(Reading time: 15 - 29 minutes)

டச்சீ..என்னடீ பேச்சு இது ? எதுக்கு லூசு மாதிரி உளறுர நீ?”

“ நான் பயப்பட மாட்டேன் தேன்..ப்ளிஸ் அந்த மாதிரிஏதும் காம்ப்ளிகேஷன்ஸ் இருந்தால் இப்போவே சொல்லிடு”

“ஷ்ஷ்ஷ் சங்கு கூல் பேபி” என்றபடி அவள் தோளை ஆறுதலாய் அழுத்தி பிடித்தாள் தேன்நிலா..

“ இதுபாரு சங்கு, உன் பயம் எனக்கு புரியுது.. நான், உன்ன மாதிரி நிறைய பேரை பார்த்து இருக்கேன்..பிரசவ நேரத்துல இந்த மாதிரி பயமெல்லாம் சகஜம் டீ.. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்னு சொல்லுற மாதிரி, ஒரு பக்கம் எப்போடா குழந்தை பிறக்கும்ன்னு ஆசையாய் இருக்கும்.. இன்னொரு பக்கம் பயமாய் இருக்கும். இதைப்பத்தி தேவையில்லாம யோசிச்சு உன் ஹெல்த்த கெடுத்துக்காத “

“அதில்ல தேனு”

“ உன் அம்மா,என் அம்மா, அத்தை இவங்க எல்லாம் இதை கடந்து வந்தவங்க தானே? அவங்க உன்னைய மாதிரி பயந்தாங்களா?”

“ இப்போ நீதானே டீ சொன்ன எல்லாரும் பயப்படுவாங்கன்னு? வக்கீல் கிட்டயே மாற்றி பேசுறியா?”

“ ஹும்கும் இதில மட்டும் தெளிவா இருப்பியே ! சரி சாப்பிட்டியா நீ ? இதையெல்லம் நினைச்சு தான் மயக்கம் போட்டியா?”

“ எனக்கென்னடீ தெரியும் ? என்னவோ யோசிச்சேன்.. கண்ணை இருட்டிட்டு வந்திச்சு .. அப்படியே படுத்துகிட்டேன்”

“ அடிப்பாவி எவ்வளோ அசால்ட்டா பேசுற நீ? உன்னால உன் புருஷன் பண்ணின ஆர்ப்பாட்டம் தெரியுமா உனக்கு ?”

“ மாமா ஒன்னும் பண்ணிருக்க மாட்டாரு..நீ அவனை பத்தி குறை சொல்லாதே!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ ஷபா ஒன்னு ஷக்திக்கு மரியாதை கொடுத்து பேசு ..இல்லன்னா கொடுக்காத..ஏன் டீ தமிழை கொல்லுற ?உன் பிள்ளைங்களே நாளைக்கு உன்னை இதே கேள்வி கேட்க போகுது பாரு”

“ ஹேய் போடீ.. அதுக்குள்ள நான் மரியாதையா பேசா ஆரம்பிச்சிடுவேன்” என்று சங்கமித்ரா கண்ணடிக்க அவளின் பாவனையைக் கண்டு நிலாவும் சிரிக்க மித்ராவுக்கும் நிலாவுக்கு ஜூஸை கொடுத்தான் ஷக்தி.

“ மாமா உனக்கு ஜூஸ்?”

“ நானா மயக்கம் போட்டேன்? நீதானே ? நீயே குடி”

“ அதெப்படி முடியும் ?நாம ஷேர் பண்ணிக்கலாம்” என்றவள் சொன்னது போலவே அவனிடம் பாதியை கொடுக்க

“ சரி சரி நீங்க உங்க ரொமான்ஸை ஆரம்பிங்க..நான் கிளம்புறேன்” என்றாள் நிலா.

“ரொம்ப தேங்க்ஸ் நிலா”

“ மை ப்ரெஷ்ஷர்..ச்சீ ப்லஷர் ஷக்தி..நான் அப்பறமா பேசுறேன் ...பாய்”.

நிலா அங்கிருந்து மறையும்வரை ஷக்தி மித்ரா இருவருமே மௌனமாய் இருந்தனர். மித்ராவை பார்த்து நிம்மதிபெருமூச்சு விட்டான் ஷக்தி.

“மாமா”

“ம்ம்ம்”

“ஷக்க்க்க்தீ மாமா”

“என்னடீ”

“ நான் ஒன்னு சொன்னா நீ கோபப்படுவியா?”

“ அது நீ சொல்றதை பொறுத்து இருக்கு”

“ ஒரு ஆறுதலுக்காவது சரின்னு சொன்னா என்னடா?”

“எனக்கு பொய் சொல்ல தெரியாது”

“..”

“சரி சொல்லுடீ என்ன விஷயம்?”

“ நான் செத்து போயிட்டா என்ன பண்ணுவ?”

“ ஹேய் வாய் கூடி போச்சா உனக்கு ? இப்படி பேசுறது எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா?”

“ தெரியும் மாமா..நான் தெரிஞ்சும் அப்படி பேசுறேன்னா  அதுக்கு காரணம் இல்லாமல் போகுமா? கோபப்பட்டு என் வாயை அடைக்காமல் கொஞ்சம் பேச விடு”.

“ம்ம்ம் சரி பேசு”

“ மாமா, லைஃப் நமக்கு புடிச்ச மாதிரி தான் போயிட்ட் இருக்கு ..ஆனா அது எப்பவும் நமக்கு சாதகமாக தான் இருக்கும்ன்னு என்ன உறுதி இருக்கு..எனக்கு எதாவது ஆச்சுன்னா” என்று சங்கமித்ரா பேசும்போதே கை முஷ்டிகள் இறுக, பற்களை கடித்துக் கொண்டு வேறு பக்கமாய் திரும்பி கொண்டான் ஷக்தி.

“ எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, இப்போ இருக்குற மாதிரி லைஃப் இருக்காதுல”

“ஓஹோ ..அதுக்கு?”

“அதுக்காக இப்போவே அப்படி நடந்துட்டா என்ன பண்ணனும்ன்னு யோசிக்கிறது தப்பில்லையே”

“ ஓ.. தப்பில்லையா? அப்பறம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.