(Reading time: 11 - 22 minutes)

"தனால் பரவாயில்லை உங்கள் நிலைமையில் எந்த ஒரு தகப்பனுக்கு வரும் கோபம்தான் உங்களுக்கும் வந்தது." என்றார் சுந்தரம்.

"பிறகு நீ அழுததை பார்த்து, நீ+++ அவரை முதல் முறைப் பார்த்தவிதமும் அவரிடம் ஒட்டிக் கொண்ட விதமும், அழுததும் கொஞ்சம் யோசிக்க வைத்தது பிறகு அவரும் நாம் என் வீட்டில் போய் பேசலாம் என்று சொன்னவுடன் சரி என்று ஒத்துக்கொண்டேன்" என்றார் ராஜேந்திரன்.

"எல்லோரும் சாப்பிட்டு விட்டு பிறகு பேசலாமே?" என்று சுந்தரம் சொன்னார்.

"நாங்கள் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போகணும், குழந்தைகள் வந்து விடுவார்கள் " என்றார் சாந்தி.

நீங்கள் சிவாவுடன் சென்று குழந்தைகளை இங்கு அழைத்தமுக்கியமான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வந்து விடுங்கள்" என்றார் சுந்தரம் "ஏன்?" என்று கேட்டார் ராஜேந்திரன்,

அதற்க்கு சுந்தரம் நம்முடைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, அங்கு எல்லோரும் இருக்கலாம் அதனால் உங்களுடைய டெய்லி உபயோக படர சாமான்களை எடுத்து வந்து விடுங்கள்" என்றார்.

"இல்லை நாங்கள் அங்கேயே இருக்கிறோம் என்றார் ராஜேந்திரன்."என்னால் அப்படியெல்லாம் விடமுடியாது, என் மனைவியும் அவள் குடும்பமும் அந்த ஒண்டுக் குடுத்தனத்தில் கஷ்டப் பட விடமுடியாது" என்றார் சுந்தரம்.

“அந்த வீட்டில் தானே இத்தனைக காலமும் வாழ்ந்து வந்தோம்” என்றார் ராஜேந்திரன்.

“இத்தனைக் காலமும் என் மனைவி அந்த வீட்டில் கஷ்டப் பட்டுக் கொண்டிருதாள் என்று எ னக்கு தெரியாது, தெரிந்து இருந்தால் அவள் சின்ன வயதிலிருந்தே எல்லாவித சௌகிரியத்தையும் கொடுத்து அவளை என் கண்ணுக்குள் வைத்திருப்பேனே” என்றார் சுந்தரம் உணர்ச்சி பூர்வமாக.

அதனால் நீங்கள் எல்லோரும் அந்த வீட்டிலேயே இனி இருக்கலாம், மற்றபடி மேற்கொண்டு பேசுவது நாம் சாப்பிட்டவுடன் பேசிக் கொள்ளல்லாம் என்று கூறி " பஞ்சு என்று கூப்பிட்டு சாப்பாடு ரெடியா? "என்று கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

எல்லாம் ரெடி என்று சொன்னான் "எல்லோரும் எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்றார்கள். "சிவா நீயும் சாப்பிட வா" என்று கூப்பிட்டார் சுந்தரம், அவர் அவனை விடவில்லை " இந்த வீட்டில் நீ என்னுடன் சாப்பிடுவது புதிதா? நான் என்றாவது உன்னை என் செக்ரட்டரி என்றா நடத்துகிறேன்? அதனால் சாப்பிட வா" என்று கூறி அவருடைய இடத்திற்கு சென்றார், எல்லோரையும் உட்காரச் சொன்னார்.

ராதாவை தன் பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னார். அவள் உட்கார்ந்தவுடன் என்ன பார்க்கிறாய் என்று கேட்டார். அவள் மெதுவாக டைனிங் டேபிள் புதிதா? என்று கேட்டாள்

சுந்தரம் மறுபடியும் ஒரு ஆச்சர்யப் பார்வைப் பார்த்துவிட்டு “ஆமாம் மாடியை கட்டியவுடன் சில மாற்றினதில் இதுவும் ஒன்று என்றார் . "பிடித்திருக்கிறதா? "என்றும் கேட்டார் அவளும் அதற்க்கு "ஆம், நீங்கள் எது செய்தாலும் பார்த்து, பார்த்து செய்வீர்கள் எப்படி பிடிக்காமல் போகும்" என்றாள் .

எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டனர்.

சிவாவிடம் ராதாவின் அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் மகள்களை அழைத்துக் கொண்டு வரும்படிச் சொன்னார். "அப்படியே அவர்களது முக்கியமான சாமான்களையும் எடுத்து வரவேண்டும் அதற்க்கு யாரையேனும் கூட்டிக் கொண்டு போ. அதுக்கப்புரமாக மற்ற சாமான்களை எடுத்துக் கொள்ளலாம்" என்றும் கூறினார்.

"நான் பார்த்துக்கொள்கிறேன் சார்" என்றான் சிவா.

"அவர்களுடன் நானும் போய் விட்டு வருகிறேன் ராதா இங்கேயே இருக்கட்டும்"என்று சொல்லி ராஜேந்திரன் புறப்பட்டார். அப்பா நானும் வருகிறேன் உங்களுடன்" என்றாள் ராதா.

அதற்க்கு " நில் ராதா நான் உன்னிடம் பேச வேண்டும் நீ போக வேண்டாம் அவர்கள் உடனே வந்து விடுவார்கள்" என்று கூறி அவளை நிறுத்தி வைத்தார் சுந்தரம்.

அவர்கள் சென்றவுடன் மாடியில் தன் ரூமிற்கு அவளை அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து போன் செய்து மாலை டிபன் செய்துவிடும்படி சமையல்காரரிடம் சொல்லிவிட்டு, ராதாவை கண் ஜாடையில் அழைத்து அவளை அனைத்துக் கொண்டார்.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை, பிறகு சுந்தரம் கேட்டார் "என்ன ராதா இந்த கிழவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறாயா?" என்று கேட்டார்.

அவள் உடனே அவரை முறைத்து " என்ன தைரியம் என் கணவனை கிழவன் என்று என்னிடமே சொல்றீங்க?" என்று கேட்டாள்.

அதைக் கேட்ட சுந்தரமோ வாய் திறந்து சத்தமாக சிரித்து. உன் கணவனை ஏதாவது சொன்னால் இவ்வளவு கோபம் வருமா? அப்போ உங்க அப்பாவிடம் ஏன் நான் கல்யாணம் பண்ணிகொள்ளாமல் ல் இருந்துவிடுகிறேன் என்றாய்?" என்றார் சுந்தரம்.

தொடரும் 

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.