(Reading time: 11 - 22 minutes)

லுவலகத்தில் அமர்ந்திருந்த ஜானவிக்கு வேலையே ஓடவில்லை…

“வேலை கேட்டு போன இடத்துல என்னாச்சுன்னு தெரியலையே… கடவுளே எப்படியாவது ஜாயின் பண்ணிக்க சொல்லிடணும் உடனேயே….” என அவள் இங்கே மனமுருக வேண்டிக்கொள்ள,

அங்கே அர்னவிடம், “இன்னைக்கே நீங்க சேர்ந்துக்கலாம் தம்பி…” என்றார் ஒருவர்….

“தேங்க்யூ சார்….” என்றவனின் குரலில் நன்றியுணர்வு தெரிய, அவர் அவன் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றதும், அவன் அந்த கட்டிட்த்தை விட்டு வெளியே வந்து பைக்கை உதைத்ததும், அடுத்த சில மணி நேரத்தில் அவன் தனது வீட்டிலிருந்தான்…

வந்தவன் களைப்பையும் மீறிய சோர்வில், அப்படியே படுத்துக்கொள்ள, அவனது செல்போனும் அவனது பக்கத்தில் கிடந்து இளைப்பாறியது…

சட்டென திரும்பி படுத்தவனின் கண்களில், போன் தட்டுப்பட, குறுகுறுவென்று அதையே பார்த்திருந்தான் சில நொடிகள்…

பின், வரிசையாக காலையில் அவளிடம் பேசிய அனைத்தும் நினைவுக்கு வர, தன்னையே கடிந்து கொண்டான் அவன்…

வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று உனக்கு தெரியாதா அர்னவ்?... என நூறு முறையாவது தன்னை திட்டி தீர்த்திருப்பான்…

பின், சோர்வோடு மணியை திரும்பி பார்த்தவன் திகைத்தான்… இரவு எட்டு மணி தாண்டியிருந்தது… அவன் வீட்டிற்கு வந்த போதே மணி 6 ஐ தொட்டிருந்தது…

அவன் எதாவது சொல்வான், பேசுவான் என்று எண்ணியிருந்த ஜானவிக்கு ஏமாற்றமே மிஞ்ச, கடைசியில் அவன் திட்டினாலும் பரவாயில்லை என்றபடி அவனுக்கு போன் செய்தாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

யாரென்று அவன் செல்போனை எடுத்துப் பார்க்க, அது ஜானவி என்று தெரிந்ததும், அப்படியே பார்த்திருந்தான் அதனையே… அவன் ஏற்கப்படாமலேயே அழைப்பும் நின்றுவிட, அவள் மீண்டும் முயற்சித்தாள்…

இம்முறை அவன் அதை எடுத்துவிட, அவளுக்கு அங்கே நிம்மதி வந்திருந்தது கொஞ்சம்… போனை எடுத்துவிட்டான் என்று…

அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை… அவன் அடுத்து சொன்ன வார்த்தைகளில் அது இருந்த இடம் தெரியாமல் கலைந்து போனது…

மறுநாள் வழக்கம் போல் ஜானவியை எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஜனனி, ஜானவியின் முகத்தில் இருந்த அந்த கவலையைக்கண்டு அவளருகில் ஓடினாள்..

“ஹேய்… ஜானு… ஏன் உன் ஃபேஸ் இப்படி இருக்கு?... நைட் தூங்கலையா நீ?...” என ஜனனி கவலையாக கேட்க

“ம்ம்… தூங்கினேன்…” என்றாள் அவள் சுரத்தே இல்லாமல்…

“அடிச்சேன்னா தெரியும்… பொய் சொல்லுற நீ எங்கிட்டயே… சொல்லுடி என்னாச்சு?...”

“ம்… ஒன்னுமில்லை ஜனனி… வா வேலையைப் பார்க்கலாம்…”

“அது எங்கேயும் ஓடிப்போகாது… முதலில் நீ உன் மூஞ்சியை கண்ணாடியில பாரு… எப்படி இருக்குன்னு… இதே அழுமூஞ்சியோட நீ அங்க என் பக்கத்துல வந்து உட்கார்ந்த அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்…”

“சரி… இது போதுமா?..” என வலுக்கட்டாயமாக புன்னகையை வரவைத்துக்கொண்டு ஜனனியின் பக்கம் திரும்பி அவளிடம் கேட்டாள் ஜானவி…

“எங்கிட்ட இனி நீ பேசாத…” என அவளிடமிருந்து விலகி நடந்தாள் ஜனனி…

“உன் தம்பியும் இதே தான் சொன்னாங்க….” என அழும் குரலில் ஜானவி சொன்னதும்,

“என்னடி உளறுற?... அவன் ஏன் அப்படி சொன்னான்?... நீயென்ன செஞ்ச முதலில் அதை சொல்லு… என்னாச்சு?....” என ஒவ்வொன்றாக கேட்டாள் ஜனனி அவசரமாக…

ஜனனி கேட்டதும், நேற்றைய நாளின் நினைவில் அவளின் முகத்தினை பார்த்தாள் ஜானவி…

“என்ன?... சொல்லு… எதுக்கு போன் பண்ணின?...”

“இல்ல… வந்து… ம்ம்… எங்க இருக்குறீங்க?...”

“எங்க இருந்தா உனக்கென்ன?... நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு?... எதுக்கு போன் பண்ணின?...”

“இல்ல காலையில வேலை விஷயமா வெளியே போனீங்கள்ள, அதான் என்னாச்சுன்னு…………”

“வேலை கிடைச்சிட்டு… கிளம்பிட்டிருக்கேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல போகணும்…” என்றான் அவன் பட்டென…

“ஹேய்… நிஜமாவா?... வேலை கிடைச்சிட்டா?... எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?...” என குதூகலித்தவள், பின் யோசித்தவளாக,

“வேலைக்கு இப்போ கிளம்புறீங்களா?... ஏன்?.... சைட் வொர்க் நைட்டும் உண்டா?...” என தயங்கி தயங்கி கேட்டதும்,   

“சைட் வொர்க் நைட் கிடையாது… ஆனா வேற வொர்க் உண்டு…” என்றான் அவன் சாதாரணமாக…

“வேற வொர்க்கா?... ம்ம்ம் என்ன வொர்க்?...”

“அதெல்லாம் உனக்கெதுக்கு?...” என அவன் பட்டென சொன்னதும், அவளுக்கு அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை…

“எதுக்குமா கோவப்படுறீங்க?... என்ன வேலைன்னு தான கேட்டேன்…” என அவளும் நிதானமாக மெல்ல சொல்ல,

“கொரியர் வேலை… போதுமா?...” என்றான் அவன் சட்டென கொஞ்சம் சத்தமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.