(Reading time: 19 - 38 minutes)

ன்யாவை மறக்க முடியாது தவித்த ஜிதேந்தரையும் குடிக்க வைத்து, அவனையும், மாற்ற முயற்சிசெய்தான்…

அவன் முயற்சிக்கும் பலன் இருக்கத்தான் செய்தது… ஜித் குடிக்க ஆரம்பித்தான்… எங்கே அவன் இப்படியே குடித்தால் முழு குடிகாரன் ஆகிடுவானோ என்றெண்ணிய ராஜேஷ் தான் அந்த நேரத்தில், ஜித் அதிலே முழுதும் மூழ்கி விடாமல் தடுத்து அவனை தொழில் தொடங்க ஊக்குவித்தான்…

வெற்றிகரமாக அடிஎடுத்து வைத்த ஜித், ஒரு வருடத்திற்குள்ளேயே சில உயரத்தை எட்டிவிட, அவன் அதுவரை இருந்த அந்த சாதுவான குணமும், அவனை விட்டு அகன்றது… எதிர்க்கும் துணிவும், சட்டென யாரையும் எதிர்த்து பேசும் குணமும் அவனுக்கு வர, ராஜேஷ் அவனது பயந்த சுபாவம் அவனை விட்டு போனதை எண்ணி சந்தோஷப்படுவதா இல்லை இப்படி இவன் அடியோடு மாறிவிட்டானே என்று நொந்து போவதா என்று தெரியாமல் குழம்பி போனான்…

அந்த குழப்பத்தில் அவன் இருந்த போது, தருண் வெளியூர் செல்ல நேரிட, ராஜேஷுடன் ஜித் இருந்தான்… எதேச்சையாக ஒருநாள், ஜித் வைஷ்ணவியை சந்திக்க நேரிட, ராஜேஷ் அவன் மனதை மாற்ற முடிவெடுத்தான்…  கன்யாவின் நினைவிலிருந்து நண்பனை பிரித்து, அவனுக்கும் ஒரு குடும்பம், மனைவி வேண்டுமென்று எண்ணினான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

வைஷ்ணவியை அவன் பார்க்கும் நேரத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொடுத்தான் ராஜேஷ்… முதலில் பிடிமானமே இல்லாமல் இருந்த ஜித், பின்னர், அவளைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு கன்யாவின் நினைவு எழுவதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான்…

“என்னால வினயாவை மறக்க முடியலைடா… அதும் இல்லாம இந்த பொண்ணை நான் ஏன் இப்போ எல்லாம் அடிக்கடி சந்திக்க நேருது… என்னால வினயாவை மறக்க முடியலைடா… அவ எனக்கு வேணும்டா… என் வினயாடா… நான் இல்லாம என்ன எல்லாம் கஷ்டப்படுறாளோ தெரியலைடா…” என ராஜேஷிடம் அவன் தன் உணர்வுகளை தெரியப்படுத்தியபோது, அது நடந்து முடிந்த கதை… அதை முடிந்த வரை மறந்திட பார்… இந்த பொண்ணை பார்த்தால் நல்ல பெண் போல தெரிகிறது… உன் குடும்பத்திற்கும் ஏற்ற மருமகள்டா… உனக்கும் ஒரு குடும்பம் வேண்டும் ஜித்… நீ இவளையே திருமணம் செய்து கொள் ஜித்… நான் உன் நல்லதிற்கு தான் சொல்கிறேன்…” என ஜித்தின் மனதினை அவன் கரைத்துக்கொண்டிருந்த வேளையில் ஊருக்கு சென்றிருந்த தருண் திரும்பிவர, அவன் மனதில் இதெல்லாம் சரிப்பட்டு வராதுடா, முதலில் அவளுக்கு கணவனாக நடந்து கொள், பின், வேண்டுமென்றால் திருமணம் செய்து கொள்… அப்போது தான் என் நிலைபோல் உனக்கு வராது… அவளும் உன்னை ஏமாற்ற மாட்டாள்… என்ற தவறான பாதையை அவன் காட்ட முதலில் மறுத்த ஜித், பின், வைஷ்ணவியிடம் பேசி பழக ஆரம்பித்தான்…

அவளின் ஒவ்வொரு செயலும், வினயாவை நியாபகப்படுத்த, அவன் அவளிடம் ஈர்க்கப்பட்டான் தானாகவே… அவளது அக்கறை கலந்த நேசம் வினயாவை அப்படியே அவன் மனதினுள் கொண்டு வர, அவன் வினயாவை அவளிடம் கண்டான்… யாரிடமும் பட்டென்று பேசிடும் அவனது வினயா, திமிறெடுத்தவள் என மற்றவரிடம் பெயரெடுத்த அவனது வினயா, தைரியத்தின் மொத்த உருவம் வினயா, அவனிடம் மட்டும் அதெல்லாம் துறந்திடுவாள்… அவனிடம் அவள் மனதளவில் குழந்தையாகவே இருந்தாள்… அவன் மேல் உயிராய் இருந்தாள்… வெகுளித்தனமாய் அவன் மீது காதல் காட்டினாள்… அந்த வெகுளித்தனம் அப்படியே வைஷ்ணவியிடம் மொத்தமாக இருக்க, அது ஒன்றே போதுமானதாக இருந்தது அவனுக்கு அவளிடம் தனது வினயாவைப் பார்க்க…

அந்த நேரத்தில், அவளுக்கு மோதிரம் அணிவித்தவன், அவளிடம் கணவன் போலவே நடந்து கொண்டான்… அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் பதிந்தது…

அந்த சமயத்தில் அவன் வெளியூர் செல்ல நேரிட, அவளிடம் பேசினால், எங்கே மீண்டும் அவளிடம் வந்திடுவோமோ என்று தோன்றிவிட, கஷ்டப்பட்டு அவளிடம் சொன்னான் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என… சில மாதங்களில் வந்துவிடுவேனென்றும்….

அவன் சொன்னதும், பிரிவின் துயரில் அழுதவள், சரி ஜித், நீங்க தான் சீக்கிரம் வந்திடுவீங்கள்ள, நான் வெயிட் பண்ணுறேன்… சீக்கிரம் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க… உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… என்று சொல்ல அவன் அவளை விட்டு செல்லவே தடுமாறினான்…

மனமே இல்லாது அவளை விட்டு வந்தவன், அவளை எப்போது திருமணம் செய்து கொள்வோம் என்ற எண்ணத்திலேயே தனது தொழில் விஷயத்தை வெற்றிகரமாக முடித்தான்…

பல மாதங்களுக்குப் பிறகு, அவனுக்கு ஒரு போன் வர, வைஷ்ணவியின் அக்கா என்ற பதிலில் அவளை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்களோ என்ற பயம் லேசாய் மனதில் எழ, விரைந்து புறப்பட்டான் தாயுடன் வைஷ்ணவியைப் பார்க்க…

அங்கே தான் அவனுக்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்தது… ஒன்று வைஷ்ணவி தன் மகனை பெற்றெடுத்திருக்கிறாள் என்பது… இன்னொன்று வைஷ்ணவி உயிரோடு இல்லை என்பது… அடுத்தது அவள் போன்றே இருக்கும் ருணதி… மேலும் வைஷ்ணவி தனது சொந்த மாமாவின் மகள் என்றும் தெரியவந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.