(Reading time: 10 - 20 minutes)

னா ஊன்னா அப்பாகிட்ட ஒட்டிக்க…” என தங்கையின் அருகே வந்த இஷான், “மாப்பிள்ளை தங்கச்சி இல்லையா… சோ அழகா தான் இருக்கணும்…” என சொல்லிக்கொண்டே அவளின் முகத்தினை கைகளில் பிடித்து, “என் அழகு குட்டிச்சாத்தான்….” என நெற்றி மீது முட்ட, அவள் சிரித்தாள்…

கண்களில் இருந்து மை எடுத்து மகனுக்கும் மகளுக்கும் கழுத்துக்கு பின்னே பிரசுதி வைக்க,

“அம்மா… உன் பையனுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் தான்…” என சொல்ல, அவன் தங்கையை அடிக்க கை ஓங்க, “டேய் அண்ணா…… என்னடா கொழுப்பா?....……..” என அவள் கேட்டு ஓட ஆரம்பிக்க,  “அடிங்க குட்டிச்சாத்தான்…” என்றபடி துரத்தினான் அவன் சிரித்தபடி…

“அப்புறம்டா… உன் வேலையில எதும் பிரச்சினை இல்லையே… எவனாவது எதாவது செஞ்சான்னா சொல்லு… தூக்கிடுறேன்…” என தட்சேஷ்வர் சோமநாதனிடம் சொல்ல,

“இப்படித்தான் அண்ணா… எப்பப்பாரு இந்த பேச்சுத்தான் வீட்டிலேயும்… இஷானும், சதியும் இருக்கும்போது மட்டும் இப்படி பேசமாட்டார்… இப்படித்தான் நேத்து கூட காலையில ஒரு காபி கப்பை தூக்கி போட்டு உடைச்சிட்டார்… அது கூட இந்த மாதிரி ஒரு விஷயத்துக்காகத்தான் இருக்கும்னு என் மனசுக்குள்ள ஒரு சந்தேகமும் இருக்குண்ணா…” என்றார் பிரசுதி…

நண்பன் எதற்காக அதும் நேற்று கோபம் கொண்டான் என்ற காரணமும் சோமநாதனுக்கு புரிய, அவர் அமைதியாக நண்பனை பார்த்தார்…

அந்த பார்வை ஈஸ்வரிடத்தில் எதையோ வினவ, அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“அவன் ஆள் தான் விறைப்பா இருப்பானே தவிர, மனசுல அவன் குழந்தை மாதிரிம்மா… அதை நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லையேம்மா…” என அவர் பிரசுதியிடம் சொல்ல, அவரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை…

“அவருக்கேத்த ப்ரெண்ட் தான் அண்ணா நீங்க… உங்க ஃப்ரெண்டை விட்டே கொடுக்கமாட்டீங்களே…” என பிரசுதி சிரிக்க,

“பின்ன அவன் யாரு…. என்னோட சோமுவாச்சே…” என பூரிப்போடு நண்பன் தோளில் கை போட்டார் தட்சேஷ்வர்…

“அடடா… இங்க பாரு சதி… இவங்க மறுபடியும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்னு பாட்டு பாடினாலும் பாடிடுவாங்க போல…” என சதியின் கைப்பிடித்தபடி வந்த இஷான் சொன்னதும்,

“நீ சொல்லுறதும் சரிதான் அண்ணா… ஆனாலும் உனக்கு பொறாமைன்னு தான் நான் சொல்லுவேன்ப்பா…” என அவள் எதேச்சையாக சொல்ல,

அப்போது தான் ஞாபகம் வந்தவன் போல், “அங்கிள், இதெல்லாம் அநியாயமா இல்லையா?... நீங்களும் அப்பாவும் மட்டும் இப்படி தோள் மேல கை போட்டு நின்னா போதுமா?.. நானும் போடவேண்டாமா?...” எனக் கேட்க,

“அட… ஆமா… நானும் உங்களை பார்த்ததுல மறந்தே போயிட்டேன்… கடவுளே… இந்த அத்தையை அவன் பாசமே இல்லாதவன்னுல்ல நினைச்சிப்பான்…” என பிரசுதி சொல்லிக்கூட முடிக்கவில்லை…

“அதெல்லாம் இல்லங்க….” என்றபடி வந்தான் ஜெய்….

அவள் அணிந்திருந்த அதே குங்குமப்பூவின் இதழ் நிறத்தில்… அப்படியே பார்ப்போரின் கண்களை கவர்ந்திழுக்கும் வண்ணம்… மிக எளிமையாக வந்தவனை அப்படியே தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டாள் சதி…

“ஹேய்… செம ஹேண்ட்சமா இருக்குறடா….” என இஷான் சென்று அவனை வரவேற்க, அவன் முகத்திலும் சற்றே விரிந்த புன்னகை…

“பார்த்தீயா… இன்னைக்கு கூட அத்தை சொல்லமாட்டிக்குற?...” என பிரசுதி குறைபட, பதிலுக்கு லேசாக சிரித்தான் அவன்…

“இப்படி சிரிச்சே மழுப்பு…” என்றவர்,

“உனக்கு கொஞ்சமாச்சும் அத்தை, மாமா, நினைப்பு இருக்கா இல்லையா?...” என கேட்க, அவன் அப்போதும் சிரித்தான்…

“அதுசரி… இதுவாச்சும் யாருன்னு தெரியுதா?...” என சொல்லியவர், சதியை அவனின் முன் வந்து நிறுத்த, இப்போது சதியோ அவனை தன் விழிகளில் நிறைத்துக்கொண்டாள்…

மிக அருகில், அதுவும் அத்தனை பேரின் முன்னிலையிலும், அவனைப் பார்க்கிறோம் என்ற உணர்வே அவளிடத்தில் இல்லை…

இமை ஆடாத பார்வையுடன் அவனை அவள் பார்க்க, சட்டென அவளை தன் முன் கொண்டு வந்து நிறுத்துவார்கள் என எதிர்பாராதவன், அவள் பார்வையை சந்தித்தான்…

நேருக்கு நேர் இருவர் விழிகளும் ஒருங்கே சந்தித்துக்கொள்ள, இருவருக்குள்ளும், ஒருவித மின்சார உணர்வு பரவ, தவியாய் தவித்தன நான்குவிழிகளும்…

விழிகள் பேசுமா என்ன?... ஆறடி வளர்ந்த அந்த போலீஸ்காரனுக்கு புரியவில்லை தான் அதுநாள் வரை… ஆனால் இன்று அவள் விழிகள் பல கதைகள் பேச, அவன் விழிகளில் என்னவென்று இனம் பிரித்து சொல்லிட முடியாத ஒரு புதுவித பார்வையை கண்டாள் அவள்…

அது என்ன என்ற ஆராய்ச்சிக்கு அவள் மனம் ஏனோ அப்போது செல்லவில்லை… ஆனால் அவனை விட்டு விழிகளை அகற்ற மட்டும் மறுத்துக்கொண்டிருந்தது அவள் மனமும், கண்களும்…

ஒரு சில வினாடிகளிலேயே தன்னை சுதாரித்துக்கொண்டவன், சட்டென அவளது பார்வையை தவிர்க்க எண்ணினான்…

எங்கே அது முடிந்தால் தானே… அத்தனை பேரின் முன்னிலையிலும் அவளை பாராமல் இருப்பது அவ்வளவு எளிதான விஷயமாக அவனுக்கு தென்படவில்லை…

அந்த நேரத்தில் அவனுக்கு உதவி செய்தார் பிரசுதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.