(Reading time: 12 - 24 minutes)

ரே நேரத்தில ரெண்டு பொண்ணுங்களுக்கு நூல் விடறியா.வீட்டுல போட்டுக் கொடுக்கறேன் பார்”மிரட்டிய நண்பனை அலட்சியமாக பார்த்தான் சரண்.

“உன்னோட வீட்டு ஆளுங்க மாதிரி என் வீட்டு ஆளுங்க இல்லைன்னு சொல்லிக் காமிக்கற”நக்கலாக சரண் சொன்னதற்கும் காரணம் உண்டு.

யஷ்வந்தின் பெற்றோர் வலுக்கட்டாயமாக அவனது வேலையை ரிசைன் செய்ய வைத்து,”முதல்ல ஒரு பொண்ணை காதலிக்கற வழியை பாரு”என்று கையில் காசை வேறு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

விசித்திரமான பெற்றோர்கள் என்றாலும்,அவர்கள் பேச்சுக்கு மறுப்பு கூட  தெரிவிக்காமல் அவர்கள் சொல்படி நடக்க,காலேஜ் வாசலில் நின்று பெண் தேடிக் கொண்டிருக்கிறான்.

யாரும் பார்த்த உடன் மனதில் பதிந்துவிடுவது போல இல்லை.

சரணின் அட்டகாசங்கள்,தான் எதற்கு வந்தோம் என்ற நினைப்பையே மறக்கடித்திருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இன்னும் எவ்வளவு நேரம்டா ஆகும்”

“அதையே தான் நானும் கேட்டுட்டு இருக்கேன்.ஒரு பதில் மெசேஜ் போடாம அலைக்கலிச்சிட்டு இருக்கா”என்று ஹாசினியை திட்டியவன்,இப்போது அவந்திகாவுக்கே போனை போட்டான்.

“இப்போ நீ வெளில வருவியா..மாட்டியா”கோபமாக கேட்டவனுக்கு..

“முடியாது போடா”என்ற பதிலே கிடைத்தது.

“ரொம்ப ஓவரா பண்றாடா மச்சான்”என்று புலம்பியவன்,

“அவனவன் காதலியை பார்க்க எவ்வளவு ரிஸ்க் எடுத்து வர்றான்னு இந்த பொண்ணுங்களுக்கு புரியவே மாட்டேங்குது மச்சான்.இந்த அவந்திகா கழுதை....வேணும்னே பைக் ஸ்டான்டல குரூப் மீட்டிங்கை போட்டு மொக்கை போட்டுட்டு இருக்கா”

“அந்த பொண்ணுக்கும்,ஹாசினி வர்றதுக்கும் என்னடா சம்மந்தம்”

“ஹாசினி,அவந்திகாவோட தீவிர ரசிகை.அவ அடுக்கடுக்கா பேசற பொய்களை ரசிக்கவே சரியா இந்த நேரம் ஒரு கூட்டமே கூடிடும்.இவளை கல்யாணம் பண்ண போறதை நினைச்சாலே பயமா இருக்குது மச்சான்”என்றதும் யஷ்வந்த் திடுக்கிட்டு போய் பார்த்தான்.

“யாரடா கல்யாணம் பண்ணிக்கப் போற”கலக்கத்துடன் கேட்க,

“ஹாசினியை தான்”என்று சொல்லி நண்பனுக்கு நிம்மதியை தந்தான்.

மீண்டும் ஒரு முறை அவந்திகாவுக்கு போன் செய்த சரண்,”உன்னோட ஸ்கூட்டிக்கு நானே பெட்ரோல் டீசல் சரக்கு எல்லாம் போட்டு விடறேண்டி..தயவு செய்து வெளிய வா”என்று கெஞ்ச,

“என்னை யாரும் விடமாட்டேங்கறாங்கடா”என்று பதிலுக்கு அவந்திகாவும் சொல்ல,தலையை கை வைத்து அமர்ந்துவிட்டான்.

“என்னடா ஆச்சு”

“இவளுக்கு பேன்ஸ் கூட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது மச்சான்.அவளே வெளில வர்றேன்னு சொன்னாலும்,லேசுல யாரும் வெளில விடமாட்டேங்குறாங்க.இந்த செக்யூரிட்டி மட்டும் இல்லைன்னா,உள்ள போயிருப்பேன்”நொந்து கொண்டவன்,தனக்கு இவ்வளவு வேதனையை வாரி வழங்கி கொண்டிருக்கும் அவந்திகாவின் பெருமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தான்.

“உனக்கு செல் கம்பெனில இருந்து காலர் ட்யூன் வேணும்னு கால் வந்தா என்னடா பண்ணுவ”என்று சரண் கேட்க,

“கேட்கறதுக்கு முன்னாடியே கட் பண்ணி விட்டுடுவேன்”விபரமாக பதில் சொல்லுவதாக நினைத்து சொல்ல,சரண் முறைக்கவும் அடங்கினான்.

“இவளுக்கு போன் வந்தா,என்னோட லவர் விடாம கால் பண்ணி தொந்தரவு பண்றான்னு ஒரு குரூப்பையே கூட்டி வச்சு காதல் கதையை அப்படியே அள்ளி விடுவா பாரு.அதையும் கேட்கறதுக்கு அப்படியே ஒரு கும்பல் ஓடி வரும்.அவ சொல்றது பொய்ன்னு இந்த முட்டாள் ஹாசினுக்கு கூட தெரியும்.இருந்தாலும் சுவாரசியமா உண்மையை போலவே சொல்றதினால,யாரும் அவ கதையை கேட்காம கிளாசை கூட கவனிக்க போறதில்லை”வருத்தம் போல சொன்னாலும்,ஏதோ பெருமை பேசுவது போல தோன்றியது.

“உன்னோட அத்தை பொண்ணு புகழை பாடறதுக்கு தான் என்னை கூட்டிட்டு வந்தியா”எரிச்சலுடன் வினவியவனிடம்,

“ச்சே..ச்சே..ஏதோ ஒரு ஆர்வத்தில அவந்திகா எப்படியெல்லாம் சீன் போடுவான்னு சொல்லிட்டேன்”என்று சமாளிப்பாக சிரிக்கவும்,தலையில் அடித்துக்கொண்ட யஷ்வந்த் கிளம்பும் நேரம் ஒரு படையுடன் அவந்திகா வந்து சேர்ந்தாள்.

அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு அவந்திகா நகரவும் தான்,ஹாசினி சரணையே கண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.