(Reading time: 9 - 17 minutes)

" அவர் இன்னைக்கு ஏதோ முக்கியமான ஆபரேஷன் இருக்குன்னு சொன்னார்"

"ஹ்ம்ம்ம் பரவாயில்லை அண்ணி நீங்க அண்ணா கிட்ட சொல்லிடுங்க.. நான் நாளைக்கு காலைல வரேன்.. இன்னைக்கு நைட் ட்ரெயின் விடியும் போது அங்க இருப்பேன்"

"ஹ்ம்ம் சந்தோஷம் ருத்ரா சொல்லிடறேன்"

"அப்புறம் அண்ணி இதை அம்மா அப்பாகிட்ட சொல்ல வேண்டாம் நான் வந்து பேசிக்கறேன் ப்ளீஸ்"

ஏன் அவள் அப்படி கூறுகிறாள் என்று யோசித்த போதும் ஸ்ரவந்தி வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

"சரிம்மா"

"நீங்க என்ன விஷயமா கூப்பிட்டீங்கன்னு இன்னும் சொல்லலையே"

"அது என்னோட செர்டிபிகேட்ஸ் அங்க நான் தங்கியிருந்த ரூம்ல இருக்கிற காபோர்ட்லயே விட்டுட்டு வந்துட்டேன் அதை கொஞ்சம் அனுப்ப முடியுமான்னு கேட்க தான் கூப்பிட்டேன்"

"ஓ நானே எடுத்துட்டு வந்திடுறேன் அண்ணி.."

"ரொம்ப நன்றிம்மா"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜாஜனின் "உனக்காக மண்ணில் வந்தேன்" - Romantic fantasy love story

படிக்க தவறாதீர்கள்...

"அப்போ வெச்சுடவா அண்ணி எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு"

"ஹ்ம்ம் சரி"

போனை வைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்த இரு பெண்களின் மனதிலும் சில விடை தெரியாத கேள்விகள் உழன்று கொண்டிருந்தன.

இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த மிதுர்வன் அன்னையிடமும் தந்தையிடமும் மருத்துவமனை குறித்தும் ஸ்ரவந்தியின் படிப்பை பற்றியும் பேசிக் கொண்டிருக்க ருத்ரா வரப்போகும் விஷயத்தை எப்படி சொல்வது என யோசித்து கொண்டிருந்தாள் ஸ்ரவந்தி. அவன் அறைக்கு வந்த உடனே சொல்லி கொள்ளலாம் என அறையில் அவனுக்காக காத்திருந்தாள்.

பொதுவாக மிதுர்வன் தன் அம்மா அப்பாவிடம் பேசும் நேரங்களில் ஸ்ரவந்தி அங்கே செல்ல மாட்டாள். கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்த போதும் அவர்கள் தொழில் குடும்ப விஷயங்கள் பேசுகையில் செல்லும் அளவு அவள் அந்த அக்குடும்பத்துடன் ஒன்றி இருக்கவில்லை.

நேரம் ஆகியும் மிதுர்வன் வராமல் போக, அப்படியே படுத்து தூங்கியும் விட்டாள்!!!

ருத்ரா பாட்டியிடம் வெகு நேரம் பேசி இருந்து விட்டு சுந்தரத்திடம் நூறு முறைக்கும் மேலாக பாட்டியை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு கனத்த மனதுடன் ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு முறை ஸ்ரவந்தியை அழைக்க போனை எடுக்க, அதற்குள்ளாக அவள் செல்ல வேண்டிய ரயில் வரவே ஸ்ரவந்தியை தொடர்பு கொள்ளாமல் ரயிலில் ஏறி அமர்ந்து உறங்கியும் போனாள்.

அன்னை உறங்க போன பின்பும் தந்தையுடன் பேசி விட்டு மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு அழைப்பை முடித்து விட்டு மிதுர்வன் தன்னறைக்கு வருகையில் நல்லறிவு ஆகியிருந்தது. உறங்கி கொண்டிருந்த ஸ்ரவந்தியை எழுப்ப மனமின்றி அவனும் அப்படியே உறங்கி போனான்.

காலையில் ஐந்து மணிக்கு விழித்த ஸ்ரவந்தி உறங்கி விட்டதை நினைத்து பதறி மிதுர்வனை எழுப்ப முயல இவள் இரண்டு மூன்று முறை அழைத்தும் விழிக்காமல் உறங்குபவனை அதற்கு மேல் தொல்லை செய்ய மனமில்லை அவளுக்கு. தன் அலைபேசியை எடுத்து ருத்ராவை அழைக்க எண்ண, அவளிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

'ரயில் 6 மணிக்கு சென்னை வந்திடும் அண்ணி அண்ணாவை வர சொல்லிடுங்க'

அதை படித்தவள் அவசரமாக சென்று குளித்து வந்தாள். வேகமாக கிளம்பியவள் பையையும் போனையும் எடுத்துக் கொண்டு கீழே வர, அவளை ஆச்சர்யத்துடன் பார்த்த மதுமதி புன்னகையுடன் அவள் முகம் தடவி கேட்டார்,

"என்னம்மா சீக்கிரமே ரெடி ஆகிட்ட?"

"அது.. அத்தம்மா நான்.."

"என்னம்மா?! என்ன தயக்கம்?"

"கோவிலுக்கு போய்ட்டு வரேன்" ஒரு வழியாக வாயில் வந்த பொய்யை சொல்லிவிட்டு அவள் முழிக்க, ட்ரைவரை அழைத்து அவளை கூடி செல்லுமாறு பணித்து விட்டு உள்ளே சென்றார் மதுமதி. மெல்லியதாய் ஒரு உறுத்தல் இருந்த போதும் அவள் சொன்ன பொய்யை உண்மையாகும் பொருட்டு அடுத்த தெருவில் இருந்த முருகன் சன்னதியில் அவனை வணங்கி விட்டு ரயில் நிலையம் நோக்கி சென்றாள் ஸ்ரவந்தி.

அவளை ஒரு முறை பார்த்த போதும் எதுவும் சொல்லாமல் வண்டியை ஓட்டினார் ட்ரைவர். மணியை பார்த்தால் ஸ்ரவந்தி. 5.55 இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்று விடலாம் தான் ஆனாலும். இரவு தூங்கியதை எண்ணி அவள் மேலே அவளுக்கு கோபமாய் வந்தது.மனதிற்குள் தன்னையே திட்டி கொண்டிருந்தாள்.

"என்ன ஸ்ராவனி நீ இப்படியா தூங்கறது? ச்சை இப்போ பாரு.. பாவம் அந்த பொண்ணு தனியா வேற வர்ற.. சின்ன பொண்ணு வேற உன் அலட்சியத்தால் இப்போ பாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.