(Reading time: 19 - 38 minutes)

வீட்டிற்கு வர இருந்த நிமிடங்களில் சற்று தெளிந்தவள், குருமூர்த்தியிடம் இதை தானே நீங்க எதிர்பார்த்தீங்க என்று கூற, அவருக்கும் மகத் கையினால் கட்டிய தாலியை இனி தன் மகள் சுமக்க வேண்டியதில்லை என்ற நிம்மதி பரவியது நெஞ்சில்…

அவரிடம் பேசிவிட்டு அறைக்குள் சென்றவள், அவரின் அந்த நிம்மதியினையும், தான் நிம்மதி இல்லாது இந்தரின் நினைவுகளில் மூழ்கி கிடக்கும் உண்மையும் புரிந்து அழுதாள் வெகுநேரம் யாருக்கும் தெரியாமல்…

காவேரியோ தான் செய்த தவறினை தானே சரி செய்து விட்டேன் என்ற வார்த்தைகளோடு அங்கிருந்து அகன்றார்… ஆனால், அவருக்கு மட்டுமே தெரியும், அவர் ஏன் அப்படி ஒரு காரியத்தை செய்தார் என்று…

கோபத்தில் கன்யா, ருணதியின் தாலிச்செயினை எடுத்து காட்டிய போது, அதை மகத் மட்டும் பார்க்கவில்லை… காவேரியும் பார்த்துவிட்டார்… எந்த டாலரை அவர் மகத்தின் செயினில் கோர்த்து போட்டு விட்டாரோ, அந்த டாலர், ருணதியின் கழுத்தில் அதுவும் தாலிச்செயினில்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

வெறும் செயினோடு இருந்த மகத்திடம் டாலர் பற்றி கேட்டபோது, மதர், அது என அவன் திணற, அவருக்கு அந்த திணறல் புதிதாய் தெரிந்தது… அவன் அப்படி எதையும் தொலைக்கும் ரகமும் இல்லை… எனில் அந்த டாலர் எங்கே என பலநாள் அவருக்குள்ளே அவர் கேட்டுக்கொண்ட போதும் பதில் தான் கிடைக்காமலே இருந்தது… அது ருணதியின் வடிவில் அவருக்கு கிடைத்துவிட, அந்த பதிலில் அவர் ஊமையாகி போனார்…

எதனால் அன்று மகத் கன்யாவின் கழுத்தில் தாலி கட்ட மறுத்தான் என்ற காரணமும் அவருக்கு அந்த நொடி விளங்கிவிட, அப்பட்ட அதிர்ச்சி அவரின் மனதில்…

எனில் என் ராஜாவிற்கு நானே இப்படி ஒரு பாவத்தை செய்து விட்டேனா?.... என்று புழுங்கியவரை கன்யாவின் வார்த்தைகள் ஆம் என்று உணர்த்த, ஒரு முடிவோடு அவளை நெருங்கியவர், தான் செய்த தவறை திருத்திக்கொள்ளும் வண்ணம், கன்யாவிற்கு கொடுத்த உரிமையை அவரே பறித்தார்…

மேலும், தான் அந்த டாலரை பார்த்துவிட்டதாக யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் இருந்தவர், ருணதிக்கும், ஜிதேந்தருக்கும் என்ன உறவு என்று அறிந்து கொள்ள துடித்தார்… அந்த நேரத்தில் கன்யா அவரைத் தேடி வந்து பேசியது அவரை அலைக்கழிக்க, அவர் மனம் கன்யாவிற்காக துடித்தது… எனினும், மகத்துடன் ருணதியை சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் சிறிதும் மாறவில்லை அவருக்கு… மேலும் மகத்திடம் கன்யாவின் காதலனை பற்றி சொல்லி அவனைத்தேடி அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரின் மனதில் உறுதியாக பதிந்தது…

அந்த நிலையில், ருணதியின் வாழ்வு சிக்கல் கதைகள் அவருக்கு தெரியவர, அவரின் மனம் வைஷ்ணவிக்காக பரிதாபப்பட்ட அதே நேரத்தில், மகத்தினையும் ருணதியையும் விரைவில் சேர்த்திடவும் ஏங்கினார்…

அந்த ஏக்கம் இப்போது மகத் சொன்ன விஷயத்தில் மேலும் உறுதியானது…. தான் தேட சொல்ல வேண்டும் என்றெண்ணிக்கொண்டிருந்த கன்யாவின் மனம் கவர்ந்தவன் ஜிதேந்தர் தான் என்று தெரிய வர, வைஷ்ணவி விஷயம் அவருக்கு நெருடலாக இருந்தது… எனில் கன்யா தான் அவனை விரும்பினாளா?... ஜிதேந்தர் விரும்பவில்லையா?... எனில் அவள் வாழ்வு?... ஜிதேந்தரின் குழந்தை?.... என பலவாறு யோசித்தபடியே நின்றிருந்தவருக்கு, அதற்கு மேலும் அவளை தள்ளிவைக்க மனதில்லாது போக, அவளை அணைத்துக்கொண்டார்…

குருமூர்த்தியின் வார்த்தைகளால் காயப்பட்டு சென்றவன், நேரே சந்தித்தது ராஜேஷையும், தருணையும் தான்…

தருணின் நண்பனின் மூலம் தான் கன்யா அவனுக்கு அறிமுகமானாள்… அதைத்தொடர்ந்து அவர்களின் காதல் விவகாரமும் தருணுக்கும் ராஜேஷிற்கும் தெரியவந்தது… இருவரும் சந்தோஷமே பட்டனர்..

தங்களின் நண்பனுக்கு நல்லது நடக்கப்போகிறது என்ற எண்ணமே இருவரின் மனதிலும் மேலோங்கி இருந்த நேரத்தில் ஜிதேந்தருக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரியவர, இருவருமே கொதித்தனர்…

அவனை ஒருவழியாக சமாதானப்படுத்தி, சீக்கிரமே கன்யாவிடம் பேசலாம்டா… என தைரியம் கொடுத்தனர் இருவரும்…

ந்த சில மாதங்களில் ஜிதேந்தர் தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டான்… தான் நடுத்தர வர்க்கம், என்பதால் தானே அவர் என்னிடம் அப்படி பேசினார்… நானும் பணமும், புகழும் கொண்டிருந்தால், என் வினயாவை நான் இந்நேரம் மணந்திருப்பேனே… என்றெண்ணியவனுக்கு அவளின் நினைவுகளே முழுதும் ஆக்கிரமிக்க, அவன் தவித்தான்…

அப்போது தருண் காதலித்த பெண்ணுடன் ஏதோ மனக்கசப்பு ஏற்பட, அவள் அவனை விட்டு விலகி இன்னொரு வசதியானவனை கைப்பிடிக்க, அவன் மனதில் பணக்கார பெண்கள் இப்படித்தான் என்ற எண்ணம் புகுந்துவிட, போதாக்குறைக்கு ஜித்தின் விவகாரமும் சேர்ந்து அவனை பெண்களை வெறுக்க வைத்தது… அதன் விளைவு அவன் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.