(Reading time: 15 - 29 minutes)

ம்ம்ம் .. அப்போ எனக்கு வேற வைஃப் கிடைக்காதா மிது ?” என்று அவன் குறும்பாய் கண் சிமிட்ட அவனை மீண்டும் அடிக்கதொடங்கினாள் மித்ரா.

“ ஹேய் ஓடாதேடீ என் குழந்தைங்களுக்கு மூச்சு வாங்கும்” என்று அவன் வழக்கம் போல,குழந்தைகளுக்கு பரிந்து பேச,

“ ஓஹோ அப்போ எனக்கு மூச்சு வாங்கினால் பரவாயில்லையா?”என எப்போதும்போல வழக்கடிக்க தொடங்கினாள் மித்ரா.

கோவில்..!

“ என்னால இதுக்கு மேல உங்க பையனுக்காக காத்திட்டு இருக்க முடியாது..நீங்க என்ன சொல்லுறிங்க ?” சலிப்புடன் கணவரை பார்த்தார் லக்ஷ்மி. நாராயணனும் இமைக்காமல்தனது மனைவியை ரசிக்க அதற்கு எதிர்மாறாய் முறைத்து கொண்டிருந்தார் லக்ஷ்மி.

“ நான் பேசுறது உங்க காதில்விழுதா இல்லையா?”

“ லக்ஸ் .. நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே தான் .. ஆனா ஒன்னே ஒன்னுத்தான் புரியல எனக்கு”

“என்ன சொல்லுங்க?”

“ தப்பு பண்ணினா அவனை என் பையன்னு சொல்லுற நல்லது பண்ணின உன் பையன்னு சொல்லுறியே இதென்ன நியாயம்?”

“ உங்களை… இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா?இது பாருங்க எனக்கு காவியாவை ரொம்பவும் பிடிச்சிருக்கு..கதிருக்கும் அவளை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்.. அவன் தான் வாயைத் திறந்து சொல்ல மாட்டுறான்ல..அதுக்காக நாமளும் அமைதியா இருக்க முடியுமா?”

“ அதுக்காக என்னை என்ன பண்ண சொல்லுற நீ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ கதிர் கிட்ட பேசி பாருங்களேன்”

“இது உனக்கே பேராசையா இல்லையா? உன் மகன் என்றைக்கு எங்கிட்ட மனசு விட்டு பேசி இருக்கான்.. அவனுக்கு நீதானே பெஸ்ட் ப்ரண்ட்?நீயே கேளு அவனை”

” கேட்குறதா? அவனை என்ன பண்ண போறேன்னு நீங்களே பாருங்க” என்றார் லக்ஷ்மி மனதில் திட்டத்தை தீட்டியப்படி..

ன்றிரவு, கதிர் காதில் விழுவது போல சித்ராவிடம் பேசிக்கொண்டிருந்தார் லக்ஷ்மி..

“ காவியாவோட அத்தைபையன் தங்கமான பையன்ல சித்ரா..”

“ஆமா அண்ணி… அந்த பையனோட அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரி”

“ஹ்ம்ம்ம் எல்லாம் நல்லபடியா நடந்தால்சரிதான்”

“ காவியாவுக்கும் நல்ல வாழ்க்கை துணை வேணும்ல?”

“ ம்ம்ம் ஆமா அண்ணி.. காவியா நல்ல பொண்ணு…எவ்வளவு நாள் தான் அவ நம்ம வீட்டுலேயே இருக்க முடியும்..ஹ்ம்ம்ம் நம்ம கதிர் மட்டும் காவியாவை காதலிச்சு இருந்தா, அவ நம்மவீட்டு பொண்ணாய் ஆகி இருப்பாளே”

“ஹும்கும் .. நான் கூட என் மகனுக்கு அவளைத்தான் பிடிச்சிருக்குன்னு நினைச்சேன்.. ஆனா, அவனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லைங்குறபோது நாம என்ன பண்ண முடியும் ?”

“கதிருக்கும்கல்யாண வயசாகுது அண்ணி”

“ ம்ம்ம்.. முதலில் காவியாவோட கல்யாணம்முடியட்டும்.. அப்பறமா நான் அவங்கிட்ட பேசுறேன்”என்றார் லக்ஷ்மி..அவர் எதிர்ப்பார்த்தது போலவே இருவரின் பேச்சை கேட்டு தலையில் இடி விழுந்தது போல ஸ்தம்பித்து நின்றான் கதிர்..

“ அத்தை பையனா? குணாவா? காவியா எப்படி சரின்னு சொன்னா? நான் அவளை விரும்பலன்னு எப்போ சொன்னேன் ?” ஆத்திரமும் இயலாமையும் போட்டிபோட காவியாவைத் தேடி அவள் அறைக்குள்புயலாய் நுழைந்தான் கதிரேசன்.ஹெட்ஃபோனில் பாடல் கேட்டு கொண்டிருந்தவள் அவனைப்பார்த்ததும் அதிர்ச்சியாய் எழுந்து நின்றாள்.

“ என்ன கதிர் இந்த நேரத்துல ?”

“ உன் கிட்ட பேசனும் தர்ஷினி”

“ சொல்லுங்க”

“ குணா கோவிலுக்கு வந்தானா?”

“ஆமா ஏன்”

“கல்யாண பேச்சு நடந்ததாமே!” . குணாவிற்கு திருமணம் நிச்சயிக்கபட்டு இருந்தது. அதைத்தான் சொல்கிறான் என்று நினைத்தவள்

“ம்ம்ம் ஆமா” என்று புன்னகைத்தாள். அவள் இலகுவாய் புன்னகைத்தது அவனுக்கு இடியாய் தலையில் இறங்கியது.

“நீ அதுக்கு என்ன சொன்ன?”

“ நல்ல விஷயம் தானேகதிர் ? எனக்கு ரொம்ப சந்தோஷம்”

“யோசிச்சுதான் சொல்லுறியா?”

“இதில் யோசிக்க என்ன இருக்கு? எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு”

“ எல்லாரையும் விடு.. உனக்கு ? உனக்கிது பிடிச்சிருக்கா?”

“ ஆமா எனக்கும்தான்  ..” என்று காவியா கூறவும், அவள் நெருங்கிவந்த கதிர் தர்ஷினி எதிர்பாராத வேளையில் அவளை ஆரத்தழுவி கொண்டான்.. அவனின் இறுகிய அணைப்பில் மூச்சு முட்டினாலும், இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்த தருணத்தை அடைந்தவள் அவனைவிடவேமாட்டேன் என்பது போல கட்டிக்கொண்டு நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.