(Reading time: 15 - 30 minutes)

முன்னாள் அமைச்சர் தண்டபாணி கார்த்திக்கை தடம் இல்லாமல் ஆக்குவதற்கும் சேர்த்து மீனாட்சியிடம் ஆசி பெற சென்றார்.

பாட்டி இருக்கும் மருத்துவமனை அடைய கிட்டத்தட்ட இருபது நிமிடம் ஆனது. அந்த இருபது நிமிடமும் வைத்தக்கண் வாங்காமல் கார்த்திக்கையே 'ஆ'வேன பார்த்து வந்தான் சந்தோஷ். அவன் அதிர்ச்சியாய் பார்த்திருப்பது அறிந்தாலும் ஒன்றும் பேசாமல் வந்தான் கார்த்திக். அவனுள் அலை அலையாய் எண்ணங்கள்... கார் செல்லும் வழித்தடத்தில் நடந்த கடந்த காலத்தின் நினைவலைகள்... இரண்டின் பாரம் தாங்காமல் கண்மூடி அமர்ந்திருந்தான். மருத்துவமனை வாசலில் இறங்கும் போதே தியாகராஜன் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்தான். இவர்களை பார்த்துவிட்டு விரைந்து வந்தான் தியாகு. 

மச்சான்... ஐசியூ இந்த பக்கம் இருக்கு... இப்படி வாங்க..' என்று அழைத்துக்கொண்டு சென்றான். சந்தோஷின் அந்த ஆச்சர்ய நிலை இன்னும் மாறவில்லை. அவன் வேப்பிலை அடித்தது போல் நிற்க...அதை பார்த்த தியாகு, என்ன மச்சான் இப்படி இருக்கீங்க... பாட்டிக்கு எதுவும் ஆகாது வாங்க..' என்று கூறிவிட்டு முன்னே செல்ல.. நடையில் கொஞ்சம் வேகம் குறைத்து விஷ்வாவுடன் இணைந்து நடந்தான் கார்த்திக். 

டேய்... விஷ்வா... இப்போ எதுக்கு இப்படி ஒரு பாவனை முகத்துல??? பாக்க சகிக்கல... தயவு செய்து அங்க நடந்ததுல இருந்து வெளியில வா... நம்ம வீட்டு ஆளுங்க முன்னாடி என்னை காட்டிக்கொடுக்காதே...' என்று புன்னகைத்த கார்த்திக்கின் கண்களை உற்று நோக்கினான் சந்தோஷ். கார்த்திக்கின் உதட்டில் இருந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை! அந்த நொடி அவன் தண்டபாணியிடம் கூறிய வார்த்தைகள் "எனக்கு என் குடும்பத்தை எப்படி பாத்துக்கனும்னு தெரியும்...எனக்கு என் குடும்பமும் முக்கியம்...என் நாடும் முக்கியம்..." என்பது அடி மனதில் தாக்க தன் அண்ணன் கார்த்திக்கை தாவி அனைத்துக்கொண்டான் அவன் தம்பி விஷ்வா! 

ஐசியூ சென்றடைந்த போது பாட்டி கண்விழித்திருந்தார் ஆனால் பேசக்கூடிய நிலையில் இல்லை! ஒட்டு மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது. தனது தாத்தா சூர்யபிரகாசம் தனது இரட்டையரான தம்பி சிவப்பிரகாசத்திற்கு தோள் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் தாமரை பாட்டியும் இருந்தார். இன்னோரு புறம்... தனது அப்பா ராமநாதன் சகோதரர்கள் ராமலிங்கம், ராமகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசு படை சூழ நின்றிருந்தார். மல்லிகா, ரோஜா, பங்கஜ், தெய்வநாயகி, ஆனந்தி என எல்லா அம்மாக்களும் ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருக்க...ஆதித்யா ஐசியூவின் வாசலிலேயே நின்றிருந்தான்... துளியும் அசையமாட்டேன் என்றிருந்தது தோற்றம்! 

சஞ்சய், வியன், இளவழகன், வினய், சித்ர நவிரா, கயல்விழி, சங்கமித்ரா, கவின் மலர், வசந்தி, எழிலரசி, நித்திலவள்ளி, தேவமஞ்சரி என்று சிறியவர்கள் ஒரு புறம் இருந்தனர். ஏதோ குறைவது போல இருந்தது. மலர்விழியும் மனோகரியும் காணவில்லை என்று நினைக்கும் போதே தூரத்தில் அவர்கள் வந்துக்கொண்டிருந்தனர். அப்போதும் ஏதோ ஒன்று அவன் குடும்பத்தில் குறைவதாய் இருந்தது. என்னவேன்று தெரியாமல் மனது சஞ்சலமாய் உணர்ந்தான். அருகிலிருந்த சந்தோஷ் அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

என்ன அண்ணா?? என்ன ஆச்சு?? எல்லாரும் அங்க இருக்காங்க வாங்க போகலாம்..' என்று இழுக்க

டேய்.. கலை அத்தை... சரசு அத்தை... லஷ்மி அத்தை அவங்க தான் இங்க இல்ல... ஆனா நம்மோட இந்த குடும்பத்துல ஏதோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கு... ஆனா என்னனுதான் தெரியல...' என்றான்.

டேய்... இது என்னோட குடும்பம்னு உனக்கு உணர்த்தின உன் சரி பாதிதான் இங்கேயில்ல.. நீ அவங்கள தான் மிஸ் பண்ணறனு தான் உன் மரமண்டைக்கு தெரிய மாட்டேங்குது!' என்று மானசீகமாய் மனதிற்குள் திட்டினான்.

பாட்டியை பார்க்க கார்த்திக்கும் சந்தோஷும் உள்ளே விரைய தேவமனோகரியும் மலர்விழியும் அங்கே வந்துவிட்டனர். ஐசியூவின் வாசலை கடக்கும் போது ஒரு நொடி... ஒரே நொடி மட்டும் ஆதித்யன் தேவமனோகரியின் கண்கள் சந்தித்து மீண்டது!

சில நிமிடங்களிலேயே சந்தோஷும் மலர்விழியும் வெளியே வந்துவிட்டனர். விடுவிடுவென வெளி வந்த கார்த்திக் ஆதியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றான். உள்ளே தேவமனோகரி அமர்ந்திருக்க அவள் அருகில் அழைத்து சென்று நிறுத்தினான். அப்போது தான் விழித்திருந்த செண்பா பாட்டி அவர்களை ஜோடியாய் பார்த்ததில் பரம ஆனந்தம். கார்த்திக்கை தாண்டி அவர் கண்கள் யாரையோ தேடுவதை உணர்ந்தவன், பாட்டியின் கைபிடித்து மெல்ல புன்னகைத்தான். 

உங்க பேத்திய தானே தேடறீங்க... வந்திடுவா பாட்டி.... நாளைக்கு நிச்சயம் வந்திடுவா...நேரில முடியுதோ இல்லையோ... ஒரு வாட்டி உங்ககிட்ட பேசிடுவா... சரியா?? 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.