(Reading time: 7 - 13 minutes)

ன்ன சரயூஎன்னாச்சு?...”

“…………….”

ஏன் எதுவும் பேசமாட்டிக்குற?........”

“…………….”

என் மேல கோபமா?...” என அவன் கேட்டதும், அதுவரை பேசாதிருந்தவள் சட்டென வாய்திறந்தாள்

கோபமா?... நான் ஏன் உங்க மேல கோபப்படணும்?...”

நீ கேட்குறதுலயே தெரியுதுஉனக்கு என் மேல கோபம் தான்னு….”

அச்சோஇல்லங்க…”

இல்லஉனக்கு கோபம் தான்சாரிசரயூ…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

எதுக்கு சாரி சொல்லுறீங்க?...”

நான் பண்ணின தப்புக்குத்தான்…”

நீங்க என்ன தப்பு பண்ணீங்க?…”

செங்கல் பார்த்துட்டு சிரிச்சிட்டே இருந்தேன்லநான் சிரிச்சதால தான நீ கோபமா இருக்குற என் மேல…. அதான் சாரி…”

அச்சோஅப்படி எல்லாம் இல்லங்க….”

நிஜமாதானா?...”

நிஜமாவே கோபம் இல்லபோதுமா?...”

சரி சரயூ…”

சரிங்கநீங்க வீட்டுக்கு போயிட்டீங்களா?...”

இல்லஇன்னும் கொஞ்ச நேரம் ஆகும்?...”

அப்போ நீங்க இப்போ பேசுறத யாராவது கவனிச்சிட்டா?...”

இங்க எல்லாரும் தூங்கிட்டாங்கஅவங்க தூங்கிட்டாங்கன்னு தெரிஞ்சதும் தான் நான் உனக்கு போனே பண்ணினேன்…”

அப்போசரி…” என அவள் சிரிக்க,

சரயூ…..” என்றான் அவன் மெதுவாக….

என்னங்கசொல்லுங்க…”

என்னடா இப்பவே இப்படி சொல்லுறானேன்னு கோச்சிக்காதஉன்னை பொண்ணு பார்த்துட்டு வந்ததுல இருந்து எனக்கு உங்கூடவே இருக்கணும் போல இருக்குநீ எப்போ இங்க வருவ?..” என அவன் கேட்க, இங்கே அவள் நிலைமையோ கேட்கவே வேண்டாம்

தன்னை சுதாரித்துக்கொண்டவள், “கல்யாணம் முடிஞ்சதும் வந்துடுவேன்…” என சொல்ல,

நான் எதுவும் உன்னை காயப்படுத்துறனா சரயூ?...” எனக் கேட்டான் அவன்

ஏன் இப்படி கேட்குறீங்க?...”

இல்ல உன்னை பார்த்து கொஞ்ச நாள் தான் ஆகியிருக்கும்நிச்சயமும் இன்னைக்குத்தான் முடிஞ்சது…. அதுக்குள்ள இப்படி நான் உங்கிட்ட பேசி உன்னையும் சங்கடப்படுத்துறனோன்னு தோணிச்சுஅதான்…”

அப்படி எல்லாம் எதுவும் இல்லங்கஎனக்குமே நீங்க கிளம்பினதும், ஏதோ ஒரு கவலை மனசில முழுசா நிரம்பி இருந்துச்சுஉங்க போன் வந்து உங்க குரல் கேட்டதுமே அதெல்லாமே பறந்து போயிடுச்சுநீங்க பேசுறது எனக்கு சங்கடத்தை கொடுக்கலை சந்தோஷத்தை தான் கொடுக்குதுஅதனால மனசை போட்டு குழப்பிக்காம இருங்கசரியா?..”

நீ சொன்னதை கேட்குறப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கு சரயூ…” என்றவன்,

அதன் பிறகு அவளிடம் உனக்கென்ன பிடிக்கும், பிடிக்காது என ஆரம்பித்து, இல்லாத விஷயங்கள் அனைத்தையும் பேசிக்கொண்டிருக்க அதற்கு ஒரு முடிவே வந்தது போல் இல்லை

கதவைத் தட்டும் ஓசையில் அதுவரை இருந்த மோன நிலையில் இருந்து விழித்தவள், மணியை பார்க்க, அது பதினொன்று என்று காட்டியது

அடக்கடவுளேஒரு மணி நேரமா பேசினோம்?....” என கட்டிலை விட்டு எழுந்தவள்,

ரொம்ப நேரம் பேசிட்டோம்…” என சொல்ல, அவனும் அப்போது தான் மணியைப் பார்த்தான்

ஒரு மணி நேரம் பேசியிருக்குறோம்ஆனா முதல் பத்து நிமிஷம் பேசினது தான் நினைவிருக்குஅடுத்து என்ன பேசினோம்னு எனக்கே தெரியலை…” என சொல்ல,

அவளும், “எனக்கும்தான்…..” என்றாள் சிரித்துக்கொண்ட….

அடுத்து மீண்டும் கதவு தட்டப்பட, “என்ன சத்தம் சரயூ?...” என அவன் கேட்டதும்,

யாரோ கதவை தட்டுறாங்க…” என்றாள் அவள்

சரிநீ போய் பாரு…” என சொல்ல,

சரிங்கநான் போனை வைக்குறேன்…” என்றாள் அவள்

வைக்கப்போறீயா?....” என இழுத்தவன்,

ஐ லவ் யூ சரயூ…….” என மென்மையாக சொல்ல, அவள் எதுவம் சொல்லவில்லை

நீ எதுவும் சொல்லமாட்டீயா?...” என்ற அவனின் கேள்விக்குநான் போனை வைக்குறேன்…” என சொல்லிவிட்டு கட் செய்துவிட்டாள் அழைப்பை

அவள் கட் செய்ததும், சரயூ…………. என, தன் போனையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் திலீப்… 

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.