(Reading time: 21 - 42 minutes)

ல்லது கண்களை மூடி வெறுமனே படுத்திருக்கிறாளா தெரியவில்லை.விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அழகுச் சிலையாய் ஒரு தேவதைபோல் படுத்திருந்த அபரஞ்சிதாவை இன்று ஏனோ குதிரைவீரன் சீண்டவில்லை.அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.மனம் முழுதும் சிந்தனை,குழப்பம்,இனம் புரியாத கலக்கம்.இல்லாவிட்டால் முப்பத்தாறு,இருபத்தெட்டு,முப்பத்தாறு அளவுகள் கைக்கெட்டும் நெருக்கத்தில் இருக்கையில் இப்படி இருப்பானா?

இன்னேரம் அபியிடம் அடிபெண்ணே..நாம் ஒரு கூட்டுக் கிளிகள்..என் மனம் கொய்தாயடி அபி..இத்தனை நாளாய் நீ எங்கிருந்தாயடி?..என் நெஞ்சோரமா நெஞ்சோரமா..அன்பே உந்தன் சஞ்சாரமே..என்னுள் நிறைந்தவளே..என்னை ஏதோ செய்து விட்டாயடி..காதலை உணர்ந்தேன் உன்னிடமே அபி..என் மனதைத் தொட்டவளடி நீ..உனை நினத்தாலே இனிக்கும்..உனக்காகவே நான் மண்ணில் வந்தேன்..உனக்காகவே மகுடம் சூடினேனடி..என்று அவன் அவளைக் கொஞ்ச...அவள் அனல் மேலே பனித்துளி அடங்குவதைப் போல்..சதியென்று உன்னைச் சரணடைந்தேனடா என்று  அவனுள் அடங்கிப் போயிருக்கமாட்டாளா?

அமிழ்தினும் இனியவள் நீ என்று அவன் அவளின் காதோரம் கிசுகிசுக்க.. மலர்கள் நனைந்தன் பனியாலே எனச் சொல்வது போல் உன் அன்பில் உன் காதலில் நான் நனைந்தேனடா.. இந்தப் பூமகளின் தேடலாய் நீ வந்தாயடா என அவள் சொல்ல அங்கே நனையாதா? நதியின் கரைகள்..?ஸ்ருங்காரச் சீண்டல்களும் சில்லென்ற ஊடல்களுமாய் இன்னேரம் மஞ்சத்தில் ஒருகாவியம் அல்லவா நடந்தேறி இருக்கும்?

இதுபோல் எதுவும் நடக்கவில்லை அன்று.மிக அமைதியாகவே இரவு கழிந்து கொண்டிருந்தது.தனது கணவன் ஏதோ குழப்பத்தில்,சிந்தனையில் இருக்கிறான் என்பதைக் கண்ட அபரஞ்சிதா அவனைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாய் இருந்தாள்.சற்று நேரத்தில் உறங்கிப்போனாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

குதிரை வீரனுக்கு நெடு நேரம் நித்திரை வரவில்லை. அவன் மனம் அவனிடமே கேள்வி கேட்க ஆரபித்தது.

...........நீ இன் நாட்டுக்கு எதற்காக வந்தாய்?இவ்வரண்மனைக்குள் எதற்காக நுழைந்தாய்?நீ எதன் பொருட்டு இவ்விடம் வந்தாயோ அந்த காரணத்திற்கான காரியத்தை முடிக்க ஆரம்ப வேலையை ஆரம்பித்து விட்டாயா?..

ஏன் இல்லை?நான் கொஞ்சமும் எதிர்பாராமல் இன்னாட்டு இளவரசி எனக்கு மனைவியாகிவிட்டதோடு  நான் இன்னாட்டு மன்னனாகவும் ஆகிவிட்டேனே?இது போல் யாருக்கு வாய்க்கும்..?இப்படி யாருக்கும் நடக்க வாய்ப்பில்லாத இன்னிகழ்வுகள் எனக்கு நடந்திருப்பது இறைவன் அருளாலா அல்லது..அல்லது என் பாட்டியின் ஆசியாலா?அவன் மனமே அவன் மனத்திடம் திரும்பக் கேட்டது.

