(Reading time: 36 - 72 minutes)

ட் இப்ப எது எப்டியோ…..இந்த சூழ்நிலையில விஜிலா கண்டதையும் யோசித்து மனதை வேதனை படுத்திக் கொள்வதோ….ஏதோ மேரேஜ் லைஃபே முடிஞ்சுட்டுன்னு நினைப்பதோ அளவுக்கு மீறின வேதனையை விஜிலாக்கு தருமே தவிர, வேற என்ன நல்லதை செய்துட முடியும்…? ஆக சந்தேகத்தின் பலனை வர்ஷனுக்கு கொடுத்து அவன் நல்லவன்தான்….உன் லைஃப் இன்னும் நல்லாத்தான் இருக்குது என பாசிடிவாகவே விஜிலாவிடம் பேசுறது நல்லது…. என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மனோ.

அதான் உங்க வர்ஷனோட தம்பி என்றே மித்ரனை விஜிலாவிடம் குறிப்பிட்டாள். விஜிலாவுக்கும் இந்த பத ப்ரயோகம் புரியாமல் இல்லை….அவளும்தானே வர்ஷன் நல்லவனா இருந்துட மாட்டானா என ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

ஆக சட்டென இதயம் தொட்ட இவ்வார்த்தையில் விஜிலாவின் கண்ணில் நீர் முத்துக்கள் உதயம்… ஆனாலும் இப்பொழுது இதைப் பேச அவள் வரவில்லையே……கல்யாண வீட்டில் பேச வேண்டிய விஷயமா அது? ஆக நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“சாரி மனோ….மித்ரனைப் பத்தி முன்ன நான் கேள்விப்பட்ட எல்லாமே தப்பானதா இருந்துதா…அதான் உன்ட்ட அவங்களைப் பத்தி தப்பா பேசிட்டேன்…..இன்னும் யார் மித்ரனை நாங்கல்லாம் தப்பா நினைக்கனும்னு இவ்ளவு வேலை பார்த்தாங்கன்னு தெரியலை…..மித்ரன்ட்ட என்னால அதெல்லாம் பேச முடியலை…..”

“ஆனா அது அந்த ஆடிட்டரா கூட இருக்கலாம் தான்…அந்த ஆள் அத்தைக்கும் வீட்டுக்கும் படு க்ளோஸ் ரொம்ப வருஷமாவே…..”

“பட் எது எப்படியோ இப்ப நடந்த விஷயத்தில் நிச்சயம் மித்ரனை பாராட்டியே ஆகனும்….அதோட அவங்களோட கேர்….உன் சேஃப்டினு மட்டும் யோசிக்காம உன் அம்மா அப்பா….அண்ணா அப்டின்னு ஒவ்வொருத்தருக்காகவும் யோசிச்சு….இடையில எனக்காகன்னும் பார்த்து…..”

“ஆனா இந்த சிச்சுவேஷன்லயும் நீ மித்ரனை நம்பி….அவங்க கூட இவ்ளவு கோ ஆப்ரேட் செய்துருக்க…..உங்க ரெண்டு பேருக்கும் இடையில உள்ள அண்டர்ஸ்டாண்டிங் அலாதிதான்….அதான் இன்னைக்கு இந்த ப்ரச்சனைய சால்வ் பண்ண முடிஞ்சதோட முக்கிய காரணமே…. மித்ரன் உன்னை விரும்புறதுல எந்த ஆச்சர்யமும் இல்லை……ஆனா நீ அவங்களே தன்னை மோசம்னு காமிச்சுகிட்ட போதும் நம்பினது நிச்சயமா பெரிய விஷயம்தான்….. ”

“ஆனா நான் மித்ரன் தப்பானவங்கன்னு நினைக்க உறுதியா எந்த ஆதாரமும் இல்லாமலே ஆரம்பத்துல இருந்தே தப்பா நினைச்சிறுக்கேன்……உன்ட்ட வேறை அதை சொல்லி அவங்களுக்கு எதிரா என்னலாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்துறுக்கேன்…..இத்தனைக்கும் பிறகும் எனக்கு எது நல்லதுன்னுதான் நீங்க ரெண்டு பேருமே நினச்சிறுக்கீங்க…..சாரி வெரி சாரி…”

இது ஒருவகையில் நிஜமான மன்னிப்பு யாசகம்…..அவன் என்ட்ட நல்லவனாதான் இருந்திருக்கிறான்…..நான் நியாயமா நடந்துக்கலையே என்ற புலம்பல்தான் இது….. என்றாலும் இதில் ஒரு உள்குத்தும் இருக்கிறது என மனோவுக்கு தெரிகிறது….வரிகளுக்கு இடையில் வாசிப்பது என்பார்களே அது போல் பார்த்தால் புரிகிறது…..

