(Reading time: 18 - 35 minutes)

"ப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம். இப்போதான் பக்கத்து வீட்டு அன்ன போன் பண்ணுனாங்க. பயமா இருக்கு மது. அப்பாக்கு ஒண்ணும் ஆகாதுல " என்று அழுதவளை சமாதனம் செய்து அவளுக்கு குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்த மது உடனடியாக சரணை அழைத்து விவரத்தை சொன்னவள், திவ்யாவையும் சரணுடன் பேச வைத்தாள். அங்கே எல்லாவற்றையும் தான் பார்த்து கொள்வதாகவும் உடனே மருத்துவமனை சென்று அவள் தந்தையின் உடல் நிலை குறித்து தெரிய படுத்துவதாகவும் சொன்னவுடன் தான் சிறிது ஆசுவாசப்பட்டவள் முகத்தை பார்த்த மது, அவளிடம் கேட்காமலே அடுத்து இருந்த ப்ளைட்டில் டிக்கெட் புக் செய்தவள், தங்கள் டீம் லீடரிடம் சென்று விபரத்தை கூறி அவளுக்கான விடுமுறை அனுமதியையும் பெற்று கொண்டு தன் இருப்பிடம் வந்தவள் திவ்யாவிடம் விபரத்தை கூறினாள்.

திவ்யாவிற்கு அவளுடைய தந்தையை சென்று பார்க்க வேண்டும் என்பது ஒருபுறம் என்றால் மதுவை தனித்து விட்டு செல்லவும் ஏனோ மனம் வரவில்லை.

அதற்குள் சரணிடம் இருந்து அழைப்பு வர அவனுடன் பேசியவள் தன் தந்தை ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டார் எனவும் ஆனாலும் இன்னும் இரு நாட்கள் ஐசியுவில் இருக்க வேண்டும் எனவும் அறிந்தவள் அந்த ப்ளைட்டில் கோவையை நோக்கி பயணித்தாள் ஆயிரம் முறை மதுவை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

திவ்யா இல்லாத அறையின் தனிமை மதுவிற்கு கஷ்டமாக இருந்தது. எத்தனை இனிமையாக துவங்கிய நாள் இப்படி முடியும்படி ஆகிவிட்டதே என்று வருந்தியவள் திவ்யாவை அழைத்து அவள் தந்தையின் உடல் நலன் குறித்து விசாரித்து விட்டு, சரணிடமும் அவளுக்கு வேண்டிய உதவிகளை அவள் கேட்க தயங்கினாலும் இவன் அவளுடனே இருந்து எல்லா உதவிகளையும் செய்யுமாறு சொல்லிவிட்டு அன்று இரவு தனிமையில் பயத்தினால் உறக்கம் கொள்ளாமல் விடியும் வரையுமே விளக்கை எரிய விட்டே உறங்கினாள்.  இப்படியே இரண்டு நாட்கள் கழிய, மதுவும் இன்னும் இரண்டு நாட்களில் தானும் மதியை சந்திக்க போகிறோம் என்ற நினைவுடனே அலுவலகம் சென்றவள் எப்போதும் போல வீட்டில் உள்ளவர்களிடமும் திவ்யாவிடமும் பேசிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

இந்த வாரம் அவர்களுடைய ப்ராஜெக்ட் ரிலீஸ் இருப்பதுடன் திவ்யாவின் வேலைகளையும் இவளே சேர்த்து செய்வதால் எப்போதும் கிளம்புவதை விட சற்று தாமதமாகவே ஆபீசில் இருந்து கிளம்பியவள் வெளியே வந்து டாக்ஸிக்காக  காத்திருந்த மது கடந்த அரை மணி நேரமாக டிராபிக் என்று காரணம் சொல்லி வர தாமதிக்கும் டாக்ஸி டிரைவரை மனதிற்குள் திட்டியவாறே சற்று கலவரத்துடனே நின்றிருந்தாள். அப்போது அவளின் முன்னே சர்ரென்று வந்து நின்றது ஒரு கருப்பு நிற கார். ஏற்கனவே சற்று பயத்துடனே நின்றிருந்தவள் எதிர்பாராமல் வந்து நின்ற காரை கண்டு சற்றே மிரண்டாலும் அதை வெளிகாட்டிகொள்ளாமல் நிற்க, காரின் கண்ணாடியை கீழிறக்கி விட்டு பின் சீட்டில் இருந்து ஹாய் என்றான் கிரண்.