பாட்டீ..அவனை அறியாமலே அவன் வாய் முணுமுணுத்தது.தன் ஐந்து வயது பிராயத்தில் ஒரளவு பிறர் சொல்லுவதைப் புரிந்து கொள்ளும் திறன் வந்த பிறகு பாட்டி தன்னை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு

............என் செல்லமே,என் பேரா..நீ வளர்ந்து வாலிபனான பின் இந்தப் பாட்டியின் விருப்பத்தை, கனவினை நிறைவேற்றுவாயா?என் அன்புப் பேரா..............என்று பாட்டி பேரனாகிய தனக்கு தான் வைத்த பெயரைச் சொல்லி அழைக்கு போது அந்த பெயரை உச்சரிக்கு போது எவ்வளவு வாஞ்சையாய் பாசமாய் நா தழுதழுக்க அழைப்பார்.அப்பெயரை உச்சரித்துத் தன்னை அழைக்கும் போதெல்லாம் அவர் கண்களில் கண்ணீர் தளும்புவதைப் பார்த்திருக்கிறேனே?பாட்டியின் கடைசி மூச்சு பிரியும் நேரம் கூட அவர் தன் கைகளைப் பிடித்துக் கொண்டு அன்புப் பேரா என் செல்வமே..என் கனவை என் ஆசையை நிறைவேற்றுவாயா?என்று கண்ணீர் மல்க கேட்கவும் அவரின் ஆவி பிரியவும் சரியாய் இருந்ததே என்ற நினைவு அச்சமயம் குதிரை- வீரனுக்கு வந்தது. பெரும் நெடுமூச்சு ஒன்று அவனிடமிருந்து வந்தது.

பாட்டி காலமான பிறகு அவன் வளர்ந்து வாலிபனான பிறகு பாட்டியின் கதை அவனது தந்தையால் அவனுக்குச் சொல்லப் பட்டபோது அவன் பிரமிப்பின் எல்லைக்கே சென்றான்.எப்படியும் பாட்டியின் கனவை அவரின் ஆசையை நிறைவேற்றுவதென உறுதி கொண்டான்.

அந்த உறுதியை செயலாக்க நினைத்து இதோ இந்த நாட்டுக்கும் வந்தாயிற்று.அரண்மனைக்குள் நுழைந்து இளவரசி அபரஞ்சிதாவையும் மணந்தாயிற்று ஏன் இன்னாட்டுக்கு மன்னனாகவும் முடிசூட்டிக் கொண்டாயிற்று.இதெல்லாம் எப்படி சாத்திய மாயிற்று?கனவு போலல்லவா இருக்கிறது?இன்னாட்டுக்கு மன்னாகிவிட்டபடியால் தான் கருதி வந்த காரியம் எளிதாக நிறைவேறி விடுமா?தான் யார்?தன் பெயர் என்ன?தான் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?என்ன காரணம் கருதி இன்னாட்டுக்கு வந்திருக்கிறேன் என்ற உண்மை பெரிய மன்னருக்குத் தெரிந்தால் தன் கதி என்னவாகும்? எத்தகு தண்டனையை அனுபவிக்க நேரிடும்?இன்னாடு மட்டுமின்றி பக்கத்து நாடுகளும் தன்னைப் பற்றி அறியுமானால் அன்னாடுகள் என்ன முடிவுக்கு வரும்?தன்னால் எற்படப் போகும் விளைவுகள் எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கும்?எனப் பலவாறு அவன் மனம் சிந்தித்துக் குழம்பியது.என்ன ஆனாலும் சரி எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும இனியும் வாளாவிருக்கக் கூடாது.நாளை காலை பெரிய மன்னரிடம் இது பற்றிப் பேசவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட குதிரைவீரன் அந்த விடிகாலைப் பொழுதில் தன்னை அறியாமல் உறங்கிப்போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.