(Reading time: 36 - 72 minutes)

னுப்பொண்ணு….இவ்ளவு பெரிய கூட்டத்தில நான் மட்டும் இப்டி தனியா நிக்க பயம் பயமா இருக்கு….என்னை பிடிச்சுக்கோ மனு” அவன் படு கிண்டலாய் தான் சொன்னான்.

என்னதான் விளையாடுகிறான் என தெரிந்தாலும் ஏன் என்று தெரியவில்லை……நான் மட்டும் தனியா நிக்க என்ற அவன் வார்த்தை இவளுக்கு கஷ்டமாக இருக்கிறது…..அடுத்து அவனிடமிருந்து கையை உருவ அவள் முனையவே இல்லை…..விழா முடியும் வரையும் அவனும் இவள் கையை விடவே இல்லை.

எல்லோரும் வாழ்த்தி விடை பெற்ற பின் கடைசியாக வந்து இருவரையுமாய் வாழ்த்தியது அவனது அம்மா களஞ்சியம். இருவருக்கும் பொதுவாக “கடைசி வரைக்கும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர்னு சந்தோஷமா இருக்கனும் நீங்க” என வாழ்த்தியவர்

இவளை ஒரு நொடி பார்த்துவிட்டு மெல்ல இழுத்து இவள் நெற்றியில் இதழ் பதித்தார்… மனோ இதை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை என்பதோடு…..இது அவளுக்கு முற்றிலும் அன்னிய பழக்கம்….அவள் அம்மா கூட இப்டி செய்றது கிடையாது இவளை… எப்படி ரியாக்ட் செய்ய என புரியாமல் ஒரு நொடி உணர்ந்தவள்…இதற்கு எதுவுமே செய்ய வேண்டியது இல்லை என தோன்ற அடுத்து மித்ரன் இதை எப்படி ஏற்கிறான் எனப் பார்க்க தொடங்கினாள்.

ஆனால் அவனது அம்மாவோ அவனை இரு நொடிக்கும் மேலாக பார்த்துக் கொண்டு நின்றவர்….” நல்லாருப்பா” என்ற வார்த்தையோடு மேடையை விட்டு இறங்கத் தொடங்கினார்….மகனும் ‘ஏதோ இதை செய்து வச்சிருப்பா’ என அவன் அம்மா சொல்லிவிட்டுப் போவது போல் சம்மதமாய் தலையாட்டிவிட்டு நின்று கொண்டான்.

தன்னவன் கரத்தை அழுந்தப் பற்றினாள் மனோகரி.

றுநாள் மாலை திருமணம்.

இன்றும் களஞ்சியமும் இன்பாவும் மட்டும்தான் முறைப்படி இவள் இருக்கும் அறைக்கு வந்து திருமண புடவை நகை எல்லாம் கொடுத்தது. விஜிலா நேற்று விழாவில் ஒதுங்கி அமர்ந்தது போல் இன்றும் அமர்ந்திருக்கிறாள் போலும்….

நேற்றே மனோ விழா முடியவும் அவளிடம் பேசிப் பார்த்தாள்…..”குழந்தைய வச்சுட்டு அப்டி முன்னால வந்து நிக்க முடியலை மனோ…மத்தபடி எதுவும் இல்லை…” என்றிருந்தாள் அவள். அதற்கு மேல் கட்டாயப் படுத்த இவளாலும் முடியாது…..

இப்போது திருமண புடவை அணியும் படலம்….அஸ் யூஸ்வல் அவளுக்கு தெரிந்த வகையில் இவள் சுற்றிக் கொள்ள…..மீதி வேலையை பார்லர் ஆட்கள் செய்து முடித்தனர்….

பால் வெண்ணிற புடவை….. நுண்ணிய வேலைப்பாடுடனான கையகல சரிகை மாங்காக்கள் உடல் முழுவதும்…. இடையிடையே கீழ் நோக்கி ஓடிய சரிகை விளக்கு சரங்கள்….சரங்களின் இறுதியில் அரை சாண் அளவு மயில் கழுத்து நீலம்…..அதில் விளக்கு சரங்களின் முடிவாய் சரிகை அன்ன விளக்குகள்….. அதற்கும் கீழாய் அரை சாண் அளவு கட்டி சரிகை. புடவை முழுவதும் கல் வேலைப்பாடு

 திருமண நகையாய் மாப்பிள்ளை வீட்டில் கொடுக்கப்பட்டிருந்த நகைகளை நித்யாதான் ஒவ்வொன்றாக பாக்ஸ்‌ திறந்து இவளுக்கு அணிவித்தது….

நீளமாய் அந்த நாக்க்ஷி வகை மயில்கள் ஆரம்….….போல்கி வைரங்களும்….ஒன்றிரண்டு ரூபிகளும்….சில மரகதங்களுமாய்…..பார்க்க பார்க்க ஏதேதோ புரிந்தது மனோவுக்கு…

Episode # 12

Episode # 14

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.