(Reading time: 12 - 24 minutes)

நான் உன் கிட்ட அப்பரமா பேசுறேன்” என்று திவ்யாவிடம் கூறிவிட்டு கை பேசியை எடுத்துக் கொண்டு தன் அரையை நோக்கி ஓடினாள் அனு.

திவ்யாவிற்கே அனுவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விஷ்ணுவைப் பற்றி பேசும்போது அவள் கண்களில் ஏதோ ஒரு ஒளி தெரிகிறது. அவனுக்க பரிதாம் படுகிறாளா? இல்லை அவன் பால் ஈர்க பட்டிருக்கிறாளா? என்று ஒன்றும் புரியவில்லை. சரி இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் புறப்பட்டாள் திவ்யா.

மறுநாள் காலையில் திவ்யா, அனு இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கும் போது நேராக வந்தான் விஷ்ணு. கடமைக்காக திவ்யாவிற்கு ஒரு வணக்கத்தை மட்டும் கூறிவிட்டு அனுவிடம்ப் பேசத் தொடங்கினான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்க இருவரையும் முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் திவ்யா. இருவருக்கும் இது தெரிந்திருந்தாலும், அவளைக் கண்டு கொள்ளாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஆபிஸ் பஸ் வந்தவுடன் அனுவும் திவ்யாவும் அதில் ஏற, இருவருக்கும் பாய் சொல்லிவிட்டு விஷ்ணு ஆபிஸ் சென்றான்.

அந்த வாரம் முழுவதும் அதே போல் தான் கழிந்தது. காலையில் வந்து பேருந்து நிலையத்தில் பேசுவான், மீண்டும் மாலையில் பேசிவிட்டு வீடு திரும்புவான்.

திவ்யாவும் அவ்வப்போது விஷ்ணுவைக் கிண்டல் செய்யத் தொடங்கி மொக்கை வாங்கிக் கொள்வாள்.

அனுவைப் பார்த்து, பேசும் உற்சாகத்தால் என்னவோ, விஷ்ணு முன்பை விட இன்னும் சிறப்பாக தன் திறமையை அலுவலகத்தில் வெளிக்காட்டினான். அதற்கான பாராட்டையும் பெற்றான்.

ந்த ஐந்து நாட்களும் அப்படியே செல்ல சனிக் கிழமை வந்தது. அனுவிற்கு விடுமுறை. பேருந்து நிலையத்திற்கு வரமாட்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் விஷ்ணு.

சரி ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சென்று அனுவின் வீட்டிற்கு எதிரில் தான் வழக்கமாக நிற்கும் இடத்தில்  நின்று கொண்டு அனு தெரிகிறாளா என்று அவள் வீட்டையே முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது சட்டென அவள் வீட்டின் கதவு திறக்க, வெளியே தேவதையாய் வந்தாள் அனு. இவனைப் பார்த்தவாறே கை அசைத்துக் கொண்டே வந்தவளின் அழகில், கை அசைக்கக் கூட மறந்து மயங்கிப் போனாய் நின்று கொண்டிருந்தான் விஷ்ணு.

அருகில் வந்தவள் “ஹெய் விஷ்ணு என்ன அப்படிப் பார்க்கிற” என்று மயங்கிப் போய் நின்றவனை உலுக்கித் தெளிய வைத்தாள்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அனு. இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவளை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் போனதற்காக தமிழை தன் மனதில் கடிந்து கொண்டான் விஷ்ணு.

அவன் அப்படிக் கூறியதும் அவளுக்குள் அப்படி ஒரு வெட்கம் கலந்த மகிழ்ச்சி. வேறு எதுவும் கூறாமல் “நன்றி” என்று மட்டும் கூறினாள்.

அவன் எதுவும் பேசாமல் இருக்க “சரி வாங்க என் கூட” என்று கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள் அனு.

