(Reading time: 14 - 28 minutes)

"கே அப்படினா நம்ம இப்போ தேட ஆரம்பிக்கலாம். அவங்க வண்டு நம்மளோட ஜாயின் பண்ணிக்கட்டும் " என்றவர் வண்டியிருந்து டார்ச் லைட்டும் சில உபகரணங்களும் எடுத்து கொண்டு சரிவை நோக்கி ஓரங்க ஆயத்தமானார்.

"சார் நாங்களும் வரோம் " -சரண்

"இது ரொம்ப சரிவா இருக்கு. கீழ எப்படி இருக்கும்னு தெரியல. கொஞ்சம் ரிஸ்க்கா இருக்கும். " -இன்ஸ்பெக்டர்

"பரவாலை சார். நாங்க மனேஜ் செய்துப்போம் " என்று கூறி அவர்களுடன் சேர்ந்து கீழே இறங்கினர்.

அது மிகப்பெரிய பள்ளதாக்கு இல்லை என்றாலும் அடர்ந்த முட்கள் நிறைந்த மரங்களும்  கண்டவுடன் மிரள வைக்கும் விதத்தில் இருந்தது. இவர்கள் இறங்கி தேட தொடங்கிய சில நிமிடங்களில் எல்லாம் மீட்பு குழுவினர் அங்குவந்து சேர தேடல் வேகம் பிடித்தது. தங்கள் மேல் குத்தும் முட்களையும் காலில் தைக்கும் கூற்கர்களையும் பற்றி கவலை படாமல் எல்லோரும் மதுவிற்கான தேடலை தொடங்கினர்.

"சார் இங்க பாருங்க " என்றபடி மீட்பு குழுவை சேர்ந்த ஒருவரின் குரல் கேட்க எல்லோரும் அந்த திசையை நோக்கி ஓடினர். இதுவரை மனதின் ஒரு மூலையில் தங்களின் தங்கை இங்கே இருக்க மாட்டாள் என்று கொண்டிருந்த சிறு நம்பிக்கை சிதைய அங்கே கிடந்த பொருட்களின் மேல் தங்கள் பார்வை நிலைகுத்த நின்றபடி இருந்தனர் சரணும் ரகுவும்.

மதுவின் மொபைல் மற்றும் அவளின் ஹேன்ட் பேக் அதிலுள்ள பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"ரகு இது உன் தன்கையுடையதா " -கமிஷனர்

பதில் சொல்ல இயலாமல் ஆம் என்பதாய் தலையை மட்டும் அசைத்தான் ரகு.

"அப்போ நாம சரியான திசைல தான் பயணிக்கிறோம். சீக்கிரம். இருட்டறதுக்குள்ள தேடனும் " என்று மற்றவர்களிடம் உத்தரவை பிறப்பித்தவர், சரணிடமும் ரகுவிடமும் " இதை இனி ஆபீசியாயலா கொண்டு போறது தான் நல்லது அப்படின்னு படுத்து. அப்படி மூவ் பண்ணுனா சீக்கிரம் கண்டுபிடிச்சிரலாம் " என்று சொல்ல ரகுவும் சரணும் மறுத்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனைத்து திசைகளிலும் தேடியவர்கள் கமிஷனரின் அனுமதியை பெற்று கொண்டு சரிவின் கீழிறங்கி தேடலை தொடர்ந்தனர்.

கமிஷனரின் மொபைலில் ஏதோ செய்தி வரவும் கன்னடத்தில் பதில் சொன்னவர் கடைசியில் பேசிய "ஹரி அப் " என்ற வார்த்தை மட்டும் புரிய அவரை கேள்வியாக பார்த்த இருவரின் அருகிலும் வந்தவர், "அங்க ஒரு பொண்ணு பலமான அடிபட்டு கீழ கிடக்கிறா. இன்னும் உயிர் இருக்கு. மேல கொண்டு வராங்க " என்று சொல்லி முடிப்பதற்குள் இருவரும் அந்த சரிவை நோக்கி ஓடினர்.

"மது........." என்ற அலறல் சத்தமும் அதனை தொடர்ந்து ரத்தவெள்ளத்தில் ஒரு பெண்ணையும் தூக்கி கொண்டு ஓடிவரும் காவலர்களின் பின்னே அழுதபடி ஓடி வந்தனர் இருவரும்.

மதுவை ஏற்றிய அதே ஆம்புலன்சில் இருவரும் ஏற, ஆம்புலன்ஸ் மருத்துவமனை நோக்கி புறப்பட்டது.

