(Reading time: 9 - 17 minutes)

ன்னைக்கு பயோசி போறோம் சி ஈ ஓ மேம்…. அங்க நிறைய ப்ராஜக்ட்ஸ் உங்க அப்ரூவல்காக வெயிட்டிங்காம்….கிளம்புங்க…உங்க ப்ரதான ட்ரைவர் கம் பிஏ நானும் கூடவரேன்” என்றான் அவன்.

மனோவுக்கு உள்ளுக்குள் ஏதோ சற்று புஸ்ஸாகி…முகம் சற்று உர்….

மித்ரன் தன் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் இப்போது வர்ஷனை தேடிப் போனால் கூட பிரவாயில்லை என்றிருக்கிறது அவளுக்கு….அது எமெர்ஜென்சி……ஆனால் பயோசி ப்ராஜக்ட்ஸ் பார்க்க இவள் போறதுக்கு துணைக்கு இவனாமா? இப்ப இது அவ்ளவு அவசியமான விஷயமாமா?

“ஏன்பா…இன்னும் ஒரு டூ த்ரீ டேஸ் கழிச்சாவது நீங்க ரெகுலர் ட்யூட்டி ஜாய்ன் பண்ணலாம்ல…? இப்பவே எதுக்குபா…” சற்று சிணுங்கலாக தன் எதிர்ப்பை தெரிவித்தாலும்…. மொட்டையாய் அவன் முடிவை  மறுக்க மனமின்றி…. அதான் நேத்து ரொம்ப ஃபீல் பண்ணிட்டே பொண்ணு…அதனால குளிக்க கிளம்பிப் போனாள்.

திரும்பி அவள் இவர்கள் அறைக்கு வந்து தயாராக தொடங்கினாலும்….

“ஒழுங்கா பேசுனா வலிக்கிற வாய வச்சுகிட்டு இப்ப எதுக்கு இங்கல்லாம் அலையனும்…..” என முனங்கிக் கொண்டே இவள் தன் கிளம்பும் வேலையை தொடர…. 

அவளை அப்படியே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான் பார்க்க வேண்டியவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அங்குமிங்குமாய் நடந்து ஹேண்ட் பேக்கிற்குள் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அவள்….

முன்பு இவனுடன் தனியறையில் சல்வார் டாப்ஃஸுக்கு மேல் அவள் அணிந்திருந்த அந்த கோட் ஞாபகம் வருக்கிறது இவனுக்கு….

இப்போதோ லேப்க்கு செல்ல வேண்டி இருக்கும் என ஒரு ப்ளூ ஜீன்….ஒரு ஸ்லீவ் லெஸ் வைட் டாப்ஸ்…… அதற்கும் மேலே எதாவது லாங் கோட் பேட்டன் டாப்ஸ் இனி போடுவாளாய் இருக்கும்… குளித்து இடை தாண்டும் அடர்ந்த ஈர முடியுடன்… இங்கு வந்து கிளம்பிக் கொள்ளலாம் என வந்திருக்கிறாள்…. உடைக்கு சற்றும் பொருந்தாவிட்டாலும் பார்க்க மனோரம்யமாய் கழுத்தில் வெளியே தொங்கும் அந்த தாலி செயின்….

அவள் முகத்தில் இருக்கும் சின்ன கோபம்…..முனங்கும் அந்த உதடுகள்….

இவனை மனதளவில் எத்தனையாய் நெருங்கி இருக்கிறாள் இவள்….

அதே நேரம் கப்போர்டில் எதையோ எடுக்க அதை திறந்தவள்….ஸ்ஸ்ஸ்….என கண்ணைப் பிடிக்க….

கண்ணில் தூசி விழுந்துவிட்டது என இவனுக்குப் புரிய….வேகமாய் அவளிடம் போய்…. கண்ணை தடவிக் கொண்டிருந்த அவள்  கையை பற்றி நீக்கியவன்…. அவள் கண்னை திறந்து பிடித்து ஊதினான்…. 

அவள் சமனப்பட்டதாய் சரியாகிவிட்டதாய் தலை அசைக்க அவளை விட்டு விலக நினைத்தவன் பார்வை….இப்போது இவன் முகத்தை முழு கண்ணுமாய் திறந்து பார்க்கும் அவள் கண்களில் விழ….. அங்கு என்ன இருந்தோ….அது அவனை அப்படியே அவனைப் பற்றி முனங்கிக் கொண்டிருந்த உதடுகளின் புறமாக திருப்பியது…

மனோவுக்கோ இன்பா சொன்ன அந்த மதிபா நிகழ்வு மனதில் ஓடுகிறது…..என் வைஃப்க்குன்னு மட்டுமா செய்றதுக்குன்னு…. அவன் சொன்ன அந்த வார்த்தைகள்…

இருந்த உணர்ச்சி அலை அவள் கண்ணில் தெரிய…. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இவள் உயிரில் உதிக்க…  அதில் அவள் சற்றாய் எச்சில் விழுங்க….இப்போது இவன் கவனம் அவள் இதழ்களில் இறங்க….

ஒரு கையால் அவளை அணைத்து தன் புறமாய் இழுத்தவன் மறுகையால் அவள் கையை எடுத்து தன்னை வளைக்க வைத்து……மொத்தமாய் இதழில் இறங்கினான்…

அவன் விலகும் போது மென்மையாய் அவன் மார்பில் சாய்ந்திருந்தாள் இவள்…. அவன் அடுத்து என்ன சொல்வான் என்பதில் அவளுக்கே சற்று வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது….

“புரிஞ்சிட்டுன்னு நினைக்கேன்….” என சொல்லி இவள் நினைவை அவனும் அறிந்து வைத்திருக்கிறான் என காண்பித்தான் அவன்.

“உங்க ஹெல்த்தை பத்தி இனி நீங்களா வந்து சொல்ற வரைக்கும் நான் வாய திறக்கலப்பா…போதுமா….” இது இவள்…

இருவருமே இப்போது சின்னதாய் சிரித்துக் கொள்ள…. இருவர் மனமும் ஒரு வகையில் நிறைந்திருந்தது இப்போது….

அதே நிறைவுடன்தான் பயோஸி கிளம்பிப் போனாள் மனோ. அங்கு போகும் வரையுமே அவள் சந்திக்கப் போவது யாரை என அறிந்திருக்கவில்லை. 

விஜிலா தன் நினைவுகளில் மூழ்கி இருந்தாள்.

இப்படி ஆகும் அவள் நிலை என அவள் நினைத்திருந்தாளாமா என்ன? மடியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையிடமே நின்றிருந்தது அவள் பார்வை…..அப்படியே வர்ஷனின் சாயலில்…. குழந்தை இப்போது தூக்கத்தில் எதையோ எண்ணி சின்னதாய் சிரிக்க….

முதன் முதலாய் வர்ஷனைப் பார்த்த அந்த நொடி…அந்த நாட்கள் மனதில் விரிகிறது இவளுக்கு…. அப்போதைய அவன் சிரிப்பும் கூட இப்படித்தான் சின்னதாய்……

அப்போது இவள் பார்க்லே யுனிவர்சிட்டியில் அட்மிஷன் கிடைத்து சான் ஃப்ரன்ஸிஸ் கோ ஏர்போர்ட்டில் சென்று இறங்கி இருந்தாள். இவளுக்கு யூஎஸ் புத்தம் புதுசு….. போகும் முன் அங்கிருக்கும் இந்திய ஸ்டூடன்ட்ஸ் சிலரிடம் மெயில் பரிமாறி இருந்தாள்.

அதில் இவளுக்கு அங்கு உதவ முன் வந்தவந்தான் இந்த வர்ஷன். இறங்கிய பின் ஒரு வகை பதட்டத்தில் நின்றவளை ஆறுதல் படுத்தியது அவனது “வாங்க….ஜர்னி எப்டி எப்டி இருந்துச்சு?” என்ற தமிழும் அவனது புன்னகையும் தான்.

இன்னும் கூட அந்த நிகழ்வு ஞாபகத்தில் இருக்கிறது இவளுக்கு. பார்த்தவுடன் அப்படியே காதலில் விழுந்தாள் என்றெல்லாம் நிச்சயம் இல்லை…. இவள் வீட்டில் அப்பா செல்லம். அப்பா எல்லாத்திலும் செல்லம் என்றாலும் காதல் விஷயத்தில் படு ஃஸ்ட்ரிக்ட்…..இவளுக்கும் அப்பாவின் மனம் தான்….காதல் ஒரு நல்ல விஷயமாய் அவளுக்கும் தோன்றியதில்லை….

Friends இது ரொம்பவே குட்டி எபிசொட்…..வர்ஷன் விஜிலா கதை முழுவதையும் இதில் கொண்டு வர நினைத்திருந்தேன்…. முடியவில்லை….அடுத்த எபிசோட் முடிந்தவரை எல்லா பகுதியையும் முடித்து penultimate epi யாக்க முயற்சிக்கிறேன்…. பொருத்தருளவும். நன்றி..

Episode # 22

Episode # 24

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.