(Reading time: 15 - 30 minutes)

வர் கண்கள் இன்னும் கலக்கத்தை காட்ட, 'பாட்டி... கவலைப்படாதீங்க... அவ பத்திரமாதான் இருக்கா...அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல... கொஞ்சம் பிசியா இருக்கா... அவ்வளவு தான்... அதனால கவலைபடாதீங்க... சீக்கிரம் எழுந்து வாங்க... உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு!' என்று சொல்ல புன்னகையுடன் மீண்டும் உறங்க தொடங்கினார்.

ஆதியும் தேவாவும் ஆளுக்கு ஒரு பக்கம் முறிக்கிக்கொண்டு நிற்க, இருவரையும் அந்த இடத்தைவிட்டு தனியாய் அழைத்து சென்றான் கார்த்திக். 

நீங்க ரெண்டு பேரும் இப்போ வெளிய வரர்தா இருந்தா சமாதானமா வாங்க...இல்லையா... பாட்டி பக்கத்துல ஒரு பேட்டை போட்டு இவன கிடத்திடறேன்... நீயே அவனை பார்த்துக்கோ...சரியா??? சீக்கிரமா வெளிய வாங்க!!!' என்று வெளியே சென்றுவிட்டான்.

வெளியே வரும்போதே கலை மற்றும் சரசு அத்தை அவர் கணவன்மார்களோடு இருந்தனர். யாரையும் கருத்தில் பதியாது ஓரமாய் ஒரு இருக்கையில் போய் அமர்ந்தான். மொபைலை கையில் எடுத்து மீண்டும் அந்த வலைப்பூ பதிவை படித்துவிட்டு கண்மூடி அப்படியே சாய்ந்து அமர்ந்தான். அப்போதும் சந்தோஷின் கண்கள் தன் அண்ணனிடமேயிருந்தது! இவன் பார்வையின் திசையை பார்த்த சித்ரா சந்தோஷை உண்டு இல்லையேன செய்துவிட்டாள்.

என்னடா?? அண்ணாவ புதுசா பார்க்குற மாதிரி பாக்குற? என்ன விஷயம்?? 

என் அண்ணா... நான் பார்க்கறேன்! உனக்கு என்ன வந்துச்சு?

இன்னைக்கு தான் புதுசா பாக்கற மாதிரியில இருக்கு! என்ன விஷயம்... சொல்லித்தொலை!

புதுசாதான் பார்க்கறேன்! இந்த கார்த்திக் எனக்கு புதுசு தான்! எனக்கு மட்டுமில்ல... நம்ம எல்லாருக்குமே இவன் புதுசு தான்... இவன் அன்பு புதுசுதான்!

என்னடா கதை சொல்லுற??

கதையில்ல நவி..நிஜமாதான் சொல்லறேன்! 'இங்க நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க எல்லாரும் இருக்காங்க...ஆனாலும் ஏதோ ஒன்னு குறையாவேயிருக்குனு சொல்லறான்!' இப்போ என்ன சொல்லற???' என்றான் சந்தோஷ்.

டேய்ய்ய்ய்... நிஜமாதான் சொல்லறியா??

ஹே... நிஜமாதான் சொல்லறேன்! ஹி மிஸ்சஸ் ஹர் ஏ லாட்! என்ன நடந்தாலும் அண்ணியை இவர்கூட சேர்த்து வெச்சே தீருவேன்...' என்றான்.

டேய்...அண்ணா... இது நடக்குமாடா?? எனக்கு பிரச்சனை என்னனு புரியவேயில்ல... அண்ணிக்கு...நம்ம எல்லாரையும் நியாபகமிருக்குமா?? ஆனா நம்ம கூடதான் அவங்களுக்கு இருக்க பிடிக்கலையே! கார்த்திக் அண்ணாக்கூட அவங்க சேர்ந்துட்டா...அண்ணா நம்மைவிட்டு தனியா போயிடுவாங்களா??

லூசா நவி நீ?? வயசு இவ்வளவு ஆச்சே... கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?

ஏண்டா திட்டற?? நான் என்ன செஞ்சேன்??

லூசு மாதிரியில்ல பேசற... அண்ணாவும் அண்ணியும் சேர்ந்து வாழ்றது முக்கியமா?? இல்ல அண்ணா நம்மக்கூட இருக்கறது முக்கியமா??? கார்த்திக்... நீலா அண்ணி மாதிரி... ஆதி... மனோ அண்ணியையும் சேர்த்து வைக்கனும்!

முடியுமா விஷ்வா??

