(Reading time: 11 - 22 minutes)

ஹா ! இந்தப் பெண்ணின் ஆடை வித்தியாசமாக இருக்கிறதே! தைக்காத ஆடையை அவள் எப்படி லாவகமாக அணிந்திருக்கிறாள் என்று அந்த பெண் கட்டியிருந்த சேலையைப் பார்த்து வியந்தாள். அப்பெண், ஒரு மழலைச் சிறுமியின் காதைப் பிடித்து திருகி, கண்களை உருட்டி அந்த சிறுமியிடம் எதையோ கூறுவதைப் போல் இருந்தது அந்த புகைப்படம்.

மீண்டும் அமேலியாவின் கவனம் முத்த புகைப்படத்தை தேடி அலைந்து, அதை ஒரு முறை பார்த்து பதற்றத்தோடு மூடினாள்.

இரவு வந்தது. கப்பலில் விளக்குகள் எரிந்து இரவை இன்னும் அழகுபடுத்தியது. பீரங்கியினுள்ளேயே இருந்ததனால் கை  கால்கள் விரைத்திருந்த அமேலியா, தைரியம் வந்தவளாய் மெல்ல பீரங்கியினுள் இருந்து வெளியே வந்தாள். கப்பலில் கால் வைத்து மெல்ல மெல்ல நடந்தாள்.

கப்பலின் மேல் இருந்த ராட்சத விளக்கின் ஒளி கடல் மேல் பட்டு பொன்னிறமாக அவளுக்கு காட்சியை தந்தது. கடல் அலையின் ஓசை, தனியாமையான பயணம், இதுவரை பார்க்காத காட்சிகள் இவற்றையெல்லாம் அவள் யோசித்து பார்த்தாள். சில்லென்ற காற்று அவள் உடலைத் தழுவியது தன் ஆடையை இறுகப் பிடித்து மூச்சுக்காற்றை இழுத்துவிட்டாள்.

தான் எந்த நிலையில் இங்கு இருக்கிறோம் என்பதை கூட அவள் மறந்திருந்தாள். இந்த உலகே கடலாகி விட்டதாகவும் தான் மட்டுமே இந்த உலகில் வாழ்வதாகவும் அவளுக்கு தோன்றியது. கடலையே வெறித்துக்கொண்டு வந்தாள். லேசான மழைச் சாரல் பொழிந்தது; அதை ரசித்தாள்.

அவளது மனம் காதலர்களின் முத்தத்தையே எண்ணிக் கொண்டிருந்தது. அவளது உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வுகள் மேல் எழும்பின. இந்த உணர்ச்சிகள் எங்கிருந்து தோன்றுகின்றன? இவை நல்லவையா கெட்டவையா என்று கூட அவளுக்கு புரியவில்லை. சாரல் மழையிலேயே நின்று கொண்டிருந்தாள். இந்த பயணம் அவளுக்கு சந்தோசத்தை தராவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவளை நிம்மதி அடையச்  செய்தது.

அமேலியாவுக்கு பெற்றோரின் ஞாபகம் வந்தது. கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன .நாம் வீட்டிற்கு சென்றுவிடுவோம் என்று தனக்கு தானே ஆறுதல் கூறி மனதைத் தேற்றிக்கொண்டாள். கண்களை மூடி மழைக் காற்றை ரசித்தாள். கப்பல் அவ்வப்போது லேசாக அதிர்ந்தபடி சென்றது. நீண்ட நேரமாக கப்பலின் ஓரம் நின்று கொண்டே இருந்தாள்.

திடீரென பேச்சுக்குரல்கள் அவள் காதில் விழுந்தன. கப்பலின் ஒரு மூலையில், இருளில் தன்னை மறைத்துக்கொண்டாள்.. புகைபிடித்தபடி இரண்டு ராணுவ வீரர்கள் கதவைத் திறந்து மேலே வந்தனர்.

அவர்களைக் கண்டதும் அமேலியா பயந்தாள். அவளுடைய  உடல் நடுங்கியது, உள்ளத்தில் சேகரித்து வைத்திருந்த ஆறுதல் எல்லாம் அழிந்து போனது. தான் பிடிபட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று பயந்து ஒடிந்து போனாள்.

ராணுவ வீரர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கிகள் அவளை பயமுறுத்தின. அவர்கள் சுமார் பத்து நிமிடம் கப்பலில் நடந்தபடி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். இருளில் மறைந்திருந்த அமேலியாவின் முகத்தில் அந்த குளிரிலும் வியர்வை  முத்துக்கள் அரும்பின.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ராணுவத்தினர் மெல்ல மெல்ல அமேலியாவை மறைத்து வைத்திருந்த இருளை நோக்கி நடந்து வந்தனர். அமேலியா தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அப்பொழுது தூரலாக வந்து கொண்டிருந்த மழை ஓவென வானைப் பிளந்து கொட்டியது. அந்த மழையில் மேற்கொண்டு நிற்க முடியாமல் ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். 

ண்களைத் திறந்த அமேலியா அவர்கள் இல்லாததைக் கண்டு நிம்மதி அடைந்தாள். வேகமாக ஓடி பீரங்கியினுள் தன்னை பதுக்கிக்கொண்டாள். குளிரால் அவள் உடல் நடுக்கம் அடைந்தது. பீரங்கியினுள் இருந்த ஒரு துணியை தன் உடலில் போர்த்திக்கொண்டு நடுங்கியபடி படுத்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு உறக்கம் மெல்ல தழுவியது.

அரைத் தூக்கத்தில் நடந்தவை அனைத்தையும் எண்ணிப் பார்த்தாள். எல்லாமே வித்தியாசமாக தென்பட்டது. நிச்சயம் இவையனைத்தும் அவள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்களாய் பின்னாளில் திகழும். அப்பொழுது நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதை அவள் சிந்தித்து பார்த்தாள். தூக்கம் அவளை முழுதாய் ஆட்கொண்டது..

இனி, எதிர்பாரா சம்பவங்களை சந்திக்கப் போகும் அமேலியாவுக்கு நிச்சயம் நிம்மதியான உறக்கம் தேவைப்படும்.

தொடரும்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.