(Reading time: 15 - 30 minutes)

"வாங்க சுந்தரம் உட்காருங்க"

"அம்மா.. நந்து இப்போ?" என்று அவர் தயங்கி தயங்கி கேட்க, ஒரு பெருமூச்சு எழுந்தது கனகாம்பாளிடம்.

"அவன் இன்னும் அப்படியே தான் இருக்கான், சொல்ல போன முன்ன விட மோசம்"

"பேசாம நம்ம மதுமதி அம்மாவை வந்து ஒரு முறை பார்த்துட்டு போக சொல்லலாம் ம்மா"

"ஐயோ வேற வினையே வேண்டாம், சின்னவன் கோபப்படுவான்"

"அதுக்காக இப்படியே விடறது சரி இல்லையே" என அவர் கூறி கொண்டிருக்கும் போது, மேலே எதுவோ விழும் சத்தம் கேட்டு இருவரும் எழுந்து பார்த்தனர்.

கையில் மது பாட்டிலுடன் தள்ளாடிய படி கீழே வந்து கொண்டிருந்தான் நந்தகுமரன்.கீழே வந்து நின்று பாட்டியை முறைத்தவனை ஓடி வந்து சமாதானம் செய்ய நினைத்தாள் ருத்ரா. நிலைமை கை மீறும் சமயங்களில் அவளால்  மட்டுமே ஏதோ கொஞ்சம் அவனை அடக்க முடியும்.

"அண்ணா என்ன அண்ணா இது இப்படி காலைல குடிச்சுட்டு? ப்ளீஸ் இதை தூக்கி போட்டுட்டு போய் ரெஸ்ட் எடுங்க அண்ணா"

"ஏய் உன் வேலைய பார்த்துட்டு காலேஜ்க்கு கிளம்பு போ"

இப்போது அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து போயிற்று இல்லை என்றால் மாரு பேச்சு பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

"ப்ளீஸ் அண்ணா சொல்றதை கொஞ்சம் கேளு" அவள் கலங்கிய கண்களுடன் கெஞ்ச, அவள் முகத்தை பார்த்தவன் எரிச்சலுடன் திரும்பி கொண்டான்.

"ச்சே இந்த வீட்டில எனக்கு பிடிச்ச மாதிரி எதுவுமே நடக்காத, எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்கிற போ" என கதியவனின் அருகில் செல்ல கூட முடியவில்லை அவளால்.

நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை கனகத்தால், சுந்தரமும் செய்வதறியாது நின்றார்.

அவனிடம் இருந்து வந்த கஞ்சா நெடியையும் பொருட்படுத்தாமல் அவன் கையை பற்றி,

"வா அண்ணா மேலே போலாம் ப்ளீஸ்" என ருத்ரா அழைக்க அவள் கையை உதறி விட்டு கன்னத்தில் அறைந்திருந்தான் குமரன்.

அதிர்ச்சியில் உறைந்திருந்தனர் மூவரும்!!!!

தே நேரம் சென்னையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த கணவனை முதல் முறையாக பயம் தயக்கம் இன்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள் ஸ்ரவந்தி. மென்மையே உருவானான் போல் தோன்றியது. ஆனால் முதல் நாள் அப்படி இல்லையே?! அதற்கு கண்டிப்பாக ஏதேனும் விளக்கம் வைத்திருப்பான்.

அவள் மேல் விழுந்திருந்த அவன் கையை மெதுவாக விலக்க, அவன் விழித்து கொண்டான். முந்தைய நாள் காலை ஞாபகம் வர சட்டென கண்களை மூடி தூங்குவது போல் பாவனை செய்தால் ஸ்ரவந்தி.

நன்றாக விழித்து அவளை பார்த்தவன் அவள் மேல் இருந்த கையால் அவள் இடையை வளைத்து சற்று நெருங்கி வந்து பேசி கொண்டிருந்தான்.

"உன்ன ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? அதுவும் திடீர்னு? எனக்கும் நந்தனுக்கும் ஏதாவது பிரச்சனையா? நேத்து ஏன் கோபப்பட்டேன்? அந்த போட்டோல இருந்து பொண்ணு யாரு?இப்படி எவ்வளவோ கேள்விகள் உனக்கு இருக்கும் இல்ல டா? எல்லாத்தையும் சீக்கிரமே சொல்றேன்.. உன்ன கஷ்டப்படமா பாத்துக்கிறேன்,  உனக்கு எந்த கவலையும் வர கூடாது,

உன்னை பத்தி தெரிஞ்ச அடுத்த நிமிஷமே உன்னை பார்த்து பேசணும்ன்னு நினைச்சேன் ஆனா கடைசி நிமிசத்துல என்ன என்னவோ ஆகி?! ஆனா ஒன்னு உன் கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் கூட எனக்கு ன்ன என்ன செய்தேன்னு தெரியலை.. ஆனா நீ என்ன நிமிர்ந்து பயத்தோட பார்த்த பாரு அந்த நிமிஷம் நிஜமாவே நான் விழுந்துட்டேன்.. ஐ லவ் யூ கண்ணம்மா" 

அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன். எழுந்து குளியலறைக்குள் புகுந்திருந்தான். மெல்ல விழித்த ஸ்ரவந்தி அவன் சொன்ன அனைத்தையும் மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து அசை போட்டாள்.

தன்னை பற்றி தெரிந்த உடன் ஓசை வேண்டுமென நினைத்தானா? எல்லாமும் தெரிந்து இருக்குமோ கடவுளே?! சற்று நேரம் அமைதியில்லாமல் தவித்தவள் அவன் கடைசியாக சொன்ன 'ஐ லவ் யூ' நினைத்து மனதை தேற்றி கொண்டாள். நடந்தவை இவனுக்கு தெரிந்தால் இப்படி ஒரு மனைவியை நிச்சயமாக விரும்ப மாட்டான்.

ஆனால் ஒன்று அவன் எந்த நிலையில் தன்னை மணந்து கொண்டான் என்று தெரிந்த உடனே தன்னை பற்றி சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.

'ம்.எஸ் மருத்துவமனை' என்ற பெரிய போர்டு இருந்த கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவில் தன் காரை நிறுத்திவிட்டு ஸ்ரவந்தியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தான் மிதுர்வன். ஒரு வாரம் கடந்திருந்தது, ஸ்ரவந்தியின் காலில் இருந்த காயம் சரியாகி நன்றாக நடக்க ஆர்மபித்திருந்தாள்

எதிர்ப்படும் அனைவர்க்கும் இனிய புன்னகையுடன் "குட் மார்னிங்" என கூறி கொண்டே வந்தவன் திரும்பி ஸ்ரவந்தியை பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.