(Reading time: 9 - 18 minutes)

தற்கு திவ்யா “ஏய் வேண்டா டீ, டேம்மை ஓபன் பண்ணாத” என்று அனுவைப் பார்த்துக் கூறிவிட்டு “நீ இருக்கியே, இவள இப்போதான் ஒரு வழியா சமாதானம் செஞ்சி சிரிக்க வெச்சேன்” என்று விஷ்ணுவை பார்த்துக் கூறினாள்.

“ஸாரி திவ்யா ஸாரி” என்று தன் நாக்கைக் கடித்தான் விஷ்ணு.

அதற்குள் அவர்கள் ஆபிஸ் பஸ் வர இருவரும் கிளம்பி சென்றனர். விஷ்ணுவும் தன் அலுவலகத்திற்குச் சென்றான்.

அனுவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து சென்றவனுக்கே வேளையே ஓடவில்லை. செய்ய வேண்டுமே என்று செய்து கொண்டிருந்தான் வேளையை. அவன் எண்ணம் முழுக்க அனுவை சுற்றியே இருந்தது.

அன்று முத்து குமரன் அவர்கள் தன் கதையின் அடுத்த பாகத்தை கொடுப்பதற்காக வந்திருந்தார். அவருக்கும் மற்றவருக்கும் அன்று மதியம் ஆபிஸ்ல் உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

உணவு உண்ணும் வேளையில் குமரனும், கதிரவனும் பேசிக் கொண்டிருந்தது, அருகில் அமர்ந்து இருந்த விஷ்ணுவின் காதிலும் விழுந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்... 

“கதையின் 90 சதவிகிதத்தை முடித்துவிட்டேன். ஆனால் கதையின் இறுதியை எப்படி அமைப்பது என்று தான் குழப்பமாக இருக்கிறது. இருவரும் சேருவது போல் அமைத்தால் மகிழ்ச்சி தரும் முடிவாக இருக்கும் ஆனால் வழக்கமாக அமைந்துவிடும் அதுவே சேர முடியாமல் செய்தால் வித்யாசமாக இருக்கும் இல்லையா?” என்றார் குமரன்.

கதிரவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. “நீங்கள் கூறுவதும் சரிதான் ஐயா, இன்றைய தலை முறையினருக்கு ஸ்வாரசியம் கலந்த நெகடிவ் எண்டிங்க் என்றால் அவர்கள் விரும்பிப் படிப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கே “நிஜத்தில் தான் என்னால் அனுவுடன் சேர முடியாது என்றால் என்னைப் பற்றி கதை எழுதினாலும் அதே நிலைதான் போலும்” என்று தன் விதியை நொந்துக் கொண்டான்.

 அனுவின் ஆபிஸிலோ திவ்யா கூறியது போல ஒரு விக்ரமன் படமே ஓடிக் கொண்டிருந்தது. ஓரே அழுகையும், அட்வைஸ்சுமாய் போய் கொண்டிருந்தது.

ஒரு வழியாகப் பிரியா விடை பெற்று வீட்டிற்கு வந்தாள் அனு. வீட்டிற்கு வந்தாலும் பார்ப்பவரிடம் எல்லாம் ஒரே புலம்பல் மயம்தான். அவளுக்கு என்ன அறுதல் சொல்வது என்று யாருக்குமே புலப்படவில்லை, விஷ்ணு உட் பட.

றுநாள் காலை விஷ்ணு வழக்கம்போல் வேளைக்குச் செல்லும் முன் அனுவை பார்ப்பதற்காக அந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்தான். அப்போதுதான் அவன் புத்திக்கு எட்டியது அவள் இனி மேல் இந்து வரமாட்டாள் என்று.

என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்து தயக்கத்துடன் அனுவின் வீட்டிற்குச் சென்றான்.  என்னதான் அடிக்கடி சென்றாலும் இப்படி காலை வேளையில் சென்றால் அனுவின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம்தான்.

உள்ளே சென்றவன் கண்களின் யாரும் புலப்படவில்லை. பார்வதியின் சத்தம் மட்டும் சமையல் அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கே சென்றான்.

விஷ்ணு வருவதைப் பார்த்து “வா ப விஷ்ணு” என்றார்.

“ஒண்ணும் இல்லமா, அனு எப்படி இருக்காங்க என்று பார்க்கலாம் என்று வந்தேன்” என்று அவர்கள் கேட்கும் முன்பே காரணத்தைக் கூறினான்.

“அத ஏன் கேக்குர, நைட் எல்லாம் அவ அவங்க அப்பாகிட்ட  ஒரே புலம்பல். ரெண்டுப் பேரும் தூங்கவே விடியக் காலை ஆயிடுச்சி னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு பேரும் எழுந்துரிச்சி வரலை” என்றார் பார்வதி.

“சரிமா அவங்க தூங்கட்டும். நான் கிளம்புறேன்” என்று அனுவைப் பார்க்க முடியாத சோகத்தை காட்டிக் கொள்ளாமல் கிளம்பத் தயார் ஆனான்.

அதற்குள் “இருபா, இட்லி ரெடி ஆயிடுச்சி. சாப்பிட்டு போவியாம்” என்றார் பார்வதி.

“இல்லமா இருக்கட்டும்” என்று கிளம்ப பார்த்தவனை விடாப் பிடியாக அமர வைத்துச் சாப்பிட வைத்தாள் பார்வதி.

அந்த வீட்டில் அனு மட்டும் அல்ல அனைவரும் குணத்தில் சிறந்தவர்கள்தான். சொல்லப் போனால் சட்டியில் இருந்துதான் அகப்பையில் வந்திருக்கிறது. ராஜ சேகருடன் பழகும் யாருக்கும் அவரை விரோதியாகப் பார்க்கும் எண்ணம் வராது. பார்வதியோ அவரை மிஞ்சியவர். தன்னைக் கொள்ள வந்தவனைக் கூட “முதலில் உணவருந்து பிறகு என்னைக் கொள்ளலாம்” என்று கூறும் அளவுக்கு நல்லவர். இவர்களின் பெண் அனு மட்டும் இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 

சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப தயார் ஆனான் விஷ்ணு. அப்போது அனுவைப் பார்க்க வீட்டினுள் நுழைந்தாள் திவ்யா.

அவள் கேட்பதற்கு முன்பே “அனு இன்னும் தூங்கிட்டு இருக்கங்களாம். நைட் லேட்டாதான் தூங்கிருப்பாங்க போல” என்று அவள் எண்ணம் அறிந்து கூறி முடித்தான்.

“ஓ” என்று அவள் கூறி முடிக்கும் முன்னர் பார்வதி வெளியே வந்தார்.

“வாமா திவ்யா அவ இன்னும் தூங்கீட்டு இருக்க எழுப்பட்டுமா?” என்றார் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.