முடியும்!! முடியனும்!!! முடிச்சுக்காட்டறோம்! ஏதாவது யோசிப்போம்... நிச்சயமா ஒரு வழிக்கிடைக்கும்! 

இவர்கள் பேச்சு இவ்வாறு இருக்க...அங்கே கார்த்திக்கின் நிலை பரிதாபமாய் இருந்தது.

நான் எங்கனு போய் உன்னை தேடுறது நிலா... இப்படி ஒரு வலைப்பதிவ கொடுத்துட்டு எங்கடா போன... எங்கேயோ நல்லா இருக்கனு நினைவுல தானே நான் இருக்கேன்... இப்போ அதுவும் இல்லைனு ஆயிடுச்சு! என் உள்மனசு என்ன சொல்லுதுனா... இந்த கடத்தல் நாடகமே உன்னோட ஸ்கிரிப்ட் தானு தோணுது...ஏதோ பெரிசா பிளான் பண்ணி களத்துல இறங்கியிருக்க...அது ஜெயிக்காம வெளியில வரமாட்ட! நான் உன்னை புரிஞ்சிக்கிட்டது உண்மைனா...இது தான் நடந்திருக்கனும்!' என்று மனதில் உழன்றுக்கொண்டிருந்தான்.

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சரை பார்க்க அப்பாயிண்மண்ட் கேட்டிருந்தான் கார்த்திக். இப்போது அங்கிருந்து அழைப்பு வர தன் மோன நிலையிலிருந்து வெளி வந்தான். கேட்டிருந்த அப்பாயிண்மண்டும் கிடைத்துவிட்டது. வெற்றிக்கு உடனே அழைத்து தான் டில்லி வரும் தகவலை கொடுத்தவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விஷ்வாவுடன் டில்லி புறப்பட்டான்.

நான் வரலை கார்த்திக்! உன்கூட நான் வரலை... நான் இங்கேயே இருந்துக்கறேன்! உனக்கு நான் வேணும்னா நீ இங்கவா... இதுதான் என் வீடு... இதுதான் என் குடும்பம்... மல்லிமாவும் ராமுப்பாவும் இல்லாம நீ எங்கயிருந்து வந்த?? நீ எனக்கு வேணாம்!!! போங்க... இங்கயிருந்து போங்க!!" என்று அவன் நிலாபொண்ணு கூறிய வார்த்தைகளே காதில் ஓலித்துக்கொண்டிருந்தது.

பின் குறிப்பு:

நிறைய கதாப்பாத்திரங்கள் இருக்கறதுனால ரொம்ப குழப்பமா இருக்கு... சரியா நினைவு வைக்க முடியலனு நினைக்கறவங்களுக்காக...

சூர்யப்பிரகாசம், சிவப்பிரகாசம் அண்ணன் தம்பி இரட்டையர்கள்.

சூர்யப்பிரகாசம் தாமரை தம்பதியின் மக்கள் -  ராமநாதன், ராமலிங்கம், ராமக்கிருஷ்ணன் மற்றும் கலையரசி.

ராமநாதன் - மல்லிகா:

கார்த்திக் சிவநாதன், சஞ்சய் சுவாமிநாதன், சந்தோஷ் விஷ்வநாதன் மற்றும் சித்ர நவிரா.

ராமலிங்கம் - ரோஜா:

ஆதித்யன் தேவநாதன், மலர்விழி மற்றும் கயல்விழி.

ராமக்கிருஷ்ணன் - பங்கஜ்:

வியன் வைத்தியநாதன், சங்கமித்ரா, கவின் மலர்.

கலையரசி - சரவணன்:

தேன்மொழி, அன்புச்செல்வன், நறுமுகை

சிவப்பிரகாசம் - செண்பகவள்ளி மக்கள்: சுந்தரமூர்த்தி, லஷ்மி, சரஸ்வதி, திருநாவுக்கரசு, பார்வதி.

சுந்தரமூர்த்தி - தெய்வநாயகி:

வைபவ் வெற்றிச்செல்வன், வசந்தி

லஷ்மி - ராமசந்திரன்:

நீலாம்பரி மதிவதனி, அருள்மொழி வர்மன்

சரஸ்வதி - வேதமூர்த்தி:

எழிலரசி, இளவழகன்.

திருநாவுக்கரசு - ஆனந்தி:

நித்திலவள்ளி, வினய் வசீகரன்

பார்வதி - பரமேஸ்வரன்:

தேவமனோகரி, தேவமஞ்சரி

தொடரும்...

Episode # 03

Next episode will be published as soon as the writer shares her update.

{kunena_discuss:1000}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.