(Reading time: 9 - 17 minutes)

து அவளுக்கு எப்போதும் இருக்கும் ஒரு பழக்கம் தான் கொஞ்ச நாட்களை இப்படி தனக்குள் பேசுவது குறைந்து போய் இருந்தது. அதிலும் அவளை அழைக்கும் செல்ல பெயரான ஸ்ராவனி தான் அவள் பேசும் போதும் வரும். நீண்ட நாட்களுக்கு பின் எந்த உந்துதலும் இல்லாமல் அந்த பெயர் வந்ததை எண்ணி ஒரு நிமிடம் வியந்தவள் உடனே ஏதோ போல் உணர்ந்தாள்.

ஏனோ அந்த முருகன் சந்நிதியில் இருந்து வெளி வரும் போதிலிருந்தே ஏதோ ஒரு உறுத்தல். மகிழ்ச்சியும் அல்லாமல் துக்கமும் அல்லாமல்.. என்ன இது? அவளே வரையறுக்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் நல்லதாகவே நடக்க வேண்டும் முருகா. மனதிற்குள் ஒரு முறை வேண்டிக் கொண்டாள்.

ரயில் நிலையத்தின் வெளியே ட்ரைவர் காரை நிறுத்த, அவசரமாய் இறங்கி கிட்டத்தட்ட உள்ளே ஓடினாள். இதற்கு முன்னும் ஒரு முறை சென்னை வந்திருக்கிறாள். ரயில் நிலையம் ஒரு அளவுக்கு அவளுக்கு பரிச்சயமே!! ருத்ரா வரும் ரயில் அப்போது தான் பிளாட்பார்மை அடைய ஒரு மூச்செடுத்து கொண்டு ரயில் நோக்கி சென்றாள்.

எந்த பெட்டியில் இருந்து இறங்குவாள் என்பது தெரியாமல் இவள் வளமும் இடமுமாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருக்க, ட்ரையினில் இருந்து இறங்கிய கூட்டமும் கூலிகளின் கூட்டமும் என அவளை தள்ளி கொண்டு போக, அப்போது தான் ட்ரையினில் இருந்து இறங்கிய ஒருவனின் மேலே மோதி நின்றாள்.

"ஐயோ.. சாரிங்க.. ச்சே என்ன கூட்டம்" என அவள் சொல்லி முடிக்கும் முன்னே,

"ஸ்ராவனி?!!!!!" என அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் அந்த இளைஞன் அழைக்க, அந்த குரலில் ஸ்தம்பித்து நின்றாள் ஸ்ரவந்தி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

"அண்ணி நான் இங்க இருக்கேன்" என்று கத்தியபடி அவள் அருகில் கூட்டத்தின் நடுவில் அருகில் வந்த ருத்ரா அந்த புதியவனை கண்டு கொள்ளாமல் "வாங்க அண்ணி போலாம் அண்ணா எங்க வரலையா?" என்று வினவ,

அதிர்ச்சியுடன் வேகமாய் அவளை ஆராய்ந்தது அவன் பார்வை!! நெற்றி வகிட்டில் குங்குமம், முகத்தில் கொஞ்சமாய் நிம்மதி கழுத்தில் மாங்கல்யம்!!!!

"ஸ்ராவனி" அவன் அதிர்ச்சியுடன் முனுமுனுப்பது அவளுக்கு  தெளிவாய் புரிந்தது.

அவளுக்கும் அவனுக்கு மேலான அதிர்ச்சி..!! ருத்ரா அவள் கையை பற்றி முன் செல்ல ஸ்ரவந்தியும் அவளுடன் திரும்பி நடந்தாள். எட்டி அவள் கையை பற்றிய அவன் மெல்லிய குரலில் கேட்டான்.

"என்னை ஏமாத்திட்டியா ஸ்ரவந்தி?"

தொடரும்…

Episode # 05

Episode # 07

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.