எங்கே வரச் சொல்கிறாள்? என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்று கொண்டிருந்தான் விஷ்ணு.  திடீர் என்று வந்து எங்கே வரச் சொல்கிறாள். வீட்டிற்கு என்றால், அவள் பெற்றோர் என்ன சொல்வார்கள் என்றெல்லாம்தான் அவனது சிந்தனை.

அவன் தன்னை தொடராமல் நின்றிருப்பது தெரிந்து, அவன் பக்கமாகத் திரும்பி, வா என்பது போல் கை அசைத்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினாள் அனு. ஆனது ஆகட்டும் என்று அவளைப் பின் தொடர்ந்தான் விஷ்ணு.

நேரே உள்ளே சென்றவள் தன் பெற்றோரிடம் விஷ்ணுவை “தன் நண்பன்” என்று அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் இவனைப் பற்றி விசாரிக்க, இவனும் தான் யார் என்பதைக் கூற, இவன் மேல் அவர்களுக்குப் பரிவு வரத் துவங்கியது. விஷ்ணுவை அவர்களுக்குப் பிடித்தும் போனது.

பார்வதி அவனைக் கட்டாய படுத்திச் சாப்பிட வைத்தாள். மணக்கும் இட்டிலியை அவன் வாயில் வைக்கும் சமயம் ஆஜர் ஆனால் திவ்யா.

நேற்று வரை வீட்டு வாசலில் நின்றிருந்தவன், உரிமையாக இன்று வீட்டின் நடுவில் அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக் கடுப்பானாள். இதற்கெல்லாம் யார் காரணம் என்று அவளுக்குத் தெரியும்.

அனுவைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தாள் திவ்யா. அனுவோ, அவளைக் கண்டு கொள்ளாதவள் போல் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் திபக் வீட்டிற்கு வர அவனுக்கும் விஷ்ணுவை அறிமுகம் செய்து வைத்தாள் அனு.

திபக்கை பார்க்க விஷ்ணுவிற்குப் பொறாமையாக இருந்தாளும் அனுவிற்கு ஏற்ற ஜோடி என்றே தோன்றியது. அதை அவர்களிடமே கூறவும் செய்தான் விஷ்ணு.

நடப்பதைப் பார்க்கும் போது திவ்யாவிற்கு தலையே சுற்றியது. ஆனாலும் அவளால் ஒன்று பேச முடியாது. மீறி பேசினாலும், அனு அவள் பேச்சை கேட்கப் போவதும் இல்லை.

அன்று முதல் விஷ்ணுவிற்காக அந்த வீட்டின் கதவு என்றும் திறந்தே இருந்தது. அவனும் உரிமையோடு சென்று வந்தான். காலையில் பஸ் ஸ்டாப்பில் அனுவிடம் பேசி விட்டுப் போவான்.  வேலை முடிந்தவுடன் மாலை அனுவின் வீட்டிற்கே சென்று அனைவரிடம் பேசி சிரித்து அதோடு மட்டும் இல்லாமல் பல சமயங்களில் இரவு உணவையும் முடித்து விட்டுத்தான் செல்வான்.

திடீர் என்று விஷ்ணுவின் வாழ்க்கை மிகவும் அழகாய் ஆனது. காதலியாக இல்லை என்றாலும் நல்ல தோழியாக அனு. சொந்தப் பிள்ளை போல் அன்புகாட்ட அனுவின்ப் பெற்றோர். திவ்யாவிற்கும் விஷ்ணு மீது வெறுப்பு என்றெல்லாம் இல்லை. அவனால் தன் தோழிக்கு அமையப் போகும்  நல்லதோர் வாழ்வில் எந்த ஒரு சிக்கலும் வந்து விடக் கூடாதே என்ற எண்ணம் மட்டுமே. மற்றபடி அவளுக்கு அவனை ஒரு நண்பனாகப் பிடித்துத்தான் இருந்தது.

இப்படியாக விஷ்ணுவின் வாழ்க்கை மெல்ல மெல்ல நகர, ஒரு நாள் காலை வழக்கம் போல் எழுந்து தேதியை கிழித்தவன்……….

தொடரும் . . .

Episode # 13

Episode # 15

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.