திவ்யா இல்லாத இந்த இரண்டு நாட்களாக மதுவுடன் பேச முயன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தான்.மதுவினாலும் ஓரளவிற்கு மேல் அவனை விளக்கி நிறுத்த முடியவில்லை. இது போன்ற ஐடி நிறுவனங்களில் ஒருவரை முழுவதுமாக விளக்கி நிறுத்தி வைப்பது என்பது அதுவும் ஒரே ப்ராஜெக்டில் இருக்கும் போது மிகவும் கடினம். அவளும் அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு நிறுத்தி கொண்டாள்.

காரிலிருந்து கிரண் இறங்கவும் அவளும் நட்புடன் புன்னகைத்து ஹாய் என்றாள்.

"என்ன மது டாசிக்காக வைடிங்கா ?"- கிரண்

"ஆமாம் ரொம்ப நேரமா வெயிட் பண்றேன் இன்னும் வரலை. " -மது

"ஓ நான் நினைக்கிறேன் அவன் சில்க் போர்டுல இருந்து வரான்னு. இப்போதான் என் பிரெண்ட் சொன்னான். அந்த ஏரியால டிராபிக் ரொம்ப அதிகமா இருக்கு. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் அப்படின்னு. அதான் அவனுக்காக இத்தனை நேரம் காத்திருந்த நான் கெளம்பிட்டேன். நீயும்  டாக்ஸி வந்ததும் பார்த்து போ. இப்போவே மணி பத்து ஆயிடுச்சு. டாக்ஸி வர பதினொரு மணி ஆயிடும்." என்று கூறியவன் சரி நான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு தன் டிரைவரிடம் வண்டியை எடுக்க சொன்னான்.

மதுவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் எப்படி இங்கே தனியாக நிற்பது. அதுவும் அந்த நேரத்தில் எப்படி ஒரு தசியில் பயணிப்பது என்று. பேசாமல் நாம் கிரணிடம் உதவி கேட்டால் என்ன, யாரென்றே தெரியாத டாக்ஸி டிரைவரை நம்பி செல்வதை காட்டிலும் உடன் வேலை செய்யும் இவனிடம் உதவி கேட்கலாம் என்று அவனின் உண்மை குணம் தெரியாமல் தன் வாழ்நாளின் மிகப்பெரிய தவறை செய்தாள் மது.

"கிரண் என்னை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா ? ப்ளீஸ் " -மது

கிரண் மதுவை நன்றாக புரிந்து வைத்திருந்தான். அவளின் பயமும் தானாக கூப்பிட்டால் வர மாட்டாள் அவளே தன்னுடன் வர வேண்டும் என்று தான் அவளிடம் அப்படி பேசி அவன் அவளை குழப்பியது.

"ஆஹா தானே வந்து என் வலையில் விழும் இந்த பட்டாம் பூச்சியின் சிறகுகள் இன்று என் கைகளில் " என்று எண்ணியவன் சற்று யோசிப்பதை போல பாவனை செய்து விட்டு "எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை ஆனா நான் கொஞ்சம் வேற வழியில போவேன் ஏன்னா எப்பவும் போற ரூட் டிராப்பிக்கா இருக்கு " என்று யோசிப்பவனைப்போல அடிப்பார்வையாக மாதவி பார்த்தான். மதுவின் முகத்தில் கலவரத்தை கண்டவன் "உனக்கு ஏதும் பிரச்சனை இல்லைனா என் கூட வா" என்று கூற, சற்றே நிம்மதியுடன் அவன் காரின் பின்சீட்டில் ஏறி அமர்ந்தால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.