(Reading time: 7 - 14 minutes)

"மாக்கா!எனக்குன்னு யாருமில்லை..எதாவது கோவில்ல தங்கி இருப்பேன்!அவங்க கொடுக்குற பிரசாதத்தை கொஞ்சம் சாப்பிடுவேன்!அங்கே தூங்கிடுவேன்!இப்போ கொஞ்ச நாளா கோவில்ல தங்க கூடாது சிலை எல்லாம் திருட்டு போகுதுன்னு என்னை துரத்தி விட்டுட்டாங்கக்கா!அதான்,சாப்பாட்டுக்கு வழி இல்லாம சுற்றிட்டு இருந்தேன்!!"

"என்னையும் மதித்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்க!உனக்கு பெரிய மனசு!"-என்றான் அவன்.

மனித சமூதாயத்தில் மனிதன் என்ற பட்டத்தை ஏற்று வாழும் ஒவ்வொருவருக்கும் சாட்டையடி!!!எனக்கு இது கிடைக்கவில்லை...அது கிடைக்கவில்லை..என்று பொருமும் சான்றோரே..!!விழி திறந்து இச்சிறுவனை போன்றோரை காணுங்கள்..!தெய்வத்தன்மை குடிக்கொண்ட மனதினில் வலிகளே தெரிகிறது!!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுபவர் எவரேனும் உண்டோ??எனில்,அத்தெய்வத்தின் நிலையை காணுங்கள்...!சமூகத்தின் இந்த மாபெரும் மலர்ச்சி சகாப்தமா???

"இந்த ஊர்ல யாரோ கலெக்டராம்கா!!எந்த உதவியா இருந்தாலும் செய்வாங்களாம்.அந்த மாதிரி நல்ல மனசு இருக்கிறவங்களுக்கு கூட நாங்க தெரியமாட்டோம்!"-அவன் பேசியப்படி இருக்க,உள்ளே நுழைந்தார் ஒரு காவல்துறை ஆய்வாளர்.

"மேடம்!"-என்று அவளுக்கு வணக்கம் வைத்தார்.அவள் அந்த வணக்கத்தை ஏற்றதாய் தலையசைத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"காப்பகத்துல பையனை சேர்க்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மேடம்!"

"தேங்க்யூ சார்!"என்றவள்,அச்சிறுவனை பார்த்து..

"உன் பெயர் என்ன?"என்றாள்.

"தெரியாது!"என்று பதிலுரைத்தான் அச்சிறுவன்.

"வித்தியாசமான பெயர் தான்!"-என்றவள் அந்த ஆய்வாளரை பார்த்து,

"வருண்குமார் என்ற பெயரில் அவனுக்கு வேண்டிய எல்லா சர்ட்டிப்பிக்கேட்டையும் ரெடி பண்ணுங்க!"

"சரிங்க மேடம்!"-அச்சிறுவனின் அருகே அமர்ந்து அவனது கண்களை கூர்மையாக உற்று பார்த்தாள் அவள்.

"இனி உன் பெயர் வருண்குமார்!!உன்னை நல்ல ஹாஸ்ட்டல்ல சேர்த்துவிடுறேன்!நல்ல ஸ்கூல்ல சேர்க்க ஏற்பாடு பண்ணுறேன்!!ஒழுங்கா படிக்கணும்.சரியா??"

"............."

"என்ன ஆகணும்னு ஆசை?"

"எனக்கு பெரிய வக்கீல் ஆகணும்!"-அச்சிறுவனின் இதயத்தில் இருந்த தீப்பொறி அவளை சுடாமல் இல்லை.

"கண்டிப்பா!உனக்கு எதாவது உதவி வேணும்னா,என்னை கேளு சரியா?"

"ம்..."-மகிழ்ச்சியோடு தலையசைத்தது அந்த பிஞ்சு மனம்.

"ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிடுங்க சார்!பையனை சேர்த்துட்டு சொல்லுங்க!"

"ஓ.கே.மேடம்!"

"நல்லா படி!"-என்று கூறி திரும்பியவளை தடுத்தது,

"அக்கா!"என்ற அவனது குரல்.

"என்னப்பா??"

"நீ யாரு??"

"அதான் சொன்னியே அக்கான்னு!"-என்று புன்னகை பூத்தவள் திரும்பி நடந்தாள்.மனதில் ஒருவித வசந்தம்!!!

அவள் மருத்துவமனையை விட்டு வெளியேற அங்கே தயாராக இருந்தது மாவட்ட ஆட்சியர் பயணிக்கும் கார்!!

"போகலாம்ணா!"-என்று அதில் ஏறினாள் நிர்பயா.

சில நொடிகளில் அந்த கார் பறக்க ஆரம்பித்தது...

நெடுந்தொலைவு பயணித்திற்கு ஒரு விதையாக!!!

தொலைக்காட்சியை வெறுப்போடு மாற்றி கொண்டிருந்தார் சங்கரன்.

முகம் முழுதும் அவ்வளவு வெறுப்பு!!

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாதவள்,ரிமோட்டை உடைத்தார்.

அவரது கோபம் நிச்சயம் அங்கிருப்பவருக்கு புரியாமல் இருக்காது.

"என்னங்க!"-பதற்றத்தோடு அவரது செய்கை புரியாமல் நின்றார் அவரது துணைவி பல்லவி.

"ம்..!"-ஒரு கரம் உயர்த்தி அவரை தடுத்தார் அவர்.

"என்னண்ணா?என்னாச்சு?"-புரியாமல் கேட்டார் அவர் தங்கை லட்சுமி.

"எந்த சேனலை மாற்றினாலும் அவ முகம்!!என் கன்னத்துல அறையுற மாதிரி திரும்பி வந்திருக்கா!"-சங்கரனின் பேச்சை ஊகித்த பல்லவி பாவமாக தொலைக்காட்சியை பார்த்தார்.

அதில்...

நிர்பயா அளித்த ஊடக பேட்டி போய் கொண்டிருந்தது.

"உங்களுக்கு எது மேடம் ரொம்ப பிடிக்கும்??"

"நான் தான்!!எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என் மனசு சொல்றதை கேட்கிறது!"-சாதாரணமாய் பதில் கூறினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.