(Reading time: 10 - 20 minutes)

ஹேய்… என்ன ஜெய் எங்கேயோ பார்க்குற?.... இவ தான் சதி… உன் அத்தை மாமாவோட பொண்ணு….” என அவர் எடுத்துக்கொடுக்க,

“ஓ…” என உதடு மட்டும் அவன் குவிக்க, இங்கே அவளின் மனதில் அவனின் அந்த குவியல் பதிந்து போனது அழகாய்…

“சரியா போச்சு… என்ன அண்ணா ஜெய் இப்படி இருக்குறான்… இதுக்குத்தான் அடிக்கடி வீட்டுப்பக்கம் வந்துட்டு போகணும்னு சொல்லுறது… பாருங்க இப்போ அத்தை பொண்ணை கூட மறந்துட்டான்…” என பிரசுதி சோமநாதனிடம் குறைபட,

அவர் மகனின் முகத்தை பார்த்துவிட்டு சின்ன சிரிப்புடன் நிறுத்திக்கொள்ள,

“சுத்தம்… இதுக்கு அவனே பரவாயில்லை போலயே…” என்ற பிரசுதி,  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

தட்சேஷ்வரை பார்த்து “வீட்டுக்கு வராத பிள்ளை வந்திருக்கான்… இப்படி பார்த்துட்டே நிக்குறீங்க சும்மா….” என சொல்ல,

“வா….” என கூறிவிட்டு ஜெய்யைப் பார்த்தார் அவர்…

அவனும் தலைஅசைப்புடன் லேசாய் சிரிக்க, “நீங்க பேசிட்டிருங்க… நான் வந்திடுறேன்…” என்றபடி நண்பனின் தோள் மீது போட்டிருந்த கையை எடுத்தபடி அங்கிருந்து அகன்றார் தட்சேஷ்வர்…

நண்பனை பின் தொடர்ந்து சோமநாதனும், “நீங்க பேசிட்டிருங்க…” என்றபடி அகல,

“என்ன ஜெய்… ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட நீ சதிகிட்ட பேசமாட்டீயா?...” என பிரசுதி சொல்லி சிரிக்க,

இதற்கு மேலும் அவளிடம் பேசாமல் இருந்தால், நன்றாக இருக்காது என்றெண்ணியவன்,

“எப்படி இருக்குற?....” என கேட்க,

சட்டென அவன் வார்த்தைகள் அவள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பரவி இதயம் மலர்ந்து தான் போனது அவளுக்கு…

அவனின் வார்த்தைகள் தனக்கானவை என்றெண்ணிய மாத்திரத்தில், உடலும் உள்ளமும் ஒரு சேர மகிழ்ந்து போக, தானாகவே அவளின் கன்னத்தில் செம்மை ஏறியது…

அவளின் மகிழ்வையும் நாணத்தையும் கண்டவன், சட்டென தன் பார்வையை திருப்ப, அந்த நேரம் சரியாக பிரசுதியையும் இஷானையும் யாரோ அழைக்க, “இதோ வந்திடுறேன் ஜெய்… நீ சதிகிட்ட பேசிட்டிரு…” என்றபடி இஷானை அழைத்துக்கொண்டு வேகமாக சென்றார் அவர்….

அவர்கள் இருவரும் சென்றதும், அங்கிருந்து சட்டென்று நகர்ந்தான் ஜெய் அவசரமாய்…

அவனின் விலகல் அவளுக்கு வலிக்க, சற்று நேரம் அமைதியாக இருந்தவள், அடுத்து உடனே தைரியமாய் பதிந்து வைத்திருந்த அவனின் எண்ணை எடுத்தாள் தனது செல்போனில்…

தாமதிக்காது அவள் அழைக்க, “புது எண்ணாக இருக்கிறதே… யாருடையது?...” என்ற சந்தேகத்துடன் அழைப்பை ஏற்று, அவன் “ஜெய் ஹியர்…” என கூற,

“சதி பேசுறேன்… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… ப்ளீஸ்…” என அவள் கெஞ்ச,

ஒரு பெருமூச்சோடு, “எங்க இருக்குற…” என கேட்டான் அவன்…

அவள் தான் தோட்டத்தில் இருப்பதாக கூற, அவனும் அங்கே வருவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்…

“அவர் கிட்ட இன்னைக்கு எல்லாம் சொல்லிடணும்…” என்ற முடிவோடு அவள் அங்கே செல்ல, அவனும் ஒரு முடிவோடு அங்கே சென்றான்…

அங்கே அந்த இறைவனும் ஒரு எண்ணத்தோடு காத்திருப்பதை அவர்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை தான்… இறைவனின் விளையாட்டிற்கு முன்னால் அவர்களின் முடிவுதான் எம்மாத்திரம்?...

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.