மித்ரன் பத்தி முன்னால கேள்விபட்ட எதுவும் பொய்தானா இல்லை நிஜாமான்னு இன்னும் கூட ஆதாரபூர்வமா எனக்கு தெரியாது….மித்ரன் அது பத்தி என்ட்ட எதுவும் சொல்லலை…..அந்த ஆடிட்டர்தான் அப்டி மித்ரனை பத்தி மோசமா நம்ப வச்சிறுக்கலாம்னு படுதுதான் …..ஸ்டில் கன்ஃபார்மா தெரியாது….ஆனால் இப்ப நடந்த எதிலயும் மித்ரனை குறை சொல்ல முடியாது……அதோட நான் மித்ரனை தப்பா நினைக்கவும் என்ட்ட உறுதியா எதுவும் இல்லை…..இருந்தும் நான் தப்பா நினைச்சு…அவனோட காதலை வரை கலைக்க ட்ரை பண்ணியிருக்கேன்….இருந்தும் அவன் எனக்கு நல்லது நினைச்சிறுக்கான்…..இப்படித்தான் இந்த செய்தி புரிந்தது மனோவுக்கு…

விஜிலா மித்ரனை நம்பி முழுதாக மன்னிப்பு கேட்டிருந்தால் விடுங்க விஜிலா…..இதுல என்ன இருக்கு….சிச்சுவேஷன் இப்டி அமஞ்சுட்டுன்னு சாதாரணமா சொல்லிட்டுப் போயிருப்பா மனோ….. இன்னும் மித்ரனை நம்பலைனா….???? மனோவை அங்க மும்பைல விட்டுட்டு இங்க இந்த விஜிலாகாகதானே ஓடி வந்திருப்பான் மித்ரன்….மத்தபடி வெறும் அரெஸ்ட் செய்ற வேலைனா…இங்க இருந்த யாரையாவது செய்ய சொல்லி இருக்கலாமே…?????இது மனோவை ப்ரவோக் செய்துதான….?

“விடுங்க விஜிலா….விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது இயலாத காரியம்னு தெளிவா பைபிள்ள இருக்குது……ஆனாலும்….யேசப்பா சிலுவைய ஏத்துக்குறதுக்கு முன்னால நம்பர் ஆஃப் டைம்ஸ் நான் இறந்து மூன்றாம் நாள் உயிரோட எழும்புவேன்னு சொல்லி இருந்தும்…..அவர் சிலுவையில் இறந்ததைப் பார்க்கவும்…..எங்க தங்களையும் அரெஸ்ட் பண்ணி கொன்னு போட்டுடுவாங்களோன்னுதான, எல்லா சீஷரும் பயந்து போய் ஒளிஞ்சுகிட்டாங்க…. யேசப்பா அதுக்கு முன்னால அவ்ளவு மிரகிள் செய்திருந்தும்….அவர்  திரும்ப வருவேன்னு சொன்னதை யாருமே அந்த நேரம் நம்பலையே…..ஏன்னா என்னதான் அவர் சொல்லி வச்சிருந்தாலும் கண்ணு முன்ன தெரியுற காட்சியோட பலம் அது…அதை தான் நாம ஈசியா நம்புவோம்…..ஆக மூனாவது நாள் அவர் உயிரோட எழும்பவும்…..நீ என்னை நம்பலைல……எனக்கு உன் மேல இனி பிரியம் இல்லைனு கடவுள் விட்டுட்டுப் போகலையே….திரும்பவுமாய் தன் சீஷர்களை தேடிதான வந்தார்….அவரைப் பார்த்த பிறகுதான அவங்க பயம் போய் ஒளிஞ்சி இருந்த இடத்தைவிட்டு வெளிய வந்தாங்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.