(Reading time: 12 - 24 minutes)

வெளியே வெயில் ரொம்ப அதிகமா இருக்கு வா உள்ளே போய் பேசலாம்” என்று கூறிவிட்டு திவ்யாவின் பதிலுக்காகக் காத்திருக்காமல் சட்டென்று வீட்டிற்குள் சென்றாள் அனு.

இங்கே பேசினால் கண்டிப்பாக திவ்யா கோபப்பட்டு தன்னைப் பேச விடமாட்டாள். வீட்டில் அம்மா இருப்பார்கள், அதனால் அவள் கோபப்பட்டு உறக்க பேச மாட்டாள் என்றுதான் டக்கென்று உள்ளே சென்றுவிட்டாள் அனு.

“இங்க ஒருத்தி வாய் கிழிய பேசிக்கிட்டு இருக்கேன், மதிக்காம உள்ளே போர. இரு இதோ வரேன்” என்று தன் முழு கோபத்தையும் ஸ்கூட்டி மீது காட்டி அதை ஸ்டேன்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சோப்பாவில் அமர்ந்திருந்தவள், திவ்யா கோபமாக வருவதைப் பார்த்து “அம்மா குடிக்க எதாவது கொடுங்க மா. அதுவும் திவ்யாவிற்கு ரெண்டு கிளாஸ், பாவம் ரெம்ப சூடா இருக்கா” என்று குறும்பாக சொன்னாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - உதய் - 26, நந்திதா - 28... சிறகடித்து பறக்குமா இவர்களின் காதல் எனும் பட்டாம்பூச்சி εїз...!

படிக்க தவறாதீர்கள்...

அவள் கூறியதை கேட்டுக் கடுப்பில் அனுவின் காதைத் திருகிய வாரே அவள் அருகில் அமர்ந்தாள் திவ்யா. அதற்குள் பார்வதி மோர் கிளாஸ்சோடு வர, அனு காதை விட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல் அமைதியானாள்.

மோரை இருவருக்கும் கொடுத்துவிட்டு அமர்ந்த பார்வதி, இருவரும் வாங்கி வந்த துணிகளை எல்லாம் பார்த்து அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பார்வதியிடம் பேசிக் கொண்டிருந்தாளும் “என் கேள்விக்கு என்ன பதில்” என்பதைப் போல் அவ்வப்போது அனுவை ஒரு பார்வை பார்த்தாள் திவ்யா. அது அனுவிற்குப் புரிந்தது, ஆனாலும் அதைக் காட்டிக் கொல்லாமல் அவள் அவளுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் சமையல் அறையில் விசில் சத்தம் கேட்க, சமையல் அறையை நோக்கி ஓடினாள் பார்வதி.

சிக்குனாண்டா சேகரு என்பது போல் திவ்யா அனுவைப் பார்க்க, அனுவோ பேச்சை மாற்றுவதற்காக தன் கையில் இருந்த துணியைக் காட்டி “எதுக்கு டி இந்தப் புடவையை எடுத்த? ரெம்ப மொத்தமா இருக்கு பார். நம்ம ஊரு வெயிலுக்கு கச கச னு இருக்கும்” என்றாள்.

“ஆ மொத்தமா இருந்தா தான் இந்த உத்திரத்தில் மாட்டீட்டு தொங்க முடியும்” என்று கோபமாக சொன்னாள்.

அதற்கு “ஏன் டி அப்படி சொல்ற. ரொம்ப மொத்தமாக இருக்கே னு கேட்டேன்” என்று பரிதாபமாக கேட்டாள் அனு.

“உன்ன மாதிரி ஒரு லூசு, ஃபிரெண்டா இருந்த, வேற என்ன செய்ரது. நல்லப் பார் நீ கையில் வச்சிருக்குறது நான் வாங்கின புடவை இல்லை, நீ வாங்கின பெட் ஸீட்” என்று திவ்யா பதில் கூற அனு ஐயோ என்று நாக்கைக் கடித்தாள்.

“என்ன பேச்சை டைவர்ட் பண்றீங்களோ. ஒழுங்கா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என்றாள் திவ்யா.

“என்ன டி நம்ம டீம் லீட் மாதிரியே பேசுற. என்ன கேள்வி? என்ன பதில்?” என்று தனக்கு புரியாததைப் போலவே  கேட்டாள் அனு.

எதுவும் பேசாமல் அவளைச் சுட்டு எரிப்பது போல் ஒரு பார்வை மட்டும் பார்த்தாள் திவ்யா.

“சரி சரி. பத்ர காளி மாதிரி பார்க்காத. இப்போ என்ன நான் ஏன் விஷ்ணுவிடம் அப்படிச் சொன்னேன் னு தெரியனும், இல்ல?” என்றாள் அனு.

“நான் கேட்ட கேள்வி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு நீ பதிலை மட்டும் சொல்லு” என்றாள் திவ்யா.

“நான் சொன்னதில் என்ன டீ தப்பு இருக்கு” என்றாள் அனு

“என்ன தப்பா. அவன் உன் பின்னால் வருவதையே வேண்டா னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான வந்து உரிமையோடு பேசுங்க னு சொல்லீட்டு வர” என்றாள் திவ்யா.

“அவர்க் கூறியதை எல்லாம் நீயும் கேட்டு கொண்டுதானே இருந்தே. பாவம் அவர், அப்பா அம்மா னு யாரும் இல்லை. எதற்கு என் பின்னால் வரிங்க னு கேட்டதுக்கு, என்ன சொன்னாரு னு பார்த்த இல்ல. அவரைப் பார்த்தா நல்லவர் மாதிரிதான் தெரியிது” என்று ஒரு நிமிடம் நிருத்திவிட்டு திவ்யாவை பார்த்தாள் அனு. அவள் எதுவும் கூறாமல் இவள் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளிடம் இருந்து எதுவும் எதிர்ப் பதில் வராததால் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தாள் அனு. “நீதான் அவரைப் பார்த்தாலே கடுபாகுர. ஏன் என்று கேட்டாலும் சொல்ல மாட்டேங்குர. அது ஏன் என்று சொல்லு, அது நியாயமா இருந்தால், நான் அவரை வர வேண்டாம் பேச வேண்டாம் னு சொல்லிடுறேன். என்ன ஓகே வா” என்றாள் அனு.

அதெல்லாம் ஒன்னு வேண்டாம். அவனால உன்னுடைய மேரேஜ்கு எதாவது பிரச்சனை வராமல் இருந்தால் சரி” என்று தன் அக்கரையை வெளிப்படுத்தினாள் திவ்யா.

“அதெல்லாம் ஒன்னும் வராது” என்று அனு கூறி முடிப்பதற்குள் அனுவின் கை பேசிச் சிணுங்கியது.

அதை எடுத்துப் பார்த்தவள், “அவர்தான் டீ” என்று திவ்யாவிடம் கை பேசியைக் காட்ட அதில் “திபக்” என்று பெயர் மின்னியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.