அணிந்திருந்த மஞ்சள் வண்ண சுடிதார் தன நிறத்தை துறந்து செந்நிறம் பூண்டிருந்தது. தலை முதல் பாதம் வரை ரத்தம் வடிய மூச்சிர்க்காக பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயும் உணர்வின்றி கிடந்தாலும் தங்கள் தங்கையின் முகத்தில் தெரியும் வலியும் சகோதரர் இருவரின் இருதயத்தையும் கத்தியை கொண்டு துளைத்தைதை போல வேதனையை உண்டாக்க தங்கையின் உயிரை எப்படியேனும் காத்து கொடுக்குமாறு இறைவனை பிரார்த்தித்த படி அந்த மருத்துவமனையை வந்தடைந்தனர்.

மதுவை ஐசியுவிர்க்கு கொண்டு செல்லும் வரை அவள் கைகளை பிடித்து கண்ணீர் விட்டபடி சென்ற சரணும் ரகுவும் ஐசியுவின் வாசலில் கிடந்த இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்களின் அருகே வந்த கமிஷனர் " சரண், ரகு இந்த விஷயத்தை நீங்க இனியும் வீட்டில் இருந்து மறைப்பது சரி அல்ல. உடனே உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசுங்கள் " என்று கூறி அவர்களுக்கு தனிமையை கொடுத்து விலகி சென்றார்.

இனியும் இதை வீட்டினரிடமிருந்து மறைக்க கூடாது என்பதை இருவரும் உணர்ந்தே இருந்தனர். ஆனால் இதை சொல்லும் தைரியம் இருவருக்கும் இல்லை.

"அண்ணா இனியும் லேட் பண்ண முடியாது. பெரியப்பாவுக்கு சொல்லிடவா " -ரகு

"வேண்டாம் ரகு. நான் அப்பாகிட்டே பேசறேன்." என்ற சரண் சக்திசன்முகத்தை அழைத்தான்.

"டேய் உங்க ரெண்டு பேர் மனசிலயும் என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க. திடீர்னு ஏதோ பிசினஸ் காண்டிராக்ட் அப்படின்னு சொல்லி மும்பை போறோம்னு சொல்லிருக்கிங்க. எங்களுக்கு தெரியாம அப்படி என்ன பிசினஸ் காண்டிராக்ட்? அப்படியே ஏதாவது இருந்தாலும் மதுகிட்ட பேச முடியலைன்னு அண்ணி வருத்ததுல இருக்கும் பொது அவங்க கூட இருக்காம அப்படி என்னடா பிசினஸ் ? " என்று அழைப்பை ஏற்ற நொடி சரணிடம் பொரிய தொடங்கியவர், "அப்பா ... " என்று எத்தனை முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் கதறிய சரணின் கதறலில் ஸ்தம்பித்து போனார்.

" சரண்... சரண் ... என்னப்பா ஆச்சு ... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு " என்று அவர் விசாரிக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் அவரை சுற்றி நின்றனர்.

"அப்பா... மது... நம்ம மது..." என்று சிறு குழந்தையை போல விசும்ப தொடங்கிய சரணிடம் இருந்து போனை வாங்கிய ரகு அழுகையுடன் மதுவிற்கு அக்க்சிடேன்ட் ஆனதும் அவளை ஐசிவில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்லவும் கையிலிருந்த போன் கீழே நழுவ அப்படியா அங்கிருந்த சோபாவில் தொப்பென்று விழுந்தார்.

"என்னங்க என்ன ஆச்சு " என்று அவரின் மனைவி அவரின் அருகே ஓட, போனை எடுத்த பால சண்முகம் ரகுவுடன் விவரம் கேட்டு அறிந்தவர், கண்ணீருடன் வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை உரைக்க ,

"மது " என்று அலறியபடி மயங்கி சரிந்தார் மங்களம்.

"தன் நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தார் சிவசண்முகம் .

பெண்கள் மதுவின் தாயிடம் ஓட தன் வேதனைகளை மறைத்து தன் அண்ணன்களை தேற்றி எல்லோரும் பெங்களூரு செல்ல ஏற்பாடு செய்தார் பால சண்முகம்.

அடுத்த சில மணிகளில் எல்லோரும் கண்களில் வலியும் நீரோடு மருத்துவரின் வார்த்தைகளுக்காக அந்த ஐசியுவின் முன்பு காத்து கிடந்தனர்.

மருத்துவர் சொல்ல போவதென்ன...மது உயிர் பிழைப்பாளா .. மதுவின் இந்த நிலை மதிக்கு தெரிய வருமா.... கிரண் என்ன ஆனான்.. இந்த கேள்வ்களுக்கான விடைகளுடன் உங்களை அடுத்த பகுதியில் சந்திக்கிறேன் பிரெண்ட்ஸ்...

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.