(Reading time: 4 - 8 minutes)

புரவலன் புரவி ஏற்றி

பூமன்னன் பூண் {tooltip}கலிங்கம்{end-link} ஆடை{end-tooltip} பூட்டி

அரசன் அணி  முடி சூட்டி

அரசர்கரசன்  அமைச்சு ஒருவன்

செங்கோ சிறப்பிக்கும்

செஷாங்கனுக்கினியவனுக்கு

செங்கோலனால் இஃது செய்யப்படும் என்றுரைத்து

புரவி முன்பு நடந்து வர

மன்னர் போல் அப் புகழ் மகனை

மாமன்னன் வியன் நகர் சுகஸ்தானத்தில்

பூரண உலா செய்வித்து சிறப்பு செய்வீர் 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

செஷாங்கன் ஆமானை மொர்தகனை கணம் செய்ய பணித்தல்

செப்பிய செவ்வழி சிறப்பு

செப்பிய நீரே செய்திடுவீர் சிறப்பு

சிறிதும் பிழையின்றி

சீரேதும் குறைவின்றி

சடுதியிலே செய்திடுவீர்

ஆமானே நீர் இதற்கு பொறுப்பு

மொர்தகன் பெற வேண்டும் உன் கையால்

இந்த கண கவனிப்பு

ஆமான் வேறு வழி இன்றி மொர்தகனை கணம் செய்தல்

ஆ என்று அலறிட வழி இன்றி

நோய் என்று விலகிட வகை இன்றி

ஆம் என்று அடங்கிப் போயினன் ஆமான்

போய் செய்திட்டான் மொர்தகன் கணம் தான்

 

குறிப்பு: அரசவை நட படிகள் புத்தகம் என்பது அரசவை சம்பந்தமான அனைத்தையும் அன்றன்றைக்கு எழுதி வைக்கும் நாட்குறிப்பு புத்தகம் ஆகும்.

தொடரும்

Next episode will be published when the writer shares her next episode.

நறுமீன் காதல் - 09

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.