு சரியில்லைடா... இந்த ஜானகி அம்மா தூக்கத்திலே என்னமோ புலம்பிகிட்டே இருந்தாங்க..'

உயிர் போய் திரும்பியது அருந்ததிக்கு. 'என்ன புலம்பினாரோ???' என யோசித்தவள் சட்டென முகத்தில் சிரிப்பை பரவவிட்டுக்கொண்டு ..

'ஹே வசி...' தூக்கத்திலே புலம்பறதுக்கெல்லாம் கவலை பட ஆரம்பிச்சிட்டியா. ஏதாவது கனவு வந்திருக்கும்.'

'இல்லப்பா... ரிஷி.... நீ என் பிள்ளைடா அப்படிங்கறாங்க... தீக்ஷா பாட்டிகிட்டே வா... அப்படிங்கறாங்க...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.