(Reading time: 9 - 17 minutes)

குரலை வைத்தே.பேசியது யாரென்று அவள் ஊகித்திருந்தாள்.

"அண்ணா தூங்கிட்டு இருக்காங்க!"-இவள் குரலைக் கேட்டதும் சில நிமிடங்கள் நிசப்தம்!!அதற்கு மேல் ஏதும் பேசாதவள் இணைப்பை துண்டித்தாள்.

தலையை சிலுப்பிக்கொண்டு தோட்டத்திற்குள் வந்தாள்.

"எழுந்துட்டியா சிவா!"-பக்கத்து வீட்டு பாட்டியின் குரல் கேட்டது.

"ம்...என்ன நீங்க இன்னிக்கு ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டிங்க?"

"ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லைம்மா!!தனியா இருக்கேன்.சின்ன சத்தம் கேட்டாலும் உடம்பு நடுங்க ஆரம்பிக்குது!"

"என்ன பாட்டி நீங்க?எனக்கு ஒரு போன் பண்ணி இருந்தா துணைக்கு வந்து இருப்பேன்ல!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"ராத்திரி எதுக்கு தொந்தரவு செய்யணும்னு பார்த்தேன்!உன் அண்ணன் அதிசயமா வேற வந்திருக்கானே!எப்போவும் அந்த பெரிய வீட்டில தான் இருப்பான்!"

"அண்ணா எப்போதும் அப்படி தான் பாட்டி!இருக்கிறதை ஆண்டு அனுபவிக்கணும்னு நினைப்பார்!எனக்கு தான் அங்கே யாருமே இல்லாம போர் அடிக்கும்!இங்கே நீங்க இருக்கீங்க,எதிர்வீட்டு கீர்த்தி இருக்கா!பாலாஜி அண்ணா இருக்காங்க!சந்தோஷமா இருக்கேன்!"

"ம்..இந்த பேச்சு தான் உன்கிட்ட எல்லோருக்கும் பிடித்தது!சரி..இந்தமுறையாவது மகேஷ் 2 நாள் தங்குவானா?"

"இல்லை பாட்டி!இன்னிக்கு ராத்திரி கிளம்பிடுவார்!"

"எப்போதும் ஓடிட்டே இருக்கான்.அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்றது தானே!"

"சொல்லி பார்த்துட்டேன்!தட்டி கழிக்கிறாரே!"

"உன் கல்யாணம் முடிந்ததும் பண்ணிக்க விரும்புறானா?"-அவளது  முகம் சட்டென மாறியது.

"விடுங்க பாட்டி!அதைப் பற்றி எல்லாம் எதுக்கு?

"என்னம்மா வெட்கம் வந்துடுச்சா?"-அவளது மனநிலை புரியாமல் பேசினார் அவர்.

"சரிம்மா பேசலை!நீ கோபப்படாதே!"

"அதெல்லாம் இல்லை பாட்டி!நான் கொஞ்ச நேரத்துல வரேன்!"

"சரிம்மா!"-தலையை கவிழ்ந்தப்படி அங்கிருந்து நகர்ந்தாள் சிவன்யா.

அவள் வீட்டிற்குள் வரவும்,அதற்குள் மகேஷ் கிளம்பிவிட்டிருந்தான்.

"கிளம்பிட்டிங்களாண்ணா?"

"ம்..ஆமாம்மா!ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்!நான் வேற நல்லா தூங்கிட்டேன்!போன் எதாவது வந்ததாம்மா?"

"ஆ...ஆமாண்ணா!"

"போச்சு!சரிடா..நான் கிளம்புறேன்!"

"சாப்பிட்டீங்களா?"

"ம்...லட்சுமி பூரிங்கிற பெயர்ல ஏதோ பண்ணி வச்சிருந்தா!அதை சாப்பிட்டேன்!"-அவன் குறும்போடு கூறவும் அதை செவிகளில் வாங்கிய அவள் இல்லத்தில் பணிபுரியும் லட்சுமி அவனை ஒரு முறை முறைத்தாள். எனினும் சிவன்யா அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்பதை அவளது சலனமில்லாத முகம் உணர்த்தியது.

"என்னாச்சு?டல்லா இருக்க?உடம்பு சரியில்லையா?"

"ஆ..அது..ம்..லேசா தலைவலி!"

"என்ன?டாக்டர்கிட்ட போகலாமா?"

"வேணாம்னா!சாதாரண வலி தான்!கொஞ்ச நேரத்துல சரியாயிடும்!"-அவன் தன் தங்கையை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தான்.

"நிஜமாண்ணா!"

"சரி...எதாவதுன்னா போன் பண்ணு!"

"சரிண்ணா!"-திரும்பி லட்சுமியை பார்த்தவன்,

"மேடம்!ஒழுங்கா என் தங்கச்சியை பார்த்துக்கோங்க!நான் திரும்பி வரும்போது அவ பழைய மாதிரி பேச ஆரம்பித்திருக்கணும்!"என்றான்.

அவள் சரி என்பது போல தலையசைத்தாள்.

"பார்த்து கழுத்து சுளுக்கிக்க போகுது!"-வழக்கமான தனது கேலி பேச்சை உதிர்த்துவிட்டு பரபரப்பாக ஓடினான் மகேஷ்.

அவன் சென்றதை உறுதிப்படுத்திய லட்சுமி,சிவன்யாவின் அருகே வந்தாள்.

"என்னாச்சும்மா?"

"ம்..ஒண்ணுமில்லை!"

"ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கீங்க?எதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் இல்லை...நான் ரூமுக்கு போறேன்!"-அவள் பதிலுக்கு காத்திராமல் தனது அறைக்கு சென்றாள்.

அலுவலகத்தில்....

மனதில் எதையோ குழப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான் மகேஷ்.எதிலும் அவன் கவனம் செல்லவில்லை.எந்த பணியும் ஓடவில்லை.

செய்யும் வேலைகளை எல்லாம் குறைகளோடு செய்தான்.

"வினோத்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.