(Reading time: 11 - 22 minutes)

கொரியர் வேலையா?... என்ன ஜானு சொல்லுற?... பகல்ல தான கொரியர் வேலை உண்டு நைட்டு என்ன கொரியர் வேலை?...” என்ற ஜனனியிடம்,

“நானும் அத தான் கேட்டேன்… அதுக்கு உன் தம்பி எனக்கு அதெல்லாம் சொல்ல இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டாங்க….” என்றாள் ஜானவி பாவமாக முகத்தினை வைத்துக்கொண்டு…

“சரி விடு… இதுக்குத்தான் மூஞ்சியை தூக்கி வச்சிருந்தீயா?...”

“அவர் கோபப்பட்டதுக்கு ஒன்னும் நான் மூஞ்சியை தூக்கி வைக்கலை… நைட்டெல்லாம் முழிச்சிருந்து வேலை பார்த்துருப்பாங்கள்ள… அத நினைச்சிட்டே இருந்தேன்… கஷ்டமா இருந்துச்சு… தூக்கமே வரலை… அவர்கிட்டயும் பேசமுடியலை… பாவம் அவர் நிலைமையும் புரியுது… சிவில் என்ஜினியரிங்க் முடிச்சிட்டு இப்படி அவர் கஷ்டப்படுறது என்னால தாங்கிக்கவே முடியலை… அவரும் நிறைய முயற்சி செய்யுறார்… ஆனா அவர் போற இடமெல்லாம் தப்பான ஆட்களாவே இருக்குறாங்க… அவர் தப்புக்கு உடந்தையா இருக்க மாட்டேன்னு சொல்லுறார்… என் வேலையில நான் கரெக்டா இருப்பேன்னு சொல்லுறது மத்தவங்களுக்கு தப்பா படுது… ஆனா ஏன் தான் கடவுள் அவரை இப்படி பாடா படுத்துறாரோ தெரியலை… மனசுக்கே கஷ்டமா இருக்கு ஜனனி….” என விழி கலங்கியவாறு ஜானவி சொல்ல,

அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஜனனி, “நீயும் என்ஜினியரிங்க் முடிச்சிட்டு இந்த சாதாரண வேலையில தான இருக்குற?... உனக்கு அப்போ கஷ்டமா இல்லையா?...” என மெல்ல கேட்டதும்,

சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தாள் ஜானவி..

“எனக்கு என்ன கஷ்டம்?... எனக்குத்தான் எல்லாம் ஷேர் பண்ணிக்க என் ஃப்ரெண்ட் நீ இருக்குறீயே என் பக்கத்துல… அப்புறம் என்ன கவலை எனக்கு?... உன் பக்கத்துல இருந்து பார்க்குறப்போ இந்த வேலையும் எனக்கு பிடிச்சிருக்கு…” என்ற ஜானவியின் கைகளைப் பிடித்துக்கொண்ட ஜனனி,

“அதே போல என் தம்பிக்கும் கஷ்டம் இருந்தாலும் அது போயிடும்… அதான் அவனுக்காக உருகுற நீ இருக்குறீயே, மனசுக்கு நெருக்கமா அவன் பக்கத்துலயே… எந்த கஷ்டமா இருந்தாலும் அவனை தனியா அனுபவிக்கத்தான் நீ விடமாட்டீயே… அவனோட விடா முயற்சிக்கு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும் ஜானு… நீயும் சீக்கிரம் எக்ஸாம்ல பாஸ் பண்ணுற வழியைப் பாரு…“ என்றதும், அவளைக் கட்டிக்கொண்டாள் ஜானவி…

எக்ஸாம் என்ற பெயர் கேட்டதும், அப்படியே அவளுக்கு தெரியாமல் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துகொண்டாள் ஜானவி…

சில மணி நேரங்களுக்குப் பிறகு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஜானு… சார் உங்கிட்ட தான் கேட்குறார்… நீ என்ன பண்ணிட்டிருக்குற?...” என ஜனனி அவளைப் பிடித்து உலுக்க,

“ம்ம்… என்னடா…” என்றபடி அவளைப் பார்த்தாள் ஜானவி…

அவளின் முகத்தினைப் பார்த்த ஜனனி, அவளின் கையில் செல்போனை தூக்கி கொடுத்துவிட்டு,

“சார்கிட்ட நான் சொல்லிக்கிறேன்… நீ போ போய் பேசிட்டு வா… போ….” என விரட்டினாள்…

“யார்கிட்ட பேச சொல்லுற?...” என புரியாமல் விழித்த ஜானவியிடம்,

“என் தம்பிகிட்ட பேசிட்டுவா… அப்பதான் உன் முகத்துல கொஞ்சமாச்சும் கலையே வரும்… போ… போய் பேசிட்டு வா…”

“இல்லடா… அவர் தூங்கட்டும்… நைட் வேலை வேற… அசதியா இருக்கும்… நான் அப்புறம் பேசிக்கிறேன்…” என அவளும் வாடியவாறே சொல்ல,

“ம்ம்… சரி… அவனுக்கு மெஸேஜ் பண்ணி வை… உன் மனசுல என்ன தோணுதோ அதை அவனுக்கு அனுப்பி வை… அவன் எழுந்ததும் படிச்சிட்டு உனக்கு ரிப்ளை பண்ணட்டும்… ஓகேயா?...”

“காலையிலேயே குட்மார்னிங்க் அனுப்பிட்டேன்டா… அதோட வேற எதுவும் பேச இப்போ எனக்கு தோணலை… அவர் எழுந்ததும் ஃபர்ஸ்ட் சாப்பிட்டீங்களான்னு கேட்கணும்… அப்புறம் வேலை எப்படி இருக்கு, பிடிச்சிருக்கான்னு கேட்கணும்… அவர் வரட்டும் ஜனனி… வந்ததுமே பேசுறேன்… தூங்கட்டும் இப்போ…..” என சொல்ல, அவளின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்ட ஜனனி,

“இதை தான் நிஜமா காதல்னு சொல்லுவாங்களா?... இப்படி உருகுறா அவனுக்காக?... காதல் இப்படிஎல்லாம் உருக வச்சிடுமா?... இந்த அளவுக்கு ஏங்க வச்சிடுமா?...” என அவளைப் பார்த்துக்கொண்டே தனக்குள் கேள்வி கேட்ட ஜனனியைப் பார்த்து

“என்ன ஜனனி?... ஏன் அப்படி பார்க்குற?...” என கேட்டாள் ஜானவி…

“ம்ம்… சீக்கிரம் நீ அவனை கல்யாணம் பண்ணிட்டு, அவனை நல்லா பார்த்துக்கன்னு சொல்ல தோணுது… வேற ஒன்னுமில்லை….” என ஜனனியும், மீண்டும் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டு,

ஜானவியிடம், “எதுவுமில்லை….” என்றபடி தலைஅசைத்துவிட்டு, சிநேகமாக புன்னகைக்க…. அந்த புன்னகை அவளது முகத்திலும் கொஞ்சம் தெரிந்ததைக் கண்டு சற்றே நிம்மதி அடைந்தாள் ஜனனி….

ஹாய்… ப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்.. சாரி ஃப்ரெண்ட்ஸ்… இந்த வீக்-ம் குட்டி அப்டேட் தான் தர முடிஞ்சது… நெக்ஸ்ட் வீக் பெரிய அப்டேட் தரேன் கண்டிப்பா…

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…

பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.