(Reading time: 7 - 14 minutes)

"வ்னிங் பார்க்கலாம் தாத்தா!படத்துக்கு நானும் வரேன்!"

"தேங்க்ஸ் ஹனி!"-என்றவரின் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பினாள் நிர்பயா.

அவள் காரை நோக்கி வர,கார் கதவை திறந்தார் ஓட்டுநர் பீட்டர்.

"எத்தனை முறை சொல்லிருக்கேன்ணா!இந்த அளவு மரியாதை தர வேணாம்னு!கேட்க மாட்டீங்களா?"

"இல்லைம்மா!"

"இன்னொரு முறை திறந்து பாருங்க!அப்பறம்,நான் ஆபிஸூக்கு நடந்து தான் போவேன்!"

"இனிமே பண்ண மாட்டேன்மா!"-என்று அவர் மழுப்பலோடு கூற,புன்னகைத்தப்படி காரில் ஏறினாள் அவள்.

கார் காற்றை கிழித்துக்கொண்டு புறப்பட்டது.

உதகையின் அழகினை பருகியப்படியே பயணித்தாள் நிர்பயா.சிறிது தூரம் கடந்ததும்,என்ன நினைத்தாளோ,

"அண்ணா!காரை நிறுத்துங்க!"என்றாள்.கார் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"என்னம்மா?"

"கொஞ்சம் இருங்க சர்ச்சுக்கு போயிட்டு போகலாம்!"-அவர் திருதிருவென விழித்தார்.

"வாங்கண்ணா!"-என்று இறங்கி நடந்தாள்.அவளது நடவடிக்கை புரியாதவர் பின் தொடர்ந்தார்.

கர்த்தரின் திவ்யத்துவம் வாய்ந்த அந்த ஆலயம்!மனிதரின் பாவங்களை மன்னித்து ரட்சித்த தேவனின் அந்த ஆலயம்!இறைமகனின் செங்குருதியின் துளியால் புனிதத்தை ஈன்ற அந்த ஆலயம் அவள் மனதை கட்டுப்படுத்தியது.

"ம்..இப்போ வேண்டிக்கோங்க!கார் போகும் போது சர்ச்சை பார்த்து கும்பிடுறது நல்லா இல்லை..!"-என்றாள் பீட்டரிடம்!!

அப்போது தான் அவள் செய்கைக்கான காரணம் அவருக்கு விளங்கியது.

நிர்பயா சாதாரணமாக கோயிலின் வழிபாடு போலவே இரு கரம் கூப்பி வணங்கினாள்.பீட்டர் மண்டியிட்டு அமர்ந்து தனது பிராத்தனையை இறைவனிடம் செலுத்தி எழுந்தார்.

"தேங்க்ஸ்மா!போகலாம் வாங்க!"

"அண்ணா!அது என்ன இடம்?"-என்றாள் ஒரு சிறிய அறையை காண்பித்து!

"பாவ மன்னிப்பு வழங்குற இடம்மா!"-என்றார் பீட்டர்.

"போகலாமா?"

"ஆ..இதோ வரேன்!"-என்று அந்த அறையை நோக்கி நடந்தாள்.

அந்த பாவ மன்னிப்பு அறையில் ஒருவர் அமர்ந்தப்படி பைபிள் வாசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது!!இவள் வெளியே மண்டியிட்டாள்.இவளை பார்த்தவர்,தனது மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்து,சிலுவையை கையில் ஏந்தினார்.

"உங்கள் பெயரை கூறுங்கள்!"

"நிர்பயா!"

"கர்த்தரிடம் பாவங்களை கூறுங்கள்!அவர் மன்னிப்பை வழங்குவார்!"

"நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியாது!இதுவரைக்கும் நான் செய்த தவறு எல்லாம் நிச்சயம் அவருக்கு தெரியாம இருக்காது.அவருக்கு தெரிந்த நான் செய்த எல்லா தவறுக்கும் எனக்கு மன்னிப்பு வேணும்!"-என்றாள புன்னகையோடு!!

அந்த பாதிரியார் ஆச்சரியத்தோடு அவளை உற்று பார்த்தார்.

அவர் விழிகளில் ஒருவித காருண்யம்!!மகிழ்ச்சி!!

"பரம மண்டலத்தில் வசிக்கும் பிதாவே!"-என்று ஏதேதோ பைபிள் வாசகங்களை படித்தார்.பின்,நிர்பயாவின் நெற்றியில் சிலுவையை விரலால் வரைந்து,

"உனது பாவங்கள் யாவும் தீர்க்கப்பட்டன!"என்றான்.

"தேவன் என்றும் உன்னோடு துணையாய் இருப்பார்!"-என்று அவரிடம் இருந்த சிலுவையை அவளிடம் தந்தார்.

அதை வாங்கிக்கொண்டவள் புன்னகையோடு எழுந்து வந்தாள்.மனதினில் மேலும் ஒரு நம்பிக்கை சூரிய ஔியாய்!!!

"சார்!கேஸ் டிடைல்ஸ்!"-கண்கள் மூடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது அவனது ஜூனியரின் குரல்!!!

"ம்..தேங்க்யூ நிரஞ்சன்!நீங்க கோர்ட்டுக்கு கிளம்புங்க! நான் ஒரு 10 நிமிஷத்துல கிளம்பி வரேன்!"

"ஓ.கே.சார்!"-அவன் சென்றதும்,அந்த பென்டிரவ்வை எடுத்து டிராவில் திணித்து பூட்டினான் அவன்.

அவன் ஜோசப்!ஜோசப் வில்மட்!பிரபல வழக்கறிஞர்!இந்திய கிரிமனல் சட்டத்தை விரும்பி கரம் பற்றியவன்.

அவன் குறித்து கூற வேண்டும் என்றால்...ஒன்றல்ல!இரண்டல்ல!பலவற்றை கூறலாம்!!

அவன் தனது ஐந்தாம் அகவையில் பெற்றோரைஇழந்தவன்.அவனுக்கென இருப்பதெல்லாம் அவனது அநுஜன் எட்வர்ட் மற்றும் அவனது தாயின் சகோதரன் வில்லியம் மட்டுமே!!ஒரு காலத்தில் பொறுப்பற்று,சுற்றி திரிந்தவன் தான் அவன்.ஆனால்,இன்று????

அது போக போக தான் புலப்படும்!!

தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.அவனது விழிகளிலும் அது தென்படவே செய்தது!அது...இனம் புரியாத ஒருவித தேடல்!!!

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.