(Reading time: 36 - 72 minutes)

வன் மித்ரன்ட்ட தான பேசினான்….அம்மா எங்க வந்தாங்க இதுல….’ இப்படியாய் ஓடியது இவள் மனது.

தங்கை என்ன யோசிக்கிறாள் என அண்ணனுக்கும் புரிகிறதுதான்….”இல்ல மகி…..மாப்ளட்ட பேசிட்டு அம்மாட்டயும் பேசினேன்….மாப்ள சொல்றதுக்கெல்லாம் உன்னை ஆட வைக்கேன்னு நினைக்காத…..இன்னொரு டைம் கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரமாட்டேன்…”

அண்ணன் அரண்டு போய் சொல்லிய விதத்தில் இவளுக்கு சற்று சிரிப்பு கூட வந்தது….’பாவம் அகி ரொம்ப நொந்துட்டான் போல…சீக்கிரமா இவன்ட்ட பேசிடனும்…’ நினைத்தபடியே கொஞ்ச நேரம் கூகிளில் குடைந்து ஸ்விஸுக்கு இந்த டைமில் ஏற்ற காஸ்ட்யூம் எது என ஒரு முடிவுக்கு வந்தவள்…அகதனுடன் ஷாப்பிங் கிளம்பிப் போனாள்….

அடுத்து அன்று இரவே மனோவை சென்னை கூட்டி வந்துவிட்டான் அகதன்.

அடுத்த வந்த நாட்கள் ரெக்கை கட்டிப் பறந்தன…..அம்மா அப்பா அகதன் என் அத்தனை பேரும் பத்திரிக்கை கொடுக்க…..பர்சேஸ் என வெளி வேலைகளில் பிஸி….மனோவும் பார்லர்…வெட்டிங் ப்ளவ்ஸ்…இன்வைடிங் ஃப்ரெண்ட்ஸ் என அவள் பங்குக்கு பிஸி… கார் ட்ரைவராக ஜோசஃபை இவள் போற எல்லா இடத்துக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தாலும் மற்றபடி அல்மோஸ்ட் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது அவளுக்கு.

விஜிலா மனோ வீட்டில்தான் இப்பவுமே இருந்தாள். முதல்  இரண்டு நாள் அவளை பார்க்க மனோ சென்ற போதெல்லாம் குழந்தைக்கு ஃபீட் பண்ணிக் கொண்டோ அல்லது இரவிலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவையாவது விழித்து குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டி இருந்ததால் பகலில் இவள் சென்ற நேரம் தூங்கிக் கொண்டோ இருந்தாள்.

அன்று இவள் வெளியே வேலை முடித்து வீடு வந்தற நேரம் எதிரில் வந்து நின்றாள் விஜிலா. “இப்பதான் வர்றியா மனோ…டயர்டா இருக்கா….?......உன்னைய பார்க்கனும் பார்கனும்னு நினைக்கிறேன் மிஸ் ஆயிடுது” என்றபடி…

“ம்….ஷாப்பிங்…பார்லர் ஸ்டிச்சிங்னு வெளிய போய்ட்டே இருக்கேன்ல அதான்….நானும் உங்களை பார்க்க வந்தப்பல்லாம் முடியலை…எப்டி இருக்கீங்க…” என ஃபார்மலாக தொடங்கிய பேச்சுவார்த்தை

விஜிலா இவளது கைகளை வந்து பற்றியதும் சற்று எமோஷனலாகிப் போனது.

“சாரி மனோ நான்….எனக்கு….முன்ன நான் மித்…..அவங்களை எப்டின்னு சொல்லனும்னு கூட தெரியலை….” விஜிலா திக்க…

“சும்மா பேரே சொல்லுங்க விஜிலா….அவங்களே அதைதான் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவாங்க…” என மனோ உதவிக்குப் போனாள்.

“இல்ல…அவங்க எப்டியும் எனக்கு மூத்தவங்களா இருப்பாங்க…. வர்ஷனைவிட நாலு வயசுதான் இளையவங்கன்னு நான் கேள்விபட்டுறுக்கேன்….” விஜிலா தன் தயக்கத்திற்கு காரணம் சொல்ல மனோவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் எதிரில் நிற்பவள் அழப்போவதின் அத்தனை அடையாளத்துடன் நிற்கும்போது எப்படி சிரிக்கவாம்?

“அவங்க உங்க வர்ஷனுக்கு தம்பின்ற பட்சத்துல….அண்ணியும் அண்ணனும் ஒன்னுதான்ற வகையில….உங்களுக்கு அவங்க ரிலேஷன்ஷிப்ல இளையவங்கதான்….நீங்க தாராளமா பேர் சொல்லி கூப்டலாம்….” அடக்கிய புன்னகை முகம் எங்கும் பரவ இலகுவாகவே பதில் சொன்னாள் மனோ.

நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை கவனித்தவரை…..வர்ஷன் எப்படிப் பட்டவன் என மனோவால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை…இன்பா பேச்சில் தெரிந்தவரை மித்ரனின் அம்மாவை அவள் தவறு செய்திருக்கிறார் என ஒத்துக் கொண்ட போதும் வர்ஷன் மீது அப்படி எதையுமே சொல்லி இருக்கவில்லை அவள்…..ஆஃபீஸிலும் கேள்விப்பட்டவரை வர்ஷன் மீது நெகடிவாக எதுவும் இல்லை…..

மித்ரன் விஷயத்தில் மித்ரனை குடும்பத்தை விட்டு வெளியேற்றினால் பலன் அனுபவிக்க முடிந்த நபர் என்ற வகையில்தான் வர்ஷன் மீது இவளுக்கு சந்தேகமே……அதுவும் இப்போது இல்லை என்றாகிவிட்டது…….விஜிலா விஷயம் மட்டும் தான் இப்போது வர்ஷனுக்கு எதிராக இருக்கும் ஒன்று….அதன்படி வர்ஷன் உண்மையில் தவறானவனாகவும் இருக்கலாம்…..இல்லை விஜிலா அவனை தவறாகவும் புரிந்து கொண்டும் இருக்கலாம்…

இல்லை மூன்றாவது வாய்ப்பாக இப்ப இவ கொஞ்ச நேரம் முன்பு வரை இந்த மித்ரன்ட்ட மாட்டிகிட்டு முழிச்சாளே….அப்டி அந்த வர்ஷனும் எதாவது ட்ராமா போட்றுக்கலாம்…..ஏன்னா இவளுக்கு புரிந்தவரை பயோசில ஏதோ இன்வெஷ்டிகேஷன் நடக்குது…..மித்ரன் இன்பாட்ட பேசுறப்ப அண்ணாவை மட்டும் நான் இப்ப ரீசண்டா மீட் பண்ணேன்னு சொன்னான்…..அதோட வர்ஷன் யாரோட கான்டாக்ட்லயும் இல்லைனு தெரியுது……

அப்டின்னா அண்ணா தம்பி ரெண்டு பேரும் எதோ ட்ராமா போட்டு அது புரியாம யாருக்கும் தெரியாம விஜிலா ஓடி வந்து…..இப்டியும் இருக்கலாம்…..ஆனா இப்டி மட்டும் ட்ராமா போட்டு ப்ரெக்னன்டா இருந்த பொண்ணை வீட்டை விட்டு ஓடிவர அளவுக்கு டென்ஷனாக்கி இருந்தாங்க இந்த அண்ணன் தம்பி கூட்டம்னு தெரிஞ்சுதோ…..அப்றம் இருக்குது அவங்க ரெண்டு பேருக்கும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.