(Reading time: 11 - 22 minutes)

08. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ராதாவின் அப்பா பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார், ராதா பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவள் முகத்தைப் பார்த்தார் அவள் அழதது நன்றாக தெரிந்தது, தன் மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து விட்டது, அவள் வாழ்வைப் பாழ் பண்ணக் கூடாது என்று முடிவெடுத்தார்.

பின்பு சுந்தரத்தை நோக்கி " சரி உங்கள் இஷ்டப்படி, உங்கள் வீட்டிற்க்குப் போவோம்" என்றார்.

சுந்தரம் ராதாவைப் பார்த்தார் அவள் இன்னும் அழுதிருக்கிறாள் என்று தெரிந்தது. சிவாவை உள்ளே அழைத்தார். சிவா வந்தவுடன், "சிவா இவர்கள் வீட்டிற்க்கு சென்று ராதாவின் தாயை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்க்கு வந்து விடு" என்று சொல்லி விட்டு " நாம் போகலாம் வாருங்கள்" என்று கூறி கிளம்பினார்கள்.

சிவா கிளம்பும் போது "சிவா என் காரில் நாங்கள் போகிறோம், நீ அந்த இன்னொரு காரை எடுத்துப் போ"

தங்கள் காருக்கு வந்தார்கள் "டிரைவர் முன்னால் திறந்து விடு என்று கூறி நீங்கள் முன்னால் உட்காருங்கள் என்று ராஜெந்த்ரனிடம் கூறி பின் கதவை ராதவிற்காக திறந்து வைத்தார், அவள் உட்கார்ந்த உடன், தான் காரை சுற்றிச் சென்று உட்கார்ந்தார் சுந்தரம்.

கார் அவர்கள் வீடு நோக்கிச் சென்றது, ராதாவின் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார், ஆனால் ராதாவோ தன் அப்பா இருப்பதைக் காண்பித்து தன் கையை இழுத்துக்கொண்டாள், ஆனால் சுந்தரமோ அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

யாரும் ஒன்றும் பேசவில்லை. சுந்தரம் வீட்டிற்க்கு போன் செய்து இன்னும் நான்கு பேர் சாப்பிட வருவார்கள் கூட ஒரு பாயசமும், வடையும் செய்யச் சொன்னார்.

வீடு வந்து சேர்ந்தார்கள் " உள்ளே வாருங்கள்" என்று கூப்பிட்டார் சுந்தரம்.

ராதாவிற்கோ அந்த வீடு ரொம்ப பழக்கப்பட்டது போலிருந்தது.

பஞ்சு வந்தான் "சார் ஏதாவது குடிக்கக் கொண்டு வரவா?' என்று கேட்டான்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

அதற்க்கு ராஜேந்திரன் ஒன்றும் வேண்டாம் இப்போதுதான் குடித்தோம்

என்றார்.

அதற்குள் ராதா "ஏன் லோகு என்ன ஆனாள், லோகு வருவதில்லையா?" என்றுக் கேட்டாள்.

சுந்தரத்திற்கு ஒரே ஆச்சர்யம், அதே போல் ராஜெந்த்ரனுக்கும் ஒரே ஆச்சர்யம் இவளுக்கு எப்படி தெரியும் இவர்கள் வீட்டு வேலைக்கரர்களைப் பற்றி? என்று நினைத்தார்

லோகுவை ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம் சிரித்துக் கொண்டே, "ம், இருக்கிறது" என்றாள் ராதா.

"உனக்கு எப்படிம்மா அவர்களைப் பற்றித் தெரியும்?" என்று கேட்டார் அவள் அப்பா.

அவள் சுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தாள் சுந்தரம் அவளைப் பார்த்து "கேட்கிறார் இல்லை சொல்லு" என்றார்.

“எனக்கு ஒரு பத்து வயது முதல் இந்த நினைவுகள் ஏதோ கதை படிக்கிறது போல, சினிமாப் பார்க்கிறது போல, எல்லாமே ஒரு மாயை போல என் நினைவுகள் தினமும் இதே நினைவுகள். என்னால் யாரிடமும் சொல்ல முடியவில்லை, யாரிடமும் கேட்க முடியவில்லை. அதனால் என் முழு கவனத்தையும் என் படிப்பில் செலுத்திக் கொண்டேன். என் நினைவில் இந்த வீடு ஆனால் ஏதோ கொஞ்சம் மாற்றமிருக்கிறது இந்த வீட்டிற்கும் என் நினைவில் வரும் வீட்டிற்கும் என்றாள், அதற்குள் சுந்தரம் ஆமாம் ஒரு பத்து வருஷத்திற்கு முன்னாள் கொஞ்சம் மாடிபை பண்ணேன்" என்றார்.

" ஓ! , அதான் எனக்கு கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது," என்று பின் தொடர்ந்தாள் " அந்த நினைவில் தினம் இவர்தான் என்னை நான் இப்போது இருப்பதுப் போல் என் முகம், உடல் எல்லாம் பத்து வயது முதலே எனக்கு தெரிந்தது. சற்று முகம் சற்றே முகம் சிவந்திருக்க இவர் என் கணவர், அவர் என்னைக் கொஞ்சுவது , என்னக்காக உருகுவது, அதில் எனக்கு குழந்தைப் பிறப்பது அந்த குழைந்தைக்கு பெயர் கூட வைக்கிறேன் அதுவும் இவர்தான் கேட்கிறார் என்ன பேர் சொல்லு அனு என்று நானும் நம் வாழ்வை ஆனந்தமாக்கிய இவனுக்கு ஆனந்தன் என்று பெயர் வைக்கலாம் என்கிறேன்" என்று சொல்ல,

"நம் ஆனந்தன் இப்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருக்கிறான்" என்று சொன்னவுடன் ராஜேந்திரன் கேட்டார் " என்ன உங்கள் மகன் பெயர் ஆனந்தனா?" என்று "ஆம்!" என்றார் சுந்தரம்.

அவன் பிறந்தது வரைத்தான் எனக்கு தெரிகிறது பிறகு உங்கள் குரலே எனக்கு கேட்கிறது எனக்கு ப்ராமிஸ் பண்ணு அனு என்னிடம் திரும்பி வருவேனென்று, அதுதான் தூக்கத்தில் கூட எனக்கு கேட்கும்

சுந்தரம் கண்ணீருடன் அவள் அருகில் வந்து அவள் கையை பிடித்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அவரால் நம்ப முடியவில்லை. அவளும் அவர் கையை பிடித்துக் அழுத்தமாக பிடித்துக் கொண்டு, “என்னை அறியாமல் இந்த நினைவுகள் வரும்போது நான் உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றும் ஆனால் யாரிடம் போய் கேட்க முடியும்?”என்று சுந்தரத்தின் முகத்தை பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“அப்பா உங்களிடம் அம்மாவே தன் மனதில் இருப்பதை சொல்லத் தயங்குவாள், நான் எப்படி சொல்ல முடியும், அம்மாவிடம் சொல்லலாம் என்றால் ஏற்கனவே அம்மா பயந்த சுபாவம், இதையும் சொல்லி அவர்களை மேலும் பயமுறுத்த வேண்டாம் என்று எல்லாவற்றையும் என்னுள்ளேயே வைத்திருந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.