(Reading time: 15 - 30 minutes)

ன்ன தம்பி கார்த்திக்கு? எப்படியிருக்க???' என்றவாறு அவர்கள் அருகில் வந்தார் அந்த மனிதர். வெள்ளை வேட்டி சட்டையில் தனக்கு சற்றுமே பொருந்தாத வகையில் கழுத்திலும் கைகளிலும் தடிமனான தங்கச்சங்கிலி மின்ன கார்த்திக்கை ஒரு ஏளன பார்வை பார்த்திருந்தார். அவரை சூழ்ந்தவாறு ஐந்தாறு எடுபிடிகள் வெள்ளையும் சோள்ளையுமாய் ஆரவாரத்தோடு நிற்பதை பார்த்தே யூகித்துவிடலாம் அவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்று!

அவர்களுடன் நகை கடை பொம்மை போல ஆடம்பர்மாய் அவரது மனைவி. 

அமைதியாய் அவரையே பார்த்திருந்தான் தீர்கமான பார்வையோடு!  

என்ன தம்பி அப்படி பார்க்குற?? என்னடா இவனுக்கு இங்கன என்னா வேலனு தானே பார்க்குரவ? அது ஒன்னுமில்ல..இதோ என் விட்டுகாரம்மாவ நம்ம மாவட்டத்தோட மகளீர் அணித்தலைவியா நம்ம கட்சி மேலிடம் அறிவிச்சிட்டாங்க... அதுதான் இந்த மதுர மீனாட்சிய பாத்து அவள போல இதோ இவளும் ஆட்சிக்கு வரனும்னு பேசிட்டு போகலாம்னு வந்தேன்!

ஏளனமான சிரிப்பு ஒன்று மட்டுமே வந்தது கார்த்திக்கிடமிருந்து!

என்ன தம்பி? சிரிப்பா இருக்கா? சிரி..சிரி... இன்னும் எத்தன நாளைக்கு நீயும் இப்படி சிரிக்கறனு நானும் பார்க்குறன்...இப்போவே நல்லா சிரிச்சிக்கோ! நான் வரட்டுமா?' என்று விட்டு விடு விடுவேன நடக்க... பத்து அடிக்கூட போகாமல் திரும்பியவர் நேராக கார்த்திக்கிடம் தான் விரைந்தார்.

ஆமா... நான் கேட்க மறந்துட்டேன் பாருப்பா...இங்க யாரு குடிய கெடுக்க வந்திருக்க? மதுரையில் யாருப்பா உன்னோட குறி? நம்ம மாவட்டத்துல நடந்துகிட்டாப்போல இங்கன இருக்க முடியாதுயா... ஏன்னா இங்க என்னை மாதிரி ஆளுங்க வாய் பேசறதவிட கைதான் அதிகமா பேசும்! அதனால அதை செய்யறேன்... இதை செய்யறேன்.... இவனுங்கள காப்பாத்தறேனு எதுலியா கால்லை வெச்ச... காலே இருக்காது... சொல்லிப்புட்டேன்! ஏதோ வியாபாரத்தை பார்த்தோமா... கல்யாணம் பண்ணி குடும்பம்.. குட்டினு இருந்தோமானு இல்லாம... சும்மா ஏழரைய இழுத்துவிட்டு...உன் குடும்பத்துக்கும் ஆபத்து வரவழச்சிக்கிட்டு... பா...வ...ம் இப்போ பாரு குடும்பத்தையும் என்கிட்ட இருந்து பாதுகாக்க முடியாம...வியாபாரமும் செய்ய முடியாம முழி பிதுங்கி நிக்கற! உன்னை பாக்கவே பாவமா இருக்குப்பா.... என்னை உன் அண்ணன் மாதிரி நினச்சிக்கோ... உனக்கு எதுக்குப்பா இந்த வீனான வேலை... நல்லா படிச்சிருக்க புள்ள... குடும்பத்தொழில் பார்த்தோமா... அம்மா அப்பா தம்பி தங்கச்சினு சந்தோஷமா இருந்தோமா.... எல்லா வழியிலையும் பணம் பண்ணோமா... லட்சணமா ஒரு பொன்னை பார்த்து கட்டினோமா.... நீயும் பாக்க அம்சமா இருக்கறதுனால ஒரு சினிமா நடிகையா பார்த்து கட்டுக்கிட்டு ஜாலியா இருப்பியா... அதவிட்டுப்புட்டு சனியன தூக்கி சட்டக்குள்ள போட்டுக்கற...

அதுவரை அமைதியாய் இருந்தவன் வாய் திறந்து... 'சரிங்க த..ண்ட...பா..ணீ...அண்ணா....நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்...' என்று கார்த்திக் நிறுத்தி நிதானமாய் கூற அதில் முன்னாள் அமைச்சர் தண்டபாணியின் பொறுமை காற்றில் கலந்தது.

டேய்... என்னையாடா தண்டம்னு சொன்ன??' என்று அவர் சட்டையை கையில் பிக்க போக... அதற்குள் சந்தோஷின் கை தண்டபாணியின் சட்டையில் இருந்தது. அவனின் மற்றோரு கை அவரின் கையை தடுத்து நிறுத்தியிருந்தான். அதற்குள் அமைச்சரின் எடுபிடிகள் சந்தோஷை பிடிக்க விரைந்தனர். 

விஷ்வா!! கையை எடு முதல்ல!' என்று ஒரு அதட்டல் போட்டான் கார்த்திக்.

அவனை முறைத்துக்கொண்டே கைகளை விலக்கிக்கொண்டான். அதற்குள் அந்த அடியாட்கள் அவனை நெருங்கி பிடித்திருந்தனர். அதுதான் விட்டுட்டானில்ல... என் தம்பி மேலயிருந்து கையை எடுங்கடா....' என்றான்.

என் மேலையே கை வெச்சிட்டயில்ல....பாத்துக்கறேண்டா உன்னை.... உன் குடும்பத்தை...ஒரு வழியாக்காம விடறதாயில்ல... முதல்ல இவன்...' என்று 

மிரட்டிவிட்டு அமைச்சர் திரும்ப... 'அண்ணே... என் குடும்பத்தை ஏதாவது பண்ணா... உன் குடும்பமும் தானே பாதிக்கும்...உன் குடும்பத்தை நீ பார்த்துக்கவேணாமா...' என்று அசால்டாய் கூறினான். துளியும் மிரட்டல் இல்லை அந்த குரலில்.

என்ன மிரட்டறியா?? என்னடா பண்ணமுடியும் உன்னால??? என் குடும்பத்து மேல கை வெச்சிடுவியா??

'ஐய்யையோ.. நான் எப்போ அண்ணே சொன்னேன்... நீ தானே அண்ணே சொன்னே.... உன்னை என் அண்ணன் மாதிரி நினச்சிக்கோனு... நீ எனக்கு அண்ணானா... என் குடும்பம் உன்னது இல்லையா... அதே மாதிரி உன்னோடது என் குடும்பம் தானே அண்ணே!' - துளிக்கூட மிரட்டும் தோணி இல்லை... ஆனால்... நக்கல் நையாண்டி ஏகத்துக்கும் கலந்த ஒரு வாய்ஸ்.

என்னடா?? நக்கலா?? - என்று திரும்பவும் சந்தோஷ் மீது கை வைக்க... அச்சோ.. தண்டபாணி அண்ணே... அவன விட்டுடூ... நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன்... இனிமே எதிலேயும் நான் தலையிடல... எங்கள விட்டுரூ...' அப்படீனு கேட்பேனு நினச்சியா..உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ...எனக்கு என் குடும்பத்தை எப்படி பாத்துக்கனும்னு தெரியும்...எனக்கு என் குடும்பமும் முக்கியம்...என் நாடும் முக்கியம்... ' என்று கூறிவிட்டு சந்தோஷின் கைபிடித்து ஏர்போர்ட் விட்டு வெளியே இழுத்து சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.