(Reading time: 19 - 38 minutes)

வைஷ்ணவியை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் மனதில் வந்த நொடியில் இதற்காகவா உன்னை சந்தித்தேன்?... முதலில் வினயா, இப்போ நீயா?... என் வினயாவை நான் உன்னுள் கண்டேனேடி… இப்படி என்னை தவிக்க விட்டு போவதற்கு தானா நீ என்னை தேடி வந்தாய்?... என உடைந்தே போனான் அவன்…

அந்த நேரத்தில் அவன் மனது உன் வினயாவும் உன்னை விட்டு போகவில்லை… வைஷ்ணவியும் போகவில்லை… இதோ இருக்கிறாள் தானே ருணதியின் வடிவில்… என்று எடுத்துக்கொடுக்க, அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் தருணும் பேச, ஜித்தின் மனதிற்குள் இருந்த காதல் வெறியாக மாறியது… எப்படியாவது ருணதியை திருமணம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் மனதினுள் மலை என எழ, அவன் அதை கொஞ்சம் கொஞ்சமாக தருணின் தவறான திட்டங்களின் மூலம் செயல்படுத்த துவங்கினான்…

அதில் ஒன்று தான், அவன் பெற்ற குழந்தையை, அவனே கடத்த சொன்னது… எவ்வளவோ போராடியும், ராஜேஷினால் ஜித்தினை திருத்த முடியவில்லை…

அந்த சமயத்தில் தான் எதேச்சையாக ராஜேஷ் மகத்தினை பார்த்தான்… கே.என் மருத்துவமனைக்கு அவன் ஒரு சிகிச்சைக்கு வந்த போது மகத்தினை சந்தித்தவன், மேலும் ருணதிக்கு பாதுகாப்பாக இருப்பது அவன் தான் என்ற எண்ணமும் வர, அவனிடம் மனது கேட்காமல் ஜித்-வைஷ்ணவி, பற்றி சொன்னான் ராஜேஷ்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என் நண்பன் நல்லவன் தான் சார்… அவன் சந்தித்த சில நிகழ்வுகள் அவனை இப்படி ஆக்கிவிட்டது என்றவன், பேசிக்கொண்டிருக்கும்போது, உங்க வொய்ஃப் கன்யா எப்படி இருக்குறாங்க சார்… உங்க பொண்ணு எப்படி இருக்குறாங்க… என தெரிந்த நபர் ஒருவர் கேட்க ராஜேஷ் தூக்கிவாரிப்போட மகத்தினைப் பார்த்தான்… அவனின் அந்த அதிர்வினை கண்டு கொண்ட மகத் அவனிடம் என்ன என்று கேட்க, அவன் முதலில் மறுத்தான்… பின், ருணதியின் வாழ்க்கையை தன்னிடம் சொன்னவனிடம், அவன் உண்மையை சொன்னான்… கன்யா தன்னுடைய மனைவி இல்லை என… அதிர்ச்சியுடன் சந்தோஷமும் ஒன்று சேர, ராஜேஷ், கன்யா-ஜித் விஷயத்தை சொல்ல, மகத் அதிர்ந்தே போனான்… எனில் கன்யாவின் வாழ்வு இதனால் மீண்டும் மலர்ந்திடும் என்றெண்ணி மகிழ்ந்தான்…

உண்மைகளை சொன்ன ராஜேஷிடம் மனமார நன்றி கூறியவன், இதைப்பற்றி இப்பொழுது யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கூறிவிட, அவனும் சரி என்றான்…

குழந்தையை கடத்தியது யார் என்ற குழப்பத்தில் மகத் இருந்த போது ஒருவேளை ஜித் செய்திருப்பாரோ என்ற எண்ணம் வந்த நேரத்தில், ராஜேஷ் வந்து சொன்ன விஷயத்தில் தெளிவானது மகத்திற்கு அனைத்தும்… மறைந்திருந்த, மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிவர, அவன் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது…

சதாசிவம் தாத்தா வீட்டிற்கு எடுத்துச் சென்ற குழந்தையைப் பற்றி அவர் மகத்திடம் சொல்ல விழைந்த போது, மகத்திடம் காவேரி கெஞ்சிக்கொண்டிருந்ததையும், மகத் மறுத்ததையும், கடைசியில் காவேரியே வேறு வழியில்லாது கன்யாவின் வாழ்க்கையில் மகத்தினை கொண்டு வந்ததையும் கண்கூடாக பார்த்தவர், மகத் வெளியே வந்த போது அவரும் வெளியே வந்து, அவனிடம் கன்யாவின் குழந்தைப் பற்றியும், குருமூர்த்தி பற்றியும் சொல்ல, அவனுக்கு பேரதிர்ச்சி…

குருமூர்த்தியா இப்படி என்று ஒரு நிமிடம் என்றாலும் அவன் அதிர்ந்தது நிஜம்….

அவரின் கௌரவ முகமூடி கன்யா-ஜித்தின் விஷயத்தில் தெரிந்துவிட, இப்போது குழந்தை விஷயத்தில் மேலும் அவரின் உண்மையான முகத்தினை அவன் அறிந்து கொண்டான்…

அந்த குழந்தையை தத்தெடுத்தவன், காவேரியிடத்தில் இவள் என் மகள் இனி என்று சொல்ல முதலில் யோசித்த காவேரி, பின்னர் சம்மதித்தார்…

மகத்திற்கும் அப்போது அக்குழந்தையின் வரவு அவனது காதல் கொண்ட நெஞ்சத்திற்கு துணையாய் இருக்க, அவனது கிருஷ்ணாவின் பெயரை அந்த குழந்தைக்கு வைத்து தன் மகளாகவே வளர்த்தான்….

டந்த நிகழ்வுகள் அனைத்தும் தெளிவாய் அனைவருக்கும் புரிந்துவிட, அங்கே யாருக்கும் அடுத்து பேசும் மனநிலை இல்லை கொஞ்சமும்…

காவேரியின் கைகளுக்குள் இருந்த கன்யாவின் பார்வை இப்போது ஜித்தின் மீது பதிய, அவனின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது…

அவன் அவளை விட்டு சென்று இன்னொரு பெண்ணை மணக்க இருந்தது, இப்போது ருணதியை திருமணம் செய்ய நினைத்தது என அனைத்துமே அவளுக்கு மறந்து தான் போனது… அவன் அவளைத்தானே மற்றவர்களிடத்தில் தேடியிருக்கிறான்…. ஆம்… என்னை தேடியிருக்கிறான்…

என் இந்தர்… என் இந்தர்… என்ற எண்ணமே அவளுக்கு அதுநாள் வரை பட்டுக்கொண்டிருந்த காயத்திற்கு மருந்திட, அடுத்த நொடி,

“இந்தர்….” என கதறியபடி அவனை அணைத்துக்கொண்டாள் கன்யா….

அவளின் அந்த செயல் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகையை உருவாக்க, அனைவரும் அங்கிருந்து வெளியே சென்றனர்…

“வினயா………….. நான்…………..” என பேசத்திணறியவனை மேற்கொண்டு பேச விடாது, “எதுவும் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்…. நான் உங்க வினயா தான்… நீங்க என் இந்தர் தான்… என்னோட இந்தர் மட்டும் தான்…” என சொல்லிக்கொண்டே அவனின் முகம் எங்கும் அவள் முத்தங்கள் பதிக்க, அவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.