(Reading time: 9 - 18 minutes)

ன் காதலை ஆதாரமாக்கி ஒரு பெண்ணின் மேல் சினத்தை காட்டி அவள் வாழ்க்கையை நரகமாக்க அவன் விழையவில்லை.

அவள் தன் குடும்பத்திற்கு நல்ல மருமகளாய் இருக்கட்டும்!எனக்கும் நல்ல தோழியாக இருக்கட்டும்!!மனைவி என்ற பந்தம் அவள் மேல் காதல் வரும்வரை காத்திருக்கட்டும்!!மனதில் எண்ணினான் அவன்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

அவன் மனம் தடுமாறியது!!

உள்ளே அமைதியாக நுழைந்தாள் அனு!!அவனை ஏறிட்டு பார்த்தவள்,அமைதியாக உள்ளிருந்த மற்றொரு அறைக்குள் சென்று உடை மாற்றி எப்போதும் போல சாதாரண சுடிதாரில் வந்தாள்.அவன் ஏதும் புரியாமல் பார்த்தான்.

"என்னாச்சுங்க?ஏதோ பேயை பார்க்கிறா மாதிரி பார்க்கிறீங்க?!"

"அது..வந்து...நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"ம்...நான் சொல்றேன்!நமக்குள்ள இப்போ இதெல்லாம் வேணாம்!எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.முதல்ல ஃப்ரண்டஸ்ஸா இருப்போம்!நான் இயல்பான அப்பறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்.இதுதானே!"

-அவன் ஆச்சரியத்தில் தலையசைத்தான்.

"இதை நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டீங்க!மறுபடியும் வேணாம்!"

"உனக்கு கோபம் வரலை?"

"ம்..எதுக்கு வரணும்?நீங்க கேட்கிறது நியாயம் தானே!அதுவும் இல்லாம நீங்க என் உணர்வுகளை மதித்து உண்மையை சொல்லிருக்கும் போது,உங்க உணர்வை மதித்து உங்க தேவையை நான் பூர்த்தி பண்ண கூடாதா?"-அவளின் பேச்சு அவனுக்கு பிடித்து போனது!!

"பயப்படாதீங்க!நான் நம்ம டீலிங் பற்றி யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!"-மெல்லிய குரலில் கூறினாள்.அவன் மெல்லியதாய் புன்னகைத்தான்.நீண்ட நாட்களுக்கு பின் திரும்பிய புன்னகை அது!!

"நீ எப்போதும் இப்படி தானா?"

"அப்படின்னா?"

ஐ மீன்...இப்படி தான் துருதுருன்னு இருப்பியா?"

"இல்லை...நீங்க புது ஆள் தானே!அதான் கொஞ்ச அடக்க ஒடுக்கமா இருக்கேன்!"-அவன் மேலும் கீழும் பார்த்தான்.

"அடக்க ஒடுக்கம்!சரிதான்!!"

"ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க.அண்ணி சொல்லி இருக்காங்க!

நீங்களும் நிறைய சேட்டை பண்ணி அத்தைக்கிட்ட அடி எல்லாம் வாங்கி இருக்கீங்களாம்!"-அவன் அவளை முறைத்தான்.

"எப்போ சொன்னா?"

"அவங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல!"

-அவன் தொண்டையை செறுமினான்.

"நமக்குள்ள இருக்கட்டும்!வெளியே போக கூடாது!"

"சரி...சரி...!!"அவர்களின் காதல் பயணத்திற்கு அவர்களின் உரையாடலே விதையாக அமைய கூடும்!!

ண்களில் சிந்திய கண்ணீரை துடைத்தான் ராகுல்.மனம் தங்கையின் பிரிவில் உடைந்தாலும்,அந்த வலியும் இன்பம் தந்தது.

"ஏங்க...பால் எடுத்துட்டு வரவா?"-கேட்டப்படி வந்தவள் அவன் தனிமையில் இருப்பதை கண்டாள்.

"ஏன் இவன் தனிமையை நேசிக்கின்றான்?முதலில் இதிலிருந்து இவனை மீட்க வேண்டும்!"

"என்னங்க?"

"ம்.."

"பால் எடுத்து வரவா?"

"இல்லை வேண்டாம்!"

"என்னாச்சுங்க?"

"ஒண்ணுமில்லை...சும்மா தான்!"

".............."

"சதி!"

"ம்?"

"நான் உனக்கு ரொம்ப கஷ்டம் தரேனா?"

"என்ன நீங்க?பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?"

"பதில் சொல்லு சதி!"

"நீங்க இப்படி கேட்கிறது தான் உண்மையிலே கஷ்டமாக இருக்கு!"-அவன் இக்கேள்வியை கேட்க காரணம் ஒன்று உண்டு!!

அனு திருமணத்திற்கு முதல்நாள் மது தன் உறவுகளோடு பேசுகையில் ஒரு பெண்,

"ராகுலுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்!விஷேஷம் எதாவது இருக்கா?கல்யாணமாகி ஆறு மாசத்துக்கு மேல ஆயிடுச்சே!"

"இல்லை..விஷேஷம் எதுவுமில்லை!அவங்க குழந்தை பிறக்கிறதை கொஞ்சம் தள்ளி போட்டிருக்காங்க!"

"என்னமோ!நான் கூட பொண்ணுக்கிட்ட குறையோன்னு நினைத்தேன்!"

"ஏன்?தீக்ஷாக்கிட்ட தான் குறை இருக்கணுமா?என் பையன்கிட்ட இருக்க கூடாதா?"-சற்றே கோபமாக கேட்டார் மது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.