(Reading time: 11 - 22 minutes)

"துவுமில்லாமல் நான் இதெல்லாம் வெறும் கனவு என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் இவரை இன்று பார்த்தவுடன் தான் இதெல்லாம் நிஜமென்று தெரிந்தது. என்னால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. என்னைத் தப்பாக நினைக்காதீங்ககப்பா" என்றாள்.

வாசலில் கார் வந்த சப்தம் கேட்டது. ராதவுடைய அம்மா உள்ளே வந்தாள்.

"வாருங்கள்!" என்று சுந்தரம் எழுந்து நின்று வரவேற்றார்.

அவர் வரும்போதே தன் பெண் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவளருகே சுந்தரம் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பாவின் எதிரில் எப்படி யாருடனோ உட்கார்ந்திருக்கிறாள் பார் என்று அவளையே பார்த்தாள் அவள் அம்மா.

"உட்கார்" என்று தன் மனைவியைப் பார்த்து, தன் பக்கத்தில் கை காட்டிச் சொன்னார்.

அவளுக்குத் தெரியும் முக்கியமாக இருந்தால் வழியே தன்னை இப்படி எல்லாம் வரச் சொல்ல மாட்டார் தன் கணவன் என்று.

"சொல்லும்மா உங்க அம்மா வந்து விட்டாள் உன் மனதில் இருப்பதை சொல்லு" என்றார் ராஜேந்திரன்.

"என்ன சொல்லச் சொல்லுகிறீ ர்கள் அப்பா ?இத்தனை நேரம் நான் உங்களிடம் எல்லாம் சொல்லி விட்டேனே" என்றாள் ராதா .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“அது சரி முக்கியமானதை விட்டு விட்டாயே, உன் கல்யாணத்தைப் பற்றி" என்றார் ராஜேந்திரன்

அதற்கு மகள் " உங்கள் இஷ்டம் அப்பா, நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என்றாள். சுந்தரம் அவள் கையை அழுத்திவிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தார்.

அவள் அப்பா சொன்னார் "நீ, நான் சொல்லுகிற பையனை கல்யாணம் செய்துக் கொள்வாயா? என்றார்

அதற்கு அவள் “இல்லை அப்பா கணவன் என்றால் எந்த ஜென்மத்திலும் இவர்தான் எனக்கு. நீங்கள் இவரை கல்யாணம் பண்ணவேண்டாம் வயது வித்யாசம் என்று நினைத்தால், நான் என்றும் உங்கள் மகளாகவே இருந்து விடுகிறேன்” என்றாள் ராதா.

“இந்த முடிவு இப்போ எடுத்தது இல்லை, நான் எப்போவோ முடிவு செய்து விட்டேன். நம் குடும்பமும் கஷ்டத்தில் இருப்பதால் தங்கைகளை படிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து காலத்துக்கும் உங்கள் மகளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர் இப்படி நிஜமாக வருவார் என்று நினைக்கவே இல்லை. " என்றாள் ராதா.

தன் மனைவி சாந்தியிடம் சுருக்கமாக எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார் ராஜேந்திரன், அவளுக்கும் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

"ஏண்டாம்மா இந்த அம்மா ஒன்றுக்கும் உபயோகமில்லை என்று நினைத்து எல்லாவற்றையும் உன் மனதிலேயே வைத்துக் கொண்டு இருந்தாயா?"

கணவனிடம் திரும்பி "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் நம் பெண் சந்தோஷம்தான் நமக்கு தேவை வயது பற்றி என்ன? அவளே எனக்கு இவர்தான் கணவர் என்று சொல்லும்போது அதைத் தடுக்க நாம் யார்? "என்று கணவனிடம் தர்க்கம் செய்தாள். அவள் கணவனுக்கும், பெண்ணிற்கும் ஒரே ஆச்சர்யம் அவள் இப்படி பேசியது.

ராஜேந்திரன் சொன்னார்,” நான் அப்படி நினைதென்னவோ நிஜம் ஆனால் ஆபிசில் பாத்ரூமிலிருந்து அழுதுக் கொண்டு வந்ததைப் பார்த்தவுடன், என் மனசை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆனால், நான் கேட்டவுடன் அது என்ன “உங்கள் இஷ்டம் அப்பா என்று சொல்லுவது, நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அழுத்தி முதலிலேயே சொல்லி இருந்தால் இந்த அளவு நான் பேசி இருப்பேனா? நீ எனக்கு மட்டும் பெண்ணில்லையா?” என்றார்.

அப்பாவின் அந்தப் பேச்சைக் கேட்ட ராதா அப்படியே உருகி விட்டாள். அப்பாவிடம் சென்று "சாரிப்பா, உங்களுக்கு என் மேல் கோபம் என்று நினைத்தேன்" என்றாள். "நான் நினைப்பால் அவருடன் என் பத்து வயதிலிருந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு கல்யாண வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத வயசு, ஆனால் இவர் கணவனாக என்னை கொஞ்சுவதும், என்னைக் கொண்டாடுவதும், நம்ம வீட்டில் யாரும் யாரையும் கொஞ்சி, குழாவி நான் பார்த்ததே இல்லை எனக்கே அந்த நினைவுகள் ஒரு சினிமா காட்சிகள் போலத்தான் இருக்கும். நாளாக, நாளாசத்தியமாக என் மனதில் அதுவே குடியேறிற்று.இப்படி நான் என் மனதில் வடித்திருக்கும் என் கணவன் நேரில் வந்து நிற்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை , அதான் அவரைப் பார்த்ததும் அவர் இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தவுடன், என் கணவர் என்று அவரிடம் ஒட்டிக் கொண்டு விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் அந்த நிமிடம் நீங்கள் என் பக்கத்திலேயே இருந்தது மறந்துவிட்டது" என்றாள்.

"அதான் என் கோபத்திற்கு காரணம் அவர் யாரென்றே தெரியாதபோது, நான் இருப்பதுக் கூட மறந்து அவர் கூப்பிட்டவுடன் அவரிடம் போய் ஒட்டிக்கொண்டாயே, எனக்கு அப்போது உன் நினைவுகள் பற்றி ஒன்றும் தெரியாதலால், நான் கோபமாக இருந்தேன். அந்த கோபத்தில்தான் நான் அப்படி உங்களிடமும் பேசினேன் மாப்பிள்ளை" என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.