(Reading time: 7 - 14 minutes)

01. நிர்பயா - சகி

Nirbhaya

ழ்ந்த மயக்கம்...!!

கொஞ்ச நஞ்ச மயக்கம் அல்ல...!!

மிக ஆழ்ந்த மயக்கம்...!!!

"மன்னிச்சிடுங்க சார்...!பிழைக்கிறது கஷ்டம்...!"-மருத்துவரின் ஒலி அவள் செவிகளில் விழுந்த சமயத்திலும்,அதனை பொய்பிக்க அவளால் இயலவில்லை.

உறவுகளின் அழுகுரல் கேட்காமல் இல்லை...!!

எவ்வளவு துன்பங்கள்!!!எத்துனை போராட்டங்கள்...!

இனி,கவலை இல்லை...!!

நான் இறக்க போகிறேனாம்..!!இனி,எவ்வித போராட்டமும் இல்லை.மிதம் மிஞ்சி போனால் ஈம சடங்குகள் கடந்து சில காலங்கள் வரை எனது நினைவுகள் இருக்கும்..!!அதற்கு மேல்????

இதோ எனது நாசியை ஆக்சிஜன் குழாயால் மூடி உள்ளனர்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு வலி!!

இருக்கட்டும்...

இன்னும் சில காலம் தானே...!!

தூரத்தில் எனை ஈன்றவளின் அழுகுரல் கேட்கிறது!!!எனை இந்நிலைக்கு ஆளாக்கியவரை சபிக்கும் குரல் அது!!என் இதயத்துடிப்பின் வீரியம் குறைவது எனக்கே தெரிகிறது!!

அவ்வளவு தான் வாழ்வா???

மரணதேவன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான்!

அவனுக்காவது என் மேல் காதல் இருக்கிறதே..!!

இனி...எந்த பாரமும் இல்லை,விடுதலை அடைய போகிறேன்!!நிரந்தர விடுதலை!!!

போய் வருகிறேன் என்று கூறவும் இயலவில்லை.எனது நம்பிக்கை குறைவது புரிகிறது!!இனி எந்த அற்புத சக்தியும் எனை ரட்சிக்கப் போவதில்லை.ரட்சித்தாலும் பயனில்லை...!!

விடைபெறுகிறேன்..!!

நான் விடைபெறும் முன்,வாசகர்களுக்கு எனை அறிமுகப்படுத்த துடிக்கிறேன்!!

நான் நிர்பயா!!!!

ட்டி...

"இணையதளங்களில் வைரலாக பரவுகிறது உதகை ஆட்சியரின் பிரம்மிக்க வைக்கும் இயல்புகள்!!

மாவட்ட ஆட்சியர் ஆயினும்,நானும் சாதாரண மனிதப்பிறவி என்பதிலே பெருமிதம்!!!"என்று ஒலித்தது தொலைக்காட்சி செய்தி!!!

அச்செய்தியை பார்த்து ஏளனமாய் புன்னகைத்தப்படி நடந்தது அக்குழந்தை!!5 அகவை பூர்த்தி ஆகி இருக்கலாம் அக்குழந்தைக்கு!!!

கிழிந்த வஸ்திரம் அணிந்து,உடலெல்லாம் அழுக்கேறி உதகையின் அக்குளிரை சற்றும் பொருட்படுத்தாமல் மரங்கள் சூழ்ந்த அப்பகுதியில் நடந்தது அக்குழந்தை!!!

நீண்ட நேரம் பயணித்த அலுப்பாக இருக்கலாம்!!அதற்கு மேல் நடக்க இயலாமல் அப்படியே அமர்ந்தான் அச்சிறுவன்.கொடும்பசி அவன் மீது சற்றும் இரக்கம் காட்டாமல் அவனை வாட்டியது!!!

'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்  ஜெகத்தினை அழித்திடுவோம்'என்று சூளுரை செய்தவன் எங்கே சென்றானோ!!அவன் உயிரோடு இருந்திருந்தால்..பிரபஞ்சத்தையே அழித்திருக்க வேண்டி இருக்கலாம்!!!

"டேய் தம்பி!"-மென்மையாக ஒலித்த பெண்ணின் குரலில் நிமிர்ந்தான் அச்சிறுவன்.

"யாருப்பா நீ?இங்கே தனியா என்ன பண்ற??"-அச்சிறுவனால் பதில் கூற இயலவில்லை.அப்படியே மயங்கி சரிந்தான்.

அவன் மீண்டும் கண் விழிக்கையில் அவன் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.கையில் ஊசியில் ஏதோ வெள்ளை நிற திரவம் சொட்டு சொட்டு இறங்கி கொண்டிருந்தது மட்டும் அவனுக்கு தெரிந்தது.அவனது உடைமைகள் மாற்றப்பட்டு,அழுக்கேறிய உடல் சுத்திகரிக்கப்பட்டு இருந்தது.

நடக்கும் காட்சிகளை அவனால் யூகிக்க இயலவில்லை.

"அம்மா!"என்றான்.

அது வரையில் நாளிதழில் கவனம் பதித்திருந்த அவள் நாளிதழை விலக்கி அவனை பார்த்தாள்.அவள் நிர்பயா!!!

"முழிச்சிட்டியா?"

"நா...நான் எங்கே இருக்கேன்??"

"ஹாஸ்பிட்டல்ல!!"

"............."

"நீ அங்கே என்ன பண்ணிட்டு இருந்த?உன் அப்பாம்மா எங்கே?"

"எனக்கு யாருமில்லைக்கா!நான் அநாதை...!"-அவனது பதில் சுருக்கென்று அவளை தைத்தது.

"சாப்பிட்டு நாலு நாள் ஆச்சுக்கா!அதான் மயங்கிட்டேன்!!"

"என்னப்பா சொல